பாஜக தலைவர் எல்.கே.அத்வானிக்கு 2008 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை என்டிடிவி (NDTV) தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியுள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கக்கூடிய அளவுக்கு அப்படி என்ன பெரிதாக சாதித்துவிட்டார் அத்வானி என்பது குறித்து மூளையைக் கசக்கிக் கொண்ட சித்தார்த் வரதராஜன்(இந்து நாளிதழின் ஆசிரியர் குழுவைச்சேர்ந்தவர்) நினைவுக்கு வந்த பத்து சாதனைகளை தனது வலைப்பதிவில் பட்டியலிட்டுள்ளார். அவற்றை நாமும் தெரிந்து கொள்ளலாம்.
* 1992 ஆம் ஆண்டில் அவர் கண்ணெதிரே அரங்கேற்றப் பட்ட பாபர் மசூதி இடிப்பு சதிச்செயலுக்கு உடந்தையாக இருந்தது.
* 1999ல் ஐ.சி 814 விமானக்கடத்தல். மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகள் ஜஸ்வந்த் சிங் துணையோடு ஆப்கனுக்கு விமானத்தில் அழைத்துச்செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்டது.
* 2000 ஆண்டில் சிட்டி சிங்போராவில் தீவிரவாதிகளால் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது.
* 2003 மார்ச் மாதத்தில் நாடிமார்க்கில் காஷ்மீர் பண்டிட்டுகள் கூட்டாகப்படுகொலை செய்யப்பட்டது.
* 1999ல்அமர்நாத் யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட முதல் பயங்கரவாதத்தாக்குதல்.
* டிசம்பர் 2001ல் நாடாளுமன்றக்கட்டிடத்தின், மீது நடைபெற்ற தாக்குதல்.
* 2002 ஆம்ஆண்டில் கோத்ராவிலும், குஜராத்திலும் முஸ்லிம்கள் படுகொலை.
* 2002 ஆம் ஆண்டில் அஹமதாபாத் அக்ஷர்தாம் மற்றும் ரகுநாதர் ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள்.
* டெஹல்கா நிறுவனம் மற்றும் இப்திகான் கிலானி மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்.
* 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் தூக்குத்தண்டனை குற்றவாளிகள் சமர்ப்பித்திருந்த கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்துவிட்டு பயங்கரவாதி அப்சல் குருவை இன்னும் ஏன் தூக்கில் ஏற்றவில்லை என்று காங்கிரஸ் அரசுக்கு எதிராக கேள்விக்கணைகளைத் தொடுத்து வருவது.
ஆஹா! அத்வானி அல்லவா மகத்தான சாதனையாளர். அத்வானிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இந்த பத்து சாதனைகள் போதாதா? இதேஅடிப்படையில் நரவேட்டை நரேந்திர மோடிக்கும் அடுத்த ஆண்டில் விருது வழங்கலாம் என்று நாம் பரிந்துரைக்கலாமா
No comments:
Post a Comment