Saturday, April 18, 2009
சீரழியும் சகோதரத்துவம்
சீரழியும் சகோதரத்துவம் ; இந்த உலகில் வசிக்கின்ற மனிதர்கள் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட மக்களாக இருந்தாலும் சரி. அவர்கள் ஒரு விஷயத்தை நேசிக்கிறார்கள். உடல்நலம், ஆரோக்கியம். எல்லோரும் நலமுடன் இருக்கவேண்டும,; எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நோய், நொடியில்லாமல் சுகமாக வாழவேண்டும் என்று எல்லா மனிதர்களுமே ஆசைப்படுகிறார்கள். ஆனால், ஆரோக்கியத்திற்காக நாம் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? என்பதைப் பற்றி டயட்டீஷpயன்ஸ் மருத்துவர்கள் பல குறிப்புகளைத் தருகிறார்கள். டயட்டீஷpயன் எனப்படும் ஒரு பிரிவே மருத்துவத்தில் உள்ளது. உடலை கட்டுப்பாட்டில் எப்படி வைத்துக் கொள்வது. என்னென்ன உணவுகளை நாம் உண்ணலாம், ஒரு நாளைக்கு என்னென்ன உடற்பயிற்சி மேறn; காள்ள வேண்டும், நம்முடைய உடலில் தேவையில்லாத கொழுப்பு சேகரிகக் hமல் இருப்பதற்கு என்னென்ன பத்தியங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலே அதற்காக கொடுக்கப்படுகின்றது. உடல் நலத்திற்கு ஆசைப்படுகின்ற அனைவருமே அந்தப் பட்டியலை கடைபிடிக்கிறார்களா? கடைபிடிக்க முடிகின்றதா? என்றால் கிடையாது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக முயற்சி செய்கின்ற மக்களும் தன்னுடைய உடல ; நிலையை நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் கவனமாக இருக்கின்ற மக்களும் மிகவும் குறைவாகவே உள்ளனர். இந்த உடல் ஆரோக்கியத்தைப் போலத்தான் உம்மத்தினுடைய ஆரோக்கியமும் இருக்கின்றது. நம்முடைய உம்மத் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அடிதடி சண்டைகள் இல்லாமல், கருத்து வேறுபாடுகள் இல்லாமல், எல்லோரும் ஒன்றாக, ஒரே குறிக்கோளுடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படாத முஸ்லிம்களே இல்லை என்றுகூட சொல்லலாம். எல்லா முஸ்லிம்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனாலும் அது சாத்தியமாவது கிடையாது. சாத்தியமாவதில்லை. ஏன்? என்ன காரணம்? ஏனென்றால், உம்மத் ஒற்றுமையாக இருக்க ஆசைப்படுகிற நாம் அதற்காக கொஞ்சமும் கஷ;டப்படுவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால,; இல்லவே இல்லை என்றும் சொல்லலாம். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அதற்காக ஒரு சிறு துரும்பைக் கூட எடுதது; மறுபக்கம் வைப்பதற்கு ஒரு சிறு முயற்சி செய்வதற்கு கூட நாம் தயாராக இல்லை. அதனுடைய விளைவைத் தான் நாம் இன்று சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அடி தடி, கருத்து வேறுபாடுகள், சண்டைகள், பிளவுகள், தொடர்ந்து கொண்டே போகின்றன. சமூகம ; நாளுக்கு நாள், நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து பிளந்து போய்க் கொண்டேயிருக்கின்றது. மரத்தைக் கிளைகள், கிளைகளாக வெட்டுகிறார்கள். கிளைகளை குச்சிகளாக முறிக்கிறார்கள். அந்தக் குச்சிகளையும் தீக்குச்சிகளாக செய்கிறார்கள். மரம ; ஒன்றாக, இரண்டாக காம்பாக முறிந்து கிளைகளாகின்றது. அதன் பிறகு துண்டு துண்டாக சிதறுகின்றது. தீக்குச்சிகளாகவும் வெறும் குச்சிகளாகவும், பல் குத்தும் குச்சிகளாகவும் ஆகிவிடுகின்றது. அப்புறம் அதனால் எந்த பயனும் கிடையாது. பயன் தருகின்ற ஒரு மரம், சாதாரண பல் குத்தும் குச்சிகளாக மாறி விடுகின்றது. இந்த உம்மத்தினுடைய நிலைமை இப்படிப்பட்ட ஒரு படுவீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது. சர்வ சாதாரணமாக நம்முடைய கருத்தை ஒருவர் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலோ, நாம் இருக்கும் ஓர் அமைப்பின் நோக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலோ அவரைத் தரக்குறைவாக பேசுகிறோம். புறம் பேசுவது, கோள் மூட்டுவது, அவதூறு சொல்வது எல்லா வகையான குற்றங்களையும் நாம் இன்று செய்கிறோம்.இல்லையா? அடுத்தவர்களை விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில்!! நவீன உலகைப் பார்த்தோம் என்றால், ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒரு புதுப் புது வார்த்தைகளை கண்டுபிடித்துத் தருகிறார்கள். இன்றைக்கு வட்டிக்கு எத்தனையோ புதிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒருவனை பற்றி புறம் பேசுவதற்கு, ஒருவனைப் பற்றி கோள் மூட்டுவதற்கு, ஒருவனைப் பற்றி அவதூறு செய்தியை பரப்புவதற்கு ஒரு புதிய வார்த்தை 'விமர்சனம்'. அவரைத் திருத்துவதற்காக அவரை விமர்சிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு நாம் என்னென்ன பாதகங்களை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இன்றைய நாட்களில் தினசரி பத்திரிக்கைகளில் எலக்ட்ரானிக் மீடியாக்களில், பிரிண்ட்டிங் மீடியாக்களில் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் என்று சொல்லிக் கொண்டு அடுத்தவர்களைத் தாக்கிப் பேசுவது, அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய பணி சரியில்லை என ஆரம்பித்து அவர்களைப் பற்றி அவதூறு சொல்வதைத் தான் நாம் இன்று இஸ்லாமியப் பணியாக செய்து கொண்டிருக்கின்றோம், சகோதரர்களே. மிக மோசமான விஷயம், உம்மத் எந்த அளவிறகு; சீரழிந்து, சின்னாபின்னமாக போய்கொண்டிருக்கிறது என்பதறகு; ஒரு அடையாளம். ஒரே ஒரு உதாரணம் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இண்டர்நெட்டில் ஒரு வீடியோ காட்சியை ஏறக்குறைய உலகில் எல்லா பகுதிகளிலும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரை போட்டு அந்த பெயரின் சார்பாக அந்த இண்டர்நெட் காட்சி பரவிக் கொண்டிருக்கிறது. அதைச் சொல்வதற்கு மிகவும் கூச்சமாக இருக்கின்றது. ஆனால் உம்மத் எந்த அளவுக்கு தாழ்ந்து போயிருக்கின்றது எனப் தை சொல்லியே ஆகவேண்டும். பழைய உதாரணம் என்றாலும் உம்மத்தின் போக்கை உணர்ந்துகொள்ள போதுமானது. இரண்டு மீன்களுக்கு இடையே திருமணம் ஆவதைப் பற்றிய ஒரு பாடல். அந்த பாடல் இன்று பழைய பாடலாகிவிட்டது. அந்த பாடலை முழு பாடலையும் ஓட விட்டு பின்னணியில் ஒரு மீனுக்கு பதிலாக இஸ்லாமியப் பேச்சாளர் ஒருவரைக் காட்டுகிறார்கள். இன்னொரு மீனுக்குப் பதிலாக அதிமுக-வின் தலைவியை காட்டுகிறார்கள். இந்த திருமணத்தை நடத்தி வைத்தது யார்? வந்தவர்கள் யார்? யார்? பெரிய திமிங்கிலம் யார் என்று எல்லாமே அங்கு காட்சிகளாக நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் ஓர் இயக்கத்தின் பெயரால் இஸ்லாமியப் பணியாக இந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கினற்து. http://www.youtube.com/watch?v=gmPILrTTv4U கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நானும், நீங்களும் இஸ்லாமியப் பணிகளைச் செய்கிறோம் என்று நம்பி மக்கள் தருகின்ற 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டுதான் இந்த மாதிரியான காரியங்களைச் செய்யப்படுகின்றன. அவர்கள் மீது மட்டுமல்ல தவறு!. நாமும் இந்த மாதிரியான காரியங்களைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். புறம் பேசுவது, அவதூறு சொல்வது, அபாண்டமான குற்றச் சாட்டுகளை அள்ளித் தெளிப்பது என்று அனைத்து வகையான காரியங்களையும் மறுமை பயமே இல்லாமல் செய்கிறோம். குறைந்தபட்சம், ஒரு சகோதரரை சந்திக்கும் போதாவது நாம் கேள்விப்பட்ட நமக்குத் தெரிநத் ஒன்றிரண்டு 'தகவல்'களை பரிமாறிக் கொள்கிறோம். இவர் மீது இந்த அபாண்டமான குற்றச்சாட்டு இருக்கின்றது. இவர் இப்படி தொடர்பு வைத்து இருக்கின்றார் என்று பெயரைக் குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட ஆளுடைய பெயரையும் குறிப்பிட்டு என்னென்ன செய்தார்கள் என்று விலாவாரியாக விமர்சிக்கிறோம் என்ற பெயரில் ஆபாசமான குப்பைகளை எல்லாம் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கென்ன பெயர்? இது தான் நம்முடைய இஸ்லாமிய பண்பா? அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா இந்த பணிகளை செய்யச் சொல்லித்தான் நம்மை அனுப்பியிருக்கிறானா? இளைஞர்களை வழிகெடுக்கவேண்டும் என்பதற்காகவே பத்திரிக்கைகளை நடத்திக் கொண்டிருக்கும் மாதயிதழ் வாரயிதழ் ஆசிரியர்கள் கூட கிசுகிசுக்களை வெளியிடும்போது 'ந' நடிகை, 'பொ' படத்தில் நடித்தவர் என்று பட்டும்படாமலுல் செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆனால், ஆள ; பெயர், ஊர் பெயர், அவரோடு அந்தக் காரியத்தில் ஈடுபட்டவரின் பெயர், அவருடைய வாழ்க்கைத் துணையின் பெயர் எல்லாவற்றையும் அல்லவா, நாம் 'மறுமை நலனு'க்காக வெளியிட்டுக்கொண்டுள்ளோம். இந்த புலனாய்வுத் திறமையை மாலேகாவ்ன் நிகழ்ச்சி போன்றவற்றில் செலுத்தி உண்மையைக் கண்டறிந்தாலாவது பாராட்டலாம். தலையில் வைத்துக் கொண்டாடலாம். கோயமுத்தூரில் முஸ்லிம்களுக்கு எதிராக 1997 கலவரத்தை நடத்தியது உண்மையில் யாரென்று கண்டுபிடிப்பதில் ஈடுபடுத்தலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு முஸ்லிம் சகோதரனுடைய மானத்தை சந்தியேற்றுவதில்தானா செலவிடவேண்டும்? எப்படிப்பட்ட மிக மோசமான சீரழிவுக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்? இதையெல்லாம் யோசித்துப் பார்க்கக் கூடாதா? இதையெல்லாம் செய்து கொண்டு நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே குர்ஆன், ஒரே இறைவன், ஒரே வழிமுறை, ஒரே நபி என்று பேசிக் கொள்வதால் என்ன அர்த்தம் என்றே புரியவில்லை. நாம் பேசுகின்ற இந்த பேச்சுக்கள், நம்முடைய உரையாடல்கள், நம்முடைய இஸ்லாமிய பிரச்சாரங்கள், நம்முடைய ஈமான் எல்லாமே சாரமற்றவையாக மாறிவிட்டன. உண்டா? இல்லையா? நாம் போலியாக பேசுகிறோம். உள்ளத்தில் ஈமான் என்பதே கிடையாது. நாம் போலியாக அல்லாஹ் மேல் ஈமான் வைத்து இருக்கிறோம். நாம் பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறோம். இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும், இஸ்லாமிய பத்திரிக்கை களையும் நாம் போலியாக நடத்திக் கொண்டிருக்கிறோம். நமமு; டைய ஈமான் போலியாக இருந்து கொண்டிருக்கிறது. ஈமான் இருந்திருந்தால் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கவே நடக்காது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரா செய்து மதினாவுக்கு போவதற்கு முன்னர் அன்சாரிகள், மதீனாவாசிக்களுக்கிடையே இரண்டு பெரும் குலங்கள் இருந்தன. இரண்டு குலத்தினர்களுக்கும் இடையே என்றுமே ஆகவே ஆகாது. எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, அடிதடி, கைகலப்பு நடந்து கொண்டேயிருக்கும். தொடர்ச்சியாக பல போர்கள் அங்கே நடந்து இருக்கின்றன. அந்தப் போர்களையெல்லாம், அதற்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள,; கைகலப்புகள் எல்லாவற்றையும் அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா நீக்கினான். எப்படி நீக்கினான்? தன்னுடைய நிஃமத்தைக் கொண்டு நீக்கினான். அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான், 'அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா அவர்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகளைப ; போக்கி அவர்களுடைய உள்ளங்களை ஒன்றாக இணைத்தான், அவர்களுடைய உள்ளங்களை ஒன்றாக சேர்த்தான்';. 'உலகில் இருக்கின்ற எல்லா பொருட்களையும் நீங்கள் செலவு செய்திருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களை; இணைத்திருக்க முடியாது'. (காண்க: அல்குர்ஆன் 8:63) அவர்கள் அல்லாஹ் ஒருவன்தான் தங்களுடைய ரப் என்று ஏற்றுக் கொண்டார்கள். ஈமான் கொண்டார்கள். அந்த ஈமான் அவர்களுகக் pடையில் இருந்த கருத்து வேறுபாடுகளை, மனமாற்றங்களை எல்லாம் அகற்றி அவர்களை ஒன்றாக ஆக்கியது. 'முஃமின்கள் அனைவரும் ஓர் உடலைப் போன்றவர்கள். உடல் என்றால் முஃமின்களும் ஓர் உடலைப் போன்றவர்கள். உடலின் ஒர் பாகம் வேதனைப் பட்டால், வலியால் துடித்தால் மற்ற எல்லா பாகங்களும் அதற்காக அழு கின்றன. காய்ச்சல் வந்துவிட்டால் மற்ற எல்லா பாகங்களும ; வேதனையை அனுபவிக்கின்றன!' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு முஃமின் சகோதரன் கஷ;டப் படுகிறான் என்றால் அந்த வேதனையை நாம் உணரவேண்டும். உள்ளத்தால் உணரவேண்டும். நம்முடைய மனம் துடிக்க வேண்டும். அப்போது தான் உள்ளத்தில் ஈமான் இருக்கின்றது என்று அர்த்தம். 'முஃமின்கள் அனைவரும் செங்கற்களால் ஆன சுவற்றைப் போன்றவர்கள். ஒரு செங்கல், இன்னொரு செங்கல்லுக்கு முட்டு கொடுக்கின்றது. அதைப் போல முஃமின்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் முட்டு கொடுத்து தாங்கிப் பிடிக்கிறார்கள்!' என்று அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், செங்கல்லை வைத்து நாம் கட்டிடம் கட்டுகிறோம். சுவற்றைக் கட்டுகிறோம். எப்படி கட்டுகிறோம்? ஒரு செங்கல்லை இப்படி வைக்கிறோம், ஒரு செங்கல்லை அப்படி வைக்கிறோம். இரண்டு செங்கற்களும் இணையும் இடத்தில் மூன்றாவதாக ஒரு செங்கல்லை வைக்கிறோம். இப்போது ஒன்றுக்கொன்று முட்டுக் கொடுத்து கீழே விழாமல், சரியாமல் காப்பாற்றுகினற் து. அந்த சுவற்றுக்கு பலம் கிடைக்கின்றது. முஃமின்கள் ஒருவருக்கொருவர் செங்கற் களாக இருக்க வேண்டும், ஒரு செங்கல்லும் கீழே விழ அனுமதிக்கக் கூடாது. ஒரு சகோதரன் தவறு செய்கிறான் என்றால், அந்த சகோதரனுக்காக முதலில் நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும். 'இறைiவா! அந்த சகோதரர் உண்மையில் உன்னுடைய உம்மத். உன்னுடைய உம்மத்தினுடைய ஓர் உறுப்பு ஒரு தவறு செய்கின்றான். அந்த தவறிலிருந்து அவனைக் காப்பாற்று!' என்று அல்லாஹ்விடம் நாம் துஆ செய்ய வேண்டும். அவரை சந்திக்க வேண்டும். அவருடைய தவறை திருத்த வேண்டும். இது எதையுமே செய்யாமல் அவரைப் பற்றி பகிங்கரமாக மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்கிறோம், இல்லையா? ஓர் அமைப்பு உடைந்த உடனே எல்லாரும் வீதிக்கு ஓடிவந்து போஸ்டர் அடித்து, மக்களை அழைத்து கூட்டம் போடுகிறார்கள். அவர் அப்படி செய்தார், இப்படி செய்தார். இது முஃமின்களுக்கு அழகா? ஒரு முஃமின் இவ்வாறு செய்வானா? ஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்தவனாக இருந்தாலும் சரி, பகிங்கரமாக அவரை அவமானப் படுத்துவது இஸ்லாம் அங்கீகரிக்காத ஒரு செயல் அல்லவா? 'உங்களுடைய மனைவி ஒரு தவறைச் செய்துவிட்டால் நான்கு பேர் பார்க்க அவளைக் கண்டிக்காதீர்கள். உங்களுடைய மனைவியின் கனன் த்தில் அறையாதீர்கள்!' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட உத்தரவுகள் எல்லாம் எதற்காக கொடுக்கப்பட்டுள்ளன? அவளுடைய தன்மானத்தைப் பறிப்பதற்கு, அவளுடைய தன்மானத்தை சீர்குலைப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!. எந்தவொரு மனிதனும் மற்றவர்களுக்கு முன்னால் பாவியாக நிற்பதையோ மற்றவர்கள் பார்க்க பார்க்க பாவம் செய்வதையோ ஒருபோதும் விரும்பமாட்டான். தன்னுடைய பலவீனத்தின் காரணமாக அல்லது வேண்டுமென்றே ஒரு குற்றத்தை செய்துவிட்டாலும் மற்றவர் பார்வையில் படாமல்தான் செய்வான். மற்றவருடைய கவனத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக பெருமுயற்சி எடுத்துக் கொள்வான். முதல்பாவம் செய்த ஆதமுடைய மகனான காபீலும் இவ்வாறே செய்துள்ளான். பாவம் என்றால் என்ன? அதனுடைய வரையறை என்ன? என்று இறைத்தூதரிடம் வினவப்பட்டபோது மக்கள் யாரும் பார்க்கககூ; டாது என்று நீ நினைக்கும் செயல்தான் பாவம் என்று அருமையான விளக்கத்தை அண்ணலார் தந்துள்ளார்கள். ஆக, எப்படிப்பட்ட மனிதனும் தான் செய்த குற்றத்தை மறைக்கவே முயல்கிறான். ஆகையால்தான், ஒரு முஸ்லிம் சகோதரன் தவறிழைத்துவிட்டால் அதை மறைக்கும்படி அவனுடைய மானத்தை காக்கும்படி ஷரீஅத் கற்பிக்கின்றது. ஒரு மனிதர் குற்றம் இழைப்பதை உங்களுடைய இரண்டு கண்களாலும் நீங்கள் பார்த்து விட்டீர்கள். உடனடியாக போய் முறையிட்டீரக் ள் என்றால் எண்பது கசையடிகளை உங்களுக்கு கொடுப்பார்கள். இதுதான் ஷரீஅதத் pன் நடைமுறை! செய்த தவறை எல்லோருக்கும் முன்பாக, அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் செய்யவே இல்லை! என்று அவர் சத்தியம் செயக் pறார். இப்போது என்ன செய்வது? ஒரு முஃமினுடைய சத்தியத்திற்கு மதிப்பு கொடுத்தாகவேண்டும். அவன் முஃமினா, முனாஃபிக்கா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கக் கூடாது. தமக்கு நன்றாகத் தெரிந்த முனாஃபிக்குகள் விஷயத்தில ; கூட, வெளிப்படையான எந்தக் கருத்தையும் அண்ணலார் தெரிவிக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 'ஒருவர் திருடுவதை நான் என்னுடைய கண்களால் கண்டுவிட்டேன். அவனை விசாரிக்கையில் தான் திருடவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அவர் கூறுகிறார் என்றால், அவர் உண்மை சொல்கிறார், என்னுடைய கண்கள்தாம் தவறிழைத்து விட்டன எனக் கூறுவேன்!' என்று இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார். நாம் மனதில் பதித்துக் கொள்ளவேண்டிய வாக்கியம் இது! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் செய்யவில்லை என்று ஒருவர் கூறிவிட்டால் அப்புறம் அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான பிரச்சனையாகி விடுகின்றது. அதில் நாம் புலனாய்வு செய்யவேண்டிய அவசியமில்லை. ஒரு முஃமின் தவறு செய்கிறானென்றால், அந்த தவறை எப்படி சுடடி; க் காட்டுவது என்பதற்கு அழகழகான வழிமுறைகளை இஸ்லாம் கற்றுக் கொடுக்கின்றது. அந்த வழிமுறைகளை எல்லாம் நாம் துச்சமாக மதித்து, அவற்றையெல்லாம் பின்பற்றவே கூடாது என்று முடிவு செய்து கொணடு; , நாம் இன்று முஃமின்களைப் பற்றி புறம் பேசுவது, முஃமின்களைப் பற்றி தாறுமாறாக எடுத்துரைப்பது என்று நம்முடைய திருப்பணிகளைச் செய்துகொண்டுள்ளோம். இப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்க கண்டிப்பாக இஸ்லாம் ஆசைப்பட்டதே கிடையாது. ஓர் உன்னதமான சமூகத்தை இஸ்லாம் படைக்க நாடுகின்றது. அற்புதமான ஒரு சமூகத்தை படைக்க இஸ்லாம் நாடுகின்றது. அப்படிப்பட்ட சமூகம் உருவானால் தான் முஃமின்களிடம் காணப்பட வேண்டிய எல்லா பண்புகளும் அவர்களிடம் காணப்படும். இல்லையென்றால் காணப்படாது. அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா சொல்கிறான்: 'இறை நம்பிக்கை யாளர்களே, அல்லாஹுத் தஆலாவுக்கு எப்படி பயப்படுகிறோமோ அப்படி பயப்படுங்கள். பயப்படாத நிலையில் இறந்து போய்விடும்நிலையை நீங்கள் அடைய வேண்டாம். அல்லாஹ்வுக்கு பயப்படாத நிலையில் நீங்கள் இறந்துவிட வேண்டாம்!';. முதல் விஷயம், அல்லாஹுத் தஆலாவுக்கு பயப்படவேண்டும். அல்லாஹுத் தஆலாவுக்கு பயப்பட்டிருந்தால், நம்மிடத்தில் உண்மையிலேயே அல்லாஹ்வுடைய பயம் இருந்திருந்தால் இத்தகைய காரியங்களைச ; செய்ய மனம்வருமா? அல்லாஹ்விடம் பயம் எப்படி வரும்? திடுதிப்பென்று பயம் வநது; விடுமா? அல்லாஹ்வை நம்ப வேண்டும். அல்லாஹ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கவேண்டும். நாளை மறுமையில் அல்லாஹ் நம்மை விசாரிப்பான். இறந்து போன பிறகு ஒரு வாழ்க்கையிருக்கின்றது. அந்த வாழ்க்கையில் அல்லாஹ் நம்மை அழைத்து விசாரிப்பான் என்கிற நம்பிக்கை உள்ளத்தில் இருந்தால் தான், அல்லாஹ்மீது பயம் வரும். அல்லாஹ் மீது பயம் வந்து விட்டால் இன்னொரு சகோதரனைப் பற்றி பேசுவதற்கு, புறம் பேசுவதற்கு, அவதூறு சொல்வதற்கு, அவன் எனன் தான் தவறிழைத்திருந்தாலும் சரி அதைப் பற்றி மக்களிடம் பொதுபப் டையாக விமர்சனங்கள் என்ற பெயரில் அள்ளித் தூற்றுவதற்கு நாம் தயாராக மாட்டோம். நாம் என்ன பெரிய அவ்லியாக்களா? அஷரத்துல் முபஷ;ஷரா பட்டியலில் நம்முடைய பெயர் இடம் பெற்றுள்ளதா? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்று உங்களையும், எங்களையும் சுட்டிக் காண்பித்து, பெயர் சொல்லி சுட்டிக் காண்பித்து இருக் கிறார்களா? நாம் எந்த தைரியத்தில் மற்றவர்களை விமர்சனம் செய்கிறோம்? எந்த தவறும் என்னிடத்தில் இல்லையென்று உலகில் யாரேனும் சொல்ல முடியுமா? எந்த தவறும் நம்மிடத்தில் இல்லை என்று சொல்ல முடியுமா? இன்றைக்கு ஒரு சகோதரனுடைய மானத்தையும், மரியாதையையும் கபப் லேற்று வதற்காக அவரைப் பற்றிய அவதூறுகளைப் பேசிக் கொண்டிருக்கிறோமே, இதே நிலைமையை அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா நமக்கு ஏற்படுத்தினால்? ஏற்கனவே நாம் செய்த ஒரு குற்றத்தையோ நாளை நாம் செய்ய உள்ள குற்றத்தையோ, முந்தைய தினம் செய்து மறந்து போய்விட்ட ஒரு குற்றத்தையோ அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா மக்களுக்கு முன்னால் வெளிச்சம் போட்டு காண்பித்தால் என்னவாகும்? யோசித்துப ; பாருங்கள். 'அல்லாஹுத் தஆலாவுக்கு பிடிக்காத ஒரு காரியத்தை யாராவது ஓர ; அடியான் செய்துவிட்டால், பிடிக்காத ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் அந்த நிமிடம் வரைக்கும் அவன் செய்த எல்லா அமல்களையும், அல்லாஹ் அழித்து விடுகிறான்' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியுள்ளார்கள். நமக்கு தெரியவே தெரியாத ஒரு சகோதரனைப் பற்றியும் புறம் பேசுகின்றோமா, இல்லையா? யோசித்துப் பாருங்கள். ஒரு மனிதன் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்தான். அவன ; குற்றவாளியாக இருக்கலாம், நிறைய பாவம் செய்திருக்கலாம், அவனைப் பற்றி எந்தவிதமான குறிப்பும் கிடையாது. வழியில் தாகத்தின் காரணமாக ஒரு கிணற்றைத் தேடிப் பிடித்து, கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்கிறான். தண்ணீர் குடித்துவிட்டு மேலே வரும் போது ஒரு நாய் நாவைத் தொங்கப் போட்டு தவித்துக் கொண்டு நிற்கின்றது. அட, அந்த நாய்க்கும் தண்ணர்P தாகம் போலிக்கிறதே என்றெண்ணி மறுபடியும் கீழே இறங்குகிறான். தண்ணீர் கொண்டு வர கையில் ஏதும் இல்லை, தன்னுடைய காலுறையை கழற்றி அதில் தண்ணீரை மொண்டு கொண்டு மேலே ஏறி வருகிறான். இந்த ஒரு செயலின் காரணமாக அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா அவனுடைய எல்லா குற்றங்களையும் மன்னித்து அவனை சொர்க்கவாசியாக ஆக்கிவிட்டான். உண்டா? இல்லையா? இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் காட்டிய ஒரு ஹதீஸ். ஒரு சகோதரன் ஒரு பாவம் செய்திருக்கின்றான். நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அந்த பாவத்தை? அவன் தவறு செய்வான் என்று தெரிந்து போயிற்று. அவனைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறீர்கள். ஆனால் அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா அவனுடைய (மேலே கண்டதைப் போல) வேறொரு நற்செயலின் காரணமாக அந்த பாவத்தை, அவனை மன்னிக்கலாம், மன்னிக்க மாட்டான் என்று நினைக்கிறீர்களா? அல்லது நாளை அந்த சம்பந்தபட்ட மனிதரே தன்னுடைய பாவத்திற்காக, மனம்திருந்தி தவறு செய்ததற்காக, கதறி அழுது அல்லாஹ்விடம் தவ்பா கேட்கலாம். அவர் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளலாம். மற்றவர்களிடம் சென்று இவன் தவறு செய்தான் என்று சொல்வதறகு; உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? யார் அந்த உரிமையை அளித் தார்கள்? ஒரு மனிதன் தவறு செய்யக் கண்டால், ஒரு முஃமின் தவறு செய்யக் கண்டால், அதை மறையுங்கள் என்றுதானே ஷரீயத் கற்றுக் கொடுக்கின்றது. ஒருவன் தவறிழைத்தால் அதை மறைத்து விடுங்கள். அவருடைய குறைகளை மறைத்துவிடுங்கள் என்றுதானே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள். ஒரு முஃமினுடைய குறையை நீங்கள் மறைத்தால், உங்களுடைய குறையை அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா மறைப்பான். இது ஷரீயத ; கற்றுத் தருகின்ற ஒரு பாடம். அது; மட்டுமல்ல. ஒருவரைப் பற்றி புறம் பேசப்படுகின்றது. அதைப் பார்த்துக் கொண்டு நீங்கள் சும்மா இருக்காதீர்கள் என்றும் ஷரீஅத் கற்றுக் கொடுக்கின்றது. ஒருவருடைய மானத்தின் மீது தாக்குதல் கொடுக்கப்படுகின்றது. புறம் பேசுகிறார்கள், அவதூறு சொல்கிறார்கள். அவன் அதைச் செய்தானா? இல்லையா என்பதல்ல விஷயம்!. அதைப் பார்த்துக் கொண்டு நீஙக் ள் சும்மா இருக்காதீர்கள். 'அந்த விஷயத்தைப் பற்றி பேசாதே!' என்று நீங்கள் அதை தடுத்து நிறுத்துங்கள். அப்படி நீங்கள் தடுத்து நிறுத்தத் தவறினால், யாரேனும் உதவி செய்ய மாட்டார்களா? என்று நீங்கள் கதறி அழுகின்ற அந்த கியாமத் நாளில் அல்லாஹ் உங்களை கைவிட்டுவிடுவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளில் மஹஷர் மைதானத்தில் அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா ஒரு அடியானைக் கூப்பிடுவான். கூப்பிட்டு யாரும் அறியாமல் அவன் மீது போர்வையைப் போர்த்திக் கொண்டு அவனை விசாரிப்பான். இந்த நாளில், இந்த இடத்தில் யாருக்குமே அறியாமல் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை நீ செய்தாயல்லவா? என்று அல்லாஹ் கேட்பான். அப்போது அந்த அடியான் பதறித் துடித்துப் போய், யாருக்கும் தெரியாமல் நான் செய்த காரியம் அல்லாஹ்வுக்கு தெரிந்து போய்விட்டதே! என்று வெட்கத்தால் கூனிக்குறுகி, வேர்த்து விறுவிறுத்து போய்விடுவான். அதைக் கண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அல்லாஹ் ரஹ்மான் அர்ஹமர் ராஹிமீன் 'உன்னுடைய பாவத்தை நான் மன்னித்துவிட்டேன்!' என்று கூறி விடுவான். ஒருவருடைய பாவத்தை அல்லாஹ் வெளிப்படுத்த நினைக்கவில்லை. அல்லாஹ் மறைக்க நினைக்கிறான். அல்லாஹ் மன்னிக்க நினைக்கிறான். ஒருவன் தவறு செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பதற்காக கால அவகாசத்தைக் கொடுக்கிறான். சாகின்ற வரைக்கும்! மரணத் தருவாயில் அவனுடைய தொண்டைக் குழியில் வந்து மலக்குல் மவ்த் கை வைகக் pன்ற வரைக்கும் அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா அவருக்கு அவகாசத்தைக் கொடுக்கிறான். கொடுக்கின்றானா? இல்லையா? சாவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் வரைக்கும் மனிதன் தான் செய்த எல்லா பாவங்களையும் ஒவ்வொன்றாக நினைத்து நினைத்து அழுது பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் மன்னிக்கத் தயாராக இருகக் pறான். உண்டா? இல்லையா? ஒரு மனிதன் பாவம் செய்துவிட்டால் அத்தோடு அவன் வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்று முடிவு செய்துவிட்டு அதைப் பற்றி மக்களிடம் நாம் பிரச்சாரம் செய்கிறோம். அதைப் பற்றி நாம் தாறுமாறாகப் பேசுகிறோம். ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கிறான். துன்பத்திலேயே மிகவும் மோசமான துன்பம் என்னவென்றால், பாவம் செய்வது தான்!. அல்லாஹுத் தஆலாவுடைய கோபத்தையும், அல்லாஹுத்தஆலாவுடைய சாபத்தையும் தரு கின்ற ஒரு காரியத்தை, அது விபச்சாரமாக இருக்கட்டும், களவாக இருக்கட்டும், எதுவாகவும் இருக்கட்டும். அதை அதைப் பார்த்து நாம் பரிதாபப்பட வேண்டும். அவருக்காக துஆ செய்ய வேண்டும். அவரை அணுகி அந்த விஷயத்தை சொல்லிப் புரியவைக்க முயற்சி செய்ய வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களிடம் சென்று சொல்கிறோம். மக்களிடையே பிரச்சாரம் செய்கிறோம். இந்த நிலை இருக்கும் வரைக்கும் உம்மத்தில் இடையில் சகோதரத்துவம் வராது. சகோதரா, சகோதரா என்று சொல்கிறோம். உலகத்தில் சகோதரத்துவம் என்கிற வார்த்தையே சொல்லிக் கொடுத்ததே இஸ்லாம் தான் என்று சொல்கிறோம். எல்லாம் வெறுமனே மேடையில் நின்ற பேசுவதற்கு மட்டும் தான். உண்மையிலேயே ஒருவரை நீங்கள் சகோதரன் என்று நினைத்தீர்களேயானால், அவன் செய்த தவறை யாரிடமேனும் நீங்கள் சொல்வீர்களா? சொல்ல மாட்டீர்கள். அந்த சகோதரர் முன்னேற வேண்டும். அல்லாஹுத்தஆலாவுடைய கோபத்திற்குரிய ஒரு காரியத்தை அவர் செய்து கொண்டு இருக்கிறார், அதை விட்டு அவர் வெளியே வரவேண்டும் என்பதற்கு நம்மால் இயன்ற எத்தனையோ முயற்சிகளை செய்யலாம். ஒரு மனிதரை, ஒரு முஸ்லிம் சகோதரனை சந்திப்பதற்காக நீங்கள் ஊரைவிட்டு புறப்பட்டுச் சென்றால், நீங்கள் சந்தித்துவிட்டு திரும்பி வருகின்ற வரைக்கும் எழுபதாயிரம் வானவர்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என ஒரு நபிமொழி போதிக்கின்றது. ஒரு முஸ்லிம் சகோதரன் மீது நாம் செலுத்துகின்ற அக்கறைக்கான பரிசு இது!. ஒரு சகோதரன் மீது அக்கறை செலுத்துவது, அவன் மீது அன்பு காட்டுவது, அவனைப் பார்த்தவுடன் நேசப் புன்னகை புரிவது -- இவையெல்லாம் ஈமானுடைய வெளிப்பாடு!. 'மறுமை நாளில் ஒருசிலருடைய முகங்கள் ஜொலித்துக் கொண்டு இருக்கும். ஒளியால் ஆன மிம்பர் மேடைகளின் மீது அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்களுடைய சிறப்பு, அவர்களுடைய அந்தஸ்து, அவர்களுடைய கௌரவத்தைப் பார்த்து ஸுஹதாக்களும், நபிமார்களும ; பொறாமை கொள்வார்கள். (நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், ஸுஹதாக்களும், நபிமார்களும் பொறாமை கொள்வார்கள்) அப்படிப்பட்ட கௌரவமான இடத்தில் அவர்களை அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா அமர வைத்திருப்பான்'. ஸஹாபாக்கள் கேட்கிறார்கள். யா ரஸுலுல்லாஹ், யார் அவர்கள்? 'ஒருவரையொருவர் நேசித்துக் கொண்ட முஃமின்கள் அவர்கள். அவர்களுக்கிடையில் எந்தவித உறவும் இருக்காது. சொந்த பந்தம ; எதுவும் இருக்காது. அல்லாஹுத் தஆலாவுக்காக மட்டுமே அவர்கள் ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டிருந்தாhர்கள'; . சொந்தக்காரனோ, சொந்த ஊர்க்காரனோ அல்லாத, நண்பனும் அல்லாத, தொழிலிலோ, வியாபாத்திலோ பங்காளியாகவும் இல்லாத, யாரோ ஒரு முஸ்லிம் சகோதரனை அல்லாஹ்வுக்காக நீங்கள் நேசிக்கிறீர்கள். அல்லாஹ்விடம், அவனுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்கின்றீர்கள். அவன் மீது அக்கறை செலுத்துகின்றீர்கள். அவன் முன்னேற வேண்டும், மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்று உளப்பூர்வமாக ஆசைப்படுகின்றீர்கள். இதுதான் சகோதரத்துவம்!. இந்த சகோதரத்துவத்தை வளர்த்து எடுப்பதற்காகத்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுக்க பாடுபட்டிருக்கிறார்கள். ஸஹாபாக்களுக்கு இடையே 'முவாஃகாத'; என்ற அற்புதமான ஒரு நடைடுறையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடைமுறைப் படுத்திக் காண்பித்துள்ளார்கள். இந்த சகோதரத்துவத்தை அடியோடு காலடியில் போட்டு மிதித்துவிட்டு அதை துவம்சம் செய்து விட்டு நாம் இஸ்லாமைப் பற்றியும், ஒற்றுமையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றோம். இது எப்படி சாத்தியம்? சாத்தியமே ஆகாது. மேற்கண்ட அந்த வசனத்திற்கு அடுத்த வரியில் 'அல்லாஹ்வுடைய கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள். உங்கள் மீது இறைவன் செய்திருக்கின்ற அருட்கொடைகளை நீங்கள் யோசித்துப் பாருங்கள். எப்படியிருந்தீர்கள், சண்டை போட்டு கொண்டு, பிரிந்து பிரிந்து கிடந்தீர்கள். அல்லாஹ் தன்னுடைய நிஃமத்தால் உங்களை ஒன்றாக இணைத்திருகக் pறான். அந்த அருட்கொடையை நினைத்து பாருங்கள்'. அல்லாஹ் ஸஹாபாக்களைப் பார்த்து சுட்டிக்காட்டுகின்ற வார்தi; தகள் இவையெல்லாம். இதற்கு நேர் மாற்றமாக, நாம் இறைவனுடைய நிஃமத்துகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு அல்லாஹுத் தஆலாவுடைய பெயரை சொல்லிக் கொண்டு, அல்லாஹுத் தஆலாவுடைய அருமைத் தூதருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு பிளந்து, பிளந்து, பிளந்து, பிளந்து போய்க் கொண்டிருக்கிறோம். அல்லாஹுத் தஆலாவுடைய அருட்கொடைகள் நம்மிடத்தில் இல்லை. நாம் குர்ஆனை மதிப்பதே கிடையாது. குர்ஆனை பின்பற்றுவதாக நாம ; சொல்வதெல்லாம், வெறும் பொய்யான தோற்றம். குர்ஆனை பினப் ற்ற நாம் தயாராக இல்லை. அல்லாஹுத் தஆலாவுக்கு பயப்பட நாம் தயாராக இல்லை. ஆகையால் நம்மிடையே ஒற்றுமை சாத்தியமாகப் போவதும் கிடையாது. ஒற்றுமை வேண்டுமென்றால் நாம் அல்லாஹ்வை நம்ப வேண்டும். அல்லாஹ்வை நம்பினோம் என்றால் அவனுக்கு பயப்பட வேண்டும். அல்லாஹ்வுககு; பயப்பட்டால் உங்களை மாதிரியே அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டிருக்கின்ற இன்னொரு சகோதரனை நீங்கள் நேசிக்க வேண்டும். அந்த நேசம் இயற்கையாக வெளியில் வரும். வந்தால் தான் சகோதரத்துவம் உள்ளதென்று பொருள்!. அதற்காக பெரிதாக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நம்முடைய ஈமானை வளர்ப்பதில் கவனம் செலுத்தினாலே போதும். சொல்லப் போனால் ஈமான் என்பது ஒரு சக்தி வாய்ந்த காந்தத்தைப் போன்றது. உண்மையான ஈமான் என்னுடைய உள்ளத்தில் இருந்தால், உண்மையான ஈமான் உங்களுடைய உள்ளத்தில் இருந்தால் இரண்டும் ஒன்றையொன்று ஈர்க்கும். கண்டிப்பாக ஈர்க்கும். ஈமானை வளர்த்துக் கொண்டால ; நம்மிடையே சகோதரத்துவம் தானாக வளரும். அதன்பிறகு ஒற்றுமை வெளிப்படும.; அல்லாஹ் ஜல்ல ஷhனஹுத் தஆலா நம்முடைய ஈமானை பரிசுத்தப்படுத்தி முழுமையான, நிறைவான அல்லாஹ் அங்கீகரிக்கின்ற அற்புதமான ஈமானுடைய மக்களாக நம்மை மாற்ற வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment