Thursday, February 19, 2009
உலமாக்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு
சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரசாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்காக, "உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்' அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பு: ஆதிதிராவிடர்களுள் மிக பின்தங்கியுள்ள அருந்ததியினரின் முன்னேற்றத்திற்காக, தனி உள் ஒதுக்கீடு வழங்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஜனார்த்தனத்தை கொண்ட ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இந்த முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட முன் வடிவு இந்த வரவு- செலவு திட்டக் கூட்டத்திலேயே கொண்டு வரப்படுமபள்ளி வாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரசாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்காக, "உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்' அமைக்கப்படும். சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளும், உணவு சமைக்கும் பணியாளர்களும் புகையால் பாதிக்கப்படாமல் இருக்க காஸ் அடுப்பு, பிரஷர் குக்கர் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் 224 லட்சம் செலவில் மேலும் 350 சத்துணவு மையங்களுக்கும், 2,000 குழந்தைகள் மையங்களுக்கும் இவை வழங்கப்படும். மொத்தமாக சத்துணவு திட்டத்திற்கு 830 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்காக இந்த வரவு - செலவு திட்டத்தில் 176 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment