அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, April 17, 2009

அந்த கைட் சொன்ன வார்த்தை!!!









அல்லாஹ் ஏக இறைவன் என்பதும்,அவன் அனுப்பிய தூதர்களும்,வேதங்களும் உண்மைதான் என்பதும் (சத்தியமான ஒரு உண்மை என்பது )சிந்திக்கும் அனைவரும் அறியும் உண்மை.அந்த ஏக இறை அல்லாஹ்,இந்த உலகத்தை பல ஆச்சரியங்கள்,அற்புதங்கள் கொண்டு படைத்துள்ளான்.குரான் நெடுகிலும் நாம் இதைக் காணலாம்.

அல்லாஹ்வின் அற்புதங்கள் கண்டு,அந்த படைப்பாளனின் புகழை நாம் துதி செய்து,ஈமானை அதிகரித்துக்கொள்ளவேண்டும்.

நம் சகோதரர்கள் பலர் ஊரிலிருந்தாலும்,வெளிநாட்டில் இருந்தாலும் பல சுற்றுலா சென்று,அந்த விஷயத்தை நம் அதிரை எக்ஸ்பிரசில் பகிந்துகொண்டது உண்டு,அதேபோன்று சென்ற வாரம் சிலர் லேக் தாஹு (கலிபோர்னியா)சென்று அல்லாஹ்வின் படைப்பின் அத்தாட்சிகளை கண்டு வியந்தனர்.அதேபோன்று சிலர் சாண்டா குரூஸ் (கலிபோர்னியா)சென்று வந்தனர்.

மிஸ்டரி ஸ்பாட் என்று அழைக்கப்படும் இங்கு என்ன ஆச்சரியம் என்றால்,புவி ஈர்ப்பு விசை உலகில் எங்கும் சரியாக இருக்கும்,ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக இருக்கிறது.அந்த குறிப்பிட்ட இடம் சென்ற உடன் நாம் நேராக நின்று கொண்டிருந்தாலும்,நம்மை கீழே விழுவதுபோல் சாய்த்து விடுகிறது.ஸுப்ஹாநல்லாஹ்.

அதே போன்று,ஒரு பந்தை நாம் கீழ் நோக்கி செலுத்த,அது மேல் நோக்கி வருகிறது.(சாதாரணமாக பந்தோ,அல்லது எதுவுமோ கீழ்நோக்கி வரும்)இப்படி பல விஷயங்கள் குறித்து விளக்கியும்,செய்தும் காட்டிய கைட் கடைசியில் சொன்னார்.
"இப்படி பல கூற்றுக்கள்,அனுமானங்கள்,பல ஆராய்ச்சியாளர்கள் இந்த இடம் குறித்த ஆச்சரியங்கள் சொன்னாலும்,இதுவரை யாராலும் காரணம் கண்டுபிடித்து சொல்லமுடியவில்லை.இது இறைவனின் அற்புதம்,அதைத்தான் சொல்ல முடியும்.,ஒன்லி காட் நோஸ் பெஸ்ட்."
ஸுப்ஹாநல்லாஹ்.

No comments: