அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, October 26, 2011

உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு நகராட்சிகள், கணிசமாக பதிமூன்று பேரூராட்சிகள் என்று கைப் பற்றி இருந்த போதிலும்  தேசிய கட்சியான பாரதிய ஜனதாவின் வாக்குவங்கி   சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி 2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் 2.34 சதவீத ஓட்டுக்களையும் பெற்றது. ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 1.35 சதவீத வாக்குகளை மட்டும் அக்கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம் !!!

Tamil_News_large_337661.jpg
சென்னை : "ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.

இன்றே தயாராகுங்கள் இலவச பயிற்ச்சிக்கு


தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பயன்பெறும் வகையில் பலவகையான சலுகைகளும் வகுப்புகளும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற சலுகைகளை பற்றியும் வகுப்புகளை பற்றியும் நம் முஸ்லீம் சமுதாயத்தின் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவைகளை நமது சமுதாய மக்கள் உபயோக படுத்துவதில்லை.இது போண்ற சலுகைகளை உபயோகபடுத்தாமல் 8வது முடித்தால் பாஸ்போர்ட் எடுத்து அரபு நாடுகளுக்கு சென்று அற்ப்ப ஊதியத்தில் குடுப்பத்தை பிரிந்து கஷ்ட்பட்டு கொண்டு இருகின்றனர். ஆனால் இலவசமாக வழங்கபடும் இது போண்ற பயிற்ச்சிகள் மூலம் இந்தியாவிலேயே நம்மால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடிகின்றது என்பது அரபு நாடுகளில் படிப்பறிவில்லாமல் கஷ்ட்டபடும் எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்.??

Friday, October 21, 2011

இந்திய ஹஜ் யாத்ரிகர்களில் 16 பேர் இறப்பு; ஒரு பெண்குழந்தை பிறப்பு!

இந்தியாவிலிருந்து இவ்வாண்டு புனித ஹஜ்ஜுப் பயணத்திற்காக  இதுவரை 57,805 யாத்ரீகர்கள் வந்துள்ளதாகவும், அவர்களில் 16 பேர் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இறப்பைத் தழுவியதாகவும், சவூதி அரேபிய அரசு வெள்ளியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்வானி, விஜயசாந்தி சந்திப்பு: பாஜகவில் சேருகிறாரா?


ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொள்ளும் பாஜக மூத்தத் தலைவர் அத்வானியை, ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான விஜயசாந்தி சந்தித்தார். பாஜக மூத்தத் தலைவர் அத்வானியின் ரதயாத்திரை நேற்று பிராக்நகருக்குவந்த போது, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, அவரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் காவல்துறையும் ஊடகங்களும் : நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கண்டனம்





புது டெல்லி : "நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார்.



ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "முஸ்லீம்களை குண்டுவெடிப்புகளுக்குக் காரணகர்த்தாவாக சித்தரிக்க்கும் ஊடகங்களும் காவல்துறையும் அப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினார். தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில் நமது நாட்டின் காவல்துறைக்குத் திறமை இல்லாததாலேயே தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக கூறினார். 

கூடங்குளம் போராட்டம் தீவிரம்: அணுமின்நிலைய பணிகள் முடக்கம்!

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் நடக்கும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று 3வது நாளாக பெருமணல் கிராம மக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி அணுமின்நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் இன்றும் வேலைக்குச் செல்லவில்லை. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி இடிந்தகரை மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

லிபிய முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொலை !


சிர்தி (லிபியா): லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பதுங்கு குழியில் மறைந்திருந்த அவர் மீது புரட்சி படை - நேட்டோ படை அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது.

Wednesday, October 5, 2011

குரூப்-2 தேர்வு முடிவு 7ம் தேதி வெளியீடு!!!



Tamilnadu civil services group 2 exam resultsகுரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணைச் செயலாளர் மைக்கேல் ஜெரார்டு நேற்று வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த சார்நிலை பணி (குருப் 2) எழுத்து தேர்வு உதவி தொழிலாளர் நல அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தணிக்கை ஆய்வாளர், வருவாய்த் துறையில் உதவியாளர் உட்பட, பல்வேறு துறைகளில் 1,628 குரூப்-2 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2 முதல் மார்ச் 28ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் இறுதி தேர்வுப் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து அறிவித்துள்ளார்.

‘கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு.





ஸ்ரீநகர்:2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாரளுமன்ற தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு, சவுகத் குரு, சவுகத் குருவின் மனைவி அப்ஷான் குரு மற்றும் டெல்லி பல்கலைகழத்தின் ஆசிரியர் அப்துர் ரஹ்மான் கிலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் உச்சநீதி மன்றம் அப்சல் குருவின் மரண தண்டனையை உறுதி செய்தும், ரஹ்மான் கிலானி மற்றும் அப்ஷான் குருவை விடுதலை செய்தது.