அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 17, 2009

தமிழக அரசு தரும் இலவச வேலைவாய்ப்பு பயிற்சிகள்!


சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், 'ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி.(டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?

விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?

மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.

சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724.

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

ஆதி திராவிடர்கள், பழங்குடியினத்தவருக்காக இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை மத்திய தொழிலாளர் நலத் துறை நடத்துகிறது. மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், 27 வயதுக்கு உள்பட்டோர் இதில் பங்கு பெறலாம்.

தொடர்புக்கு:

ஆதிதிராவிட, பழங்குடியின பயிற்சி வழிகாட்டு மையம், மாவட்ட வேலைவாய்ப்பக வளாகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, மூன்றாவது மாடி, சென்னை -600 004. தொலைபேசி: 2461 5112.

விமானப் பணிப்பெண் ஆவதற்குப் பயிற்சி

விமானப் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தொழிலில் இப்போது லாபம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்நிலையில், இத்தொழிலில் வேலைவாய்ப்பும் விரிவடைந்து கொண்டே வருகிறது. விமானப் பணிப் பெண் வேலையில் சேர்ந்தால், நல்ல ஊதியமும் உண்டு.

இந்நிலையில், ஆதி திராவிட பெண்களுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் - வீட்டுவசதிக் கழகம் (தாட்கோ) மூலம் விமானப் பணிப்பெண் வேலைக்கான பயிற்சி தரப்படுகிறது. ஓராண்டுக்கான இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இதில் சேரலாம். 18 வயது முதல் 24 வயது வரையில் இருக்க வேண்டும். 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும்.

சரளமாகப் பேச வேண்டும். அழகான தோற்றம் தேவை.

இது குறித்து அவ்வப்போது விளம்பரங்களைத் தாட்கோ நிறுவனம் வெளியிடும். விமானப் பணிப் பெண் பணியில் சேருவதற்குத் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஏர் ஹோஸ்டஸ் அகாதெமி (ஆஹா) என்ற கல்வி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேச அளவில் தேர்வுகளை நடத்தும் சி.ஐ.இ. நிறுவனத்துடன் இணைந்து "ஆஹா' ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது.

இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 நகரங்களில் மொத்தம் 18 கிளைகள் இதற்கு உண்டு. அவற்றில் படித்து ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெறுகின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தேர்வு மையம் நடத்தும் படிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

150 நாடுகளில் இப்படிப்பின் சான்றிதழ்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி.

ஏவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி, டிராவல்ஸ் அண்ட் டூர் என்ற துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசு அளிக்கிறது. வேலை தேடும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திறன்களை வளர்ப்பதற்கு இப்பயிற்சிகள் பெரிதும் உதவும். இதன்படி எலெக்டிரிகல் டெக்னீசியன், டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி தரப்படும்.

எலெக்ட்ரிகல் டெக்னீசியன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றுகளையும் அவற்றின் நகல்களையும் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையையும் எடுத்து வர வேண்டும்.

முகவரி:
தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல்
டிரெய்னிங் சென்டர், 42/25, ஜிஜி காம்ப்ளக்ஸ்,
2-வது தளம் (விஜிபி அருகில்), அண்ணா சாலை, சென்னை-2. தொலைபேசி : 2852 7579, 2841 4736.
செல்: 98401 16957.

தகவல்: சகோதரர் இம்ரான்

No comments: