ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மனு தாக்கல் துவங்கிய முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகான் தேர்தல் அலுவலரான கலெக்டர் வாசுகியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலர்கள் காளிதாசன், கதிரேசன், மனித நேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் ரகமத்துல்லா வந்திருந்தனர்.
சொத்து விவரம்: ரொக்கம் கையிருப்பாக ஐந்து லட்சத்து 79 ஆயிரத்து 855 ரூபாய், வங்கியிருப்பு, வாகனங்கள், நகைகள், அசையா சொத்துக்கள், பாலிசி இல்லை. வழக்குகள்: ராமநாதபுரம், பரமக்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒன்பது வழக்குகள் உள்ளன. கோர்ட்டில் தீர்ப்பான மூன்று வழக்குகளில் விடுதலை.
சலிமுல்லாகான் கூறுகையில், "பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என மற்ற கட்சிகள் களத்தில் உள்ள சூழ்நிலையில், மக்கள் பலம் கொண்ட மனித நேய மக்கள் கட்சி, 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என்றார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment