மேலே உள்ள எண்களை பார்த்தால் உங்களுக்கு தலை கண்டிப்பாக சுற்றும். இந்த பணம் இந்திய நாட்டில் உள்ள குப்பனுக்கோ சுப்பனுக்கோ சொந்தம் இல்லை. வெறும் 80 ஆயிரம் இந்தியர்களுக்கு சொந்தமான பணம். பத்திரமாக உள்ள இடம் ஸ்விஸ் வங்கி தான்.
கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அந்நிய வங்கிகளில் இந்தியர்கள் ஒளித்து வைத்திருக்கும் கள்ளபணம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. 2006ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 64லட்சம் கோடி ரூபாயை இந்தியப் பெரும் பணக்காரர்கள் அங்கு பதிக்கி வைத்திருந்தனர். 2008ஆம் ஆண்டில் சுமார் 92 லட்சம் கோடியைத் தண்டிவிட்டது. இந்த புள்ளி விபரங்கள் எப்போதுமே உறுதிப்படுத்தப்படாதவையாகவே இருந்தாலும், எந்த நாட்டு அரசும் இந்தப் புள்ளி விபரங்களை மறுத்ததில்லை. ஸ்விஸ் வங்கிகளும் இது குறித்து எந்த மறுப்பு அறிக்கையையும் வெளியிட்டவில்லை.
இந்த பணம் எப்படி சேர்க்கப்பட்டது தெரியுமா? இந்திய நாட்டில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியை சுரண்டியும், முறைசார தொழிலாளிக்கு தெரியாமல் உழைப்பை சுரண்டியும், கமிஷன், லஞ்சம், வரி ஏய்ப்பு பல்வேறு முறைகேடுகள் மூலமாக சேர்க்கப்பட்டது. இது வெறும் புள்ளி விபரம் தான். உண்மை கணக்கு வங்கி சொன்னால் மட்டுமே நாம் அறியமுடியும்.
நிலமை இவ்வாறு இருக்க, நமது ஆட்சியாளர்கள் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் போது கஜனா காலி என்று
ஏற்கனவே ஆட்சி செய்தவர்களை குறை சொல்லிவிட்டு உலக வாங்கியிடமோ அல்லது IMFயிடமோ, இல்லை வளர்ந்த நாடுகள் ஆனா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகளிடம் பிச்சை பாத்திரத்தை நீட்டுவது.
ஏற்கனவே ஆட்சி செய்தவர்களை குறை சொல்லிவிட்டு உலக வாங்கியிடமோ அல்லது IMFயிடமோ, இல்லை வளர்ந்த நாடுகள் ஆனா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகளிடம் பிச்சை பாத்திரத்தை நீட்டுவது.
பணத்தை எந்த நாடும் இலவசமாக தருவதில்லை. அவர்களுக்கு வட்டி மட்டும் குடுத்தால் போதும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், இதுவரை கடன் குடுத்த எந்த நாடும் காரார்ராக கடனையும், வட்டியையும் கேட்டு மிரட்டியதில்லை. அவ்வப்போது அறிக்கைகளும், எச்சரிக்கைகளும் வெறும் காகித அம்புகள் வந்து விழும்.
வேற என்ன தான் அவர்கள் கேட்பார்கள்? உங்கள் நாட்டில் வியாபாரம் செய்வதற்கு உள்ள தடையை நீக்குங்கள். தொழில் தொடங்குவதற்கு உண்டான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தாருங்கள். முடித்தால் நிலம், மின்சாரம், ஏற்றுமதிக்கு வரி விளக்கு, மூலதன வரி அறவே ரத்து, தொழிற்சங்க உரிமை மறுப்பு, குறைந்த கூலிக்கு ஆட்கள். இதுபோதாத கொள்ளை அடிப்பதற்கு. ஒருபுறம் கடனை காட்டி அரசு கூடுதலாக வரியை விதிக்கும் மறுபுறம் வெளிநாட்டு நிறுவங்கள் இந்தியர்களை சுரண்டிக் கொண்டு இருக்கும். பணக்காரன் மேலும் பணம் சேர்ப்பன், ஏழை இன்னும் ஏழையாக்கிக் கொண்டு இருப்பான்.
இந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதம் மூலம் பல சாதனைகளை நாம் நிகழ்த்த முடியும்.
நமது தலையில் சுமத்தபட்டிருக்கும் அந்நிய கடனை முழுவதும் அடைத்த பிறகும் கூடுதலாக 12 அல்லது 13 மடங்கு நிதி இருக்கும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 49 லட்சம் கோடி ரூபாய். இதை விட இருமடங்கு அதிகமான பணம் ஸ்விஸ் வங்கிகளில்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 49 லட்சம் கோடி ரூபாய். இதை விட இருமடங்கு அதிகமான பணம் ஸ்விஸ் வங்கிகளில்.
இந்த இரண்டை மட்டும் நான் இங்கே எழுதியிருக்கிறேன்,
No comments:
Post a Comment