அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும்
இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம்
இறைவனின் நேசத்தைப்பெற்று
மறுமை வெற்றியை அடைய வேண்டும்
என்பதாகத்தான் அமைந்திருக்கும்.
மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது.
ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல.
ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை
அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்?
துரதிர்ஷ்டவசமாக
சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள்
''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்''
செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது.
இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்'
கண்டு கொள்ளப்படுவதேயில்லை;
ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது.
பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும்
அதைச்சார்ந்தவர்களுடையவும்
குறைகளை மிகைப்படுத்துவதையே
முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ?
என்று எண்ணத்தோன்றுகிறது!
"எங்கள் இறைவா ! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"
அல் குர்ஆன் 14:41.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
No comments:
Post a Comment