அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 10, 2011

1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி உடனடி அமல் : தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சமச்சீர் கல்வியை, 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 1 முதல் 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்துவதாக, சட்ட சபையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். சமச்சீர் கல்வி வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்' நேற்று தீர்ப்பு வெளியிட்டது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் என, தீர்ப்பளித்த ”ப்ரீம் @கார்ட் "பெஞ்ச்' , இதற்கு, 25 காரணங்களையும், பட்டியலிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், புதிய அரசு பதவியேற்ற பின், மே 22ம் தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய தினம், அதாவது மே 21ல், பழைய கல்வி முறையில் பாடப் புத்தகங்களை வெளியிட டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது, சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்வதற்கு முன் கூட்டியே அரசியல் முடிவு எடுக்கப்பட்டது என்பதை காட்டுகிறது.சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்பதற்கு அடிப்படையாக, அரசு முன் எந்த ஆவணமும் இல்லை. சமச்சீர் பாடத் திட்டம், பாடப் புத்தகங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யவில்லை.ஆட்சியில் இருந்த அரசியல்கட்சித் தலைவரின் (கருணாநிதி) சொந்த கொள்கையை விளம்பரப்படுத்தும் வகையில், தனிப்பட்ட புகழ் பாடும் வகையில் பாடப் புத்தகங்களில் சில பகுதி இருந்தது என்பதில் சந்தேகமில்லை.அத்தகைய பகுதிகளை நீக்கியிருக்கலாம். அதற்குப் பதில், காலவரையற்ற முறையில் சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். பொருளாதார, சமூக, கலாசார பாகுபாடு பார்க்காமல், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டு வர, கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், மற்ற வகுப்புகளுக்கு, 2011-12ம் ஆண்டிலும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது என சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்பதால், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை தவிர்க்க, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்ற தமிழக அரசின் வாதம் ஏற்கக் கூடியதாக இல்லை. ஐகோர்ட் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும்தீர்ப்பளித்துள்ளது. சட்டத் திருத்தம் மூலம் இந்த தீர்ப்புகளை ரத்து செய்யும் விதத்தில், சட்டசபையை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வகையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. எனவே, இந்த வகுப்புகளைப் பொறுத்தவரை, சமச்சீர் கல்வி சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் வகை செய்யப்பட்டபடி, அட்டவணையை மாற்றி உத்தரவுகளை பின்பற்றியிருக்கலாம். சட்டத்தில் கூறியுள்ள பிரிவுகளை அமல்படுத்த, நிர்வாக உத்தரவுகளை அரசு பிறப்பிக்க, சமச்சீர் கல்வி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள் தரக் குறைவாக இருக்கிறது என, பலர் முறையீடுகள் செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மே 16ம் தேதி புதிய அரசு பதவியேற்றது. அதன்பின், சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என தனியார் பள்ளிகள், அமைப்புகள் தரப்பில் அளிக்கப்பட்ட முறையீடுகளை, 17, 18ம் தேதிகளில் அரசு பெற்றுள்ளது. இவ்வாறு முறையீடுகள் செய்த பெரும்பாலான அமைப்புகள், சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து, அதில் தோல்வியடைந்தவர்கள். இந்த முறையீடுகள் எல்லாம் விசாரணைக்கு உகந்ததல்ல. அரசே இந்த முறையீடுகளை அனுமதித்திருக்கக் கூடாது. இவ்வாறு, "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு : ""சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு பேசும்போது நடந்த விவாதம்:
டில்லிபாபு: குன்னூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு, நேரடியாக தேர்வு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். 1 கோடியே, 25 லட்சம் பள்ளி மாணவர்கள், பாடப் புத்தகங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா: சமச்சீர் கல்வி தொடர்பாக, இன்று காலை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவை, 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தும்.

டில்லிபாபு: சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஒரு முடிவு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

சமச்சீர் கல்வி இதுவரை...: சமச்சீர் கல்வி என்பது தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநில அரசு கல்வி, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி முறைகளை ஒன்றாக்குவதே இதன் முக்கிய நோக்கம். 
2010: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் அறிக்கை மற்றும் கல்வியாளர்கள் குழுவின் ஆய்வு அறிக்கையை அடுத்து சமச்சீர் கல்வி சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம். 
2010 -11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்டது. இக்கல்வியை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. 
2011 மே 11: தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது. 
மே 22: சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க அ.தி.மு.க., அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. 
ஜூன் 7: சமச்சீர் கல்வி சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம். இதன்படி இந்தாண்டு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு. பல்வேறு திருத்தங்களுடன் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., தகவல்.
ஜூன் 8: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு.
ஜூன் 10: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை. மேலும் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புடன் சேர்த்து ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு. 
ஜூன் 13: சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு.
தங்களது மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு. 
ஜூன் 15: ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு இந்தாண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து 2 வாரங்களில் அதை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ஐகோர்ட் அதை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. 
ஜூன் 17: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்கு தலைமை செயலர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. 
ஜூலை 5: தமிழக அரசின் நிபுணர் குழு தனது அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. 
ஜூலை 18: அறிக்கையை விசாரித்த ஐகோர்ட் இந்தாண்டே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு. 
ஜூலை 19: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு. 
ஆக. 4: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.
ஆக. 8: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு.
ஆக. 9: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தாண்டே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு. 
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து சமச்சீர் கல்வி இந்தாண்டே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., அறிவிப்பு. 

Ban on Freedom Parade in Kerala: Popular Front Moves Court..


freedom parade2
Freedom Parade Poster in Malayalam
Kochi: Popular Front of India Kerala state committee filed a petition in Kerala High Court against ban on Freedom parade slated to be organised in four towns on August 15 as part of Independence Day celebrations. Petition will be heard tomorrow.
The petition moved through senior advocate K Ram Kumar against the decision of district collectors to impose ban on Freedom parade at Punaloor, Thamarassery, Manjeri and Chavakkadu. Petitioner questioned the veracity of reasons put forward by these collectors of four districts to put the ban that there were strong opposition from the part of organisations like RSS and CPM. At the same time all other parties were given permission to conduct various programmes on the same day.  To single out Popular Front and blocks its programme only is nothing but illogical and unlawful. The decision by the collectors amounts to the denial of citizens’ right to celebrate Indian independence, petition said.
Last day Populkar Front had termed official ban on Freedom Parade on Independence Day as gross violation of civil rights of the citizens to celebrate country’s freedom. Kerala state committee meeting termed the police decision highly condemnable and objectionable.
It should be noted that Freedom Parade was being conducted in different parts of Kerala right from 2004. And it was Freedom Parade that popularized Independence Day celebrations which was restricted to official programmes till then. High public participation of the parade was clear indication for this.
There was no untoward incident reported in connection with the parade so far in the state. So it is unreasonable and against facts to ban it on the grounds of law and order problems. The ban decision is no doubt the result of prejudiced notion of the government towards Popular Front of India. There is no point in denying Popular Front activists right to celebrate independence when all other organizations has chance to do it through various programmes, sate committee had observed.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் துவங்கியது : இன்று முடிக்க அதிகாரிகள் தீவிரம்.

சென்னை: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று மாலை துவங்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பொறுத்து, அரசு வழங்கும் உத்தரவின் அடிப்படையில் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, அதிகாரிகள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பிரதிநிதிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுச்செல்ல, குறிப்பிட்ட மையங்களுக்கு தயாராக வருமாறு, அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி, சென்னையில் நேற்று பல பள்ளிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாடப் புத்தகங்களை வாங்க காத்திருந்தனர். எனினும், மாலை 4 மணி வரை எந்தவித உத்தரவும் வராததால், பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யவில்லை. 4.30 மணிக்கு, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டதும், காத்திருந்த ஒரு சில பள்ளிகளின் பிரதிநிதிகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், மற்ற இடங்களிலும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறியதாவது: சென்னையில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. நான்கு மாவட்டங்களிலும், தலா ஒரு மையத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை (நேற்று) தான், பாடப்புத்தகங்கள் வழங்க அனுமதி கிடைத்தது. அதன்படி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காத்திருந்த பல்வேறு பள்ளிகளின் பிரதிநிதிகளிடம் பாடப்புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் ஆகிய அனைத்திற்கும், நாளை பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். ஒவ்வொரு பள்ளியிலும், அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் குறித்த விவரங்களை ஏற்கனவே நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனடிப்படையில், பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். வினியோக மையத்தில் இருந்து, பள்ளி பிரதிநிதிகள் பாடப் புத்தகங்களை பெற்றுச்சென்று, அதன்பின் மாணவர்களுக்கு வழங்குவர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அவர்கள், விலைக்குத் தான் வாங்க வேண்டும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு நாகராஜ முருகன் கூறினார்.
அனைத்துப் பள்ளி பிரதிநிதிகளும், இன்று மதியத்திற்குள் பாடப் புத்தகங்களை பெற்றுச்சென்று, பள்ளி முடிவதற்குள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். எனவே, இன்றைக்குள் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைத்துவிடும். இதன்மூலம், இரண்டு மாதங்களாக நீடித்துவந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

சென்னையில் சமச்சீர் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படும் மையங்கள் விவரம் 

சென்னையில், நான்கு இடங்களில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி-ராயபுரம் (சென்னை-கிழக்கு)
2. சவுந்திரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி, அயனாவரம் (சென்னை-வடக்கு)
3. எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி-சேத்துப்பட்டு (சென்னை-தெற்கு)
4. ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை (சென்னை-சென்ட்ரல்)
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பிரதிநிதிகள், சம்பந்தபட்ட மையத்திற்குச் சென்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். 

"பெண்"ணாக இருத்தலின் வலி...

என் புன்னகை என்னும்
முகமூடிக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டு இருப்பது என் முகமல்ல..
எப்பொழுதும்
அழுதுகொண்டே இருக்கும்
என் இதயம்...
"பெண்"ணென்ற பால்மை வேறுபாட்டின்
வரையறைகளுக்குள்
வார்க்கப்பட்டிருப்பதென்னவோ
வாழ்வின் பெருந்துயரம் தான் தோழி!

நீ
நேசிக்கப்படுவதற்கும்
வாசிக்கப்படுவதற்கும்
செவிகூர்ந்து கேட்கப்படுவதற்கும் பின்னணியில்
நீயொரு "பெண்"ணாக இருத்தலின்
தாத்பர்யம் கூர்மைபெறுகிறது...
"உன்னுடையவை" என்பதான அனைத்துக்கும்
அளிக்கப்படும் பெறுமானம் - நீ
"அவள்" ஆக இருப்பதாலேயே
ஒருபடி தாழ்ந்துவிடுகிறது,
அன்றேல்,
"அவன்" ஆக இருப்பதினின்றும்
வித்தியாசப்படுகின்றது.

வீட்டிலோ வெளியிலோ
கடலிலோ கரையிலோ
காவியக் கதைகளிலோ
எல்லாவகையான வன்மம் தீர்த்தலிலும்
பெண்மை பாத்திரமாகிறது;
நெடுந் துயரத்தின் பாதை
நீண்டு விரிகிறது.

மொழியின் வழக்குக்குள் மட்டுமென்ன,
மானபங்கம் ஒருதலைப்பட்சமானதுதான்!
ஆற்றிலும் சேற்றிலும்
கால்புதைத்து நிமிர்ந்துசெல்லும்
"ஆண்குண"த்தின் மமதைக்கு
வாங்கப்படும் வக்காலத்துக்கள்
பெண்ணென்று வந்திடிலோ
ஆக்கத்தின் அழிவும்
சிரித்தலில் இழிவுமாய்
வகைதொகையின்றி வசைபாடுகின்றன!

பூமிக்கு உவமை சொல்லி
பொங்கியெழல் தவிர்த்ததுவும்...
கற்புக்கு ஒப்புசொல்லி
அதையே சூறையாடியதும்...
ஏய்ப்பதற்கும் மேய்ப்பதற்கும்
கால்நடைபோல் மாற்றியதும்
இன்று நேற்று உள்ளதுவா? - மனம்
மரத்துத்தான் போனதுண்மை!

சமையலுக்கும் சுமைகளுக்கும்
அமைந்ததிந்த வாழ்க்கையெனில்,
வேண்டாம் அது நமக்கு
இன்றே வா மறுதலிப்போம்!
இழிதலற்ற வாழ்வுநோக்கி
இனி புதிய யுகம் படைப்போம்!

டக்ளஸை ஏன் கைது செய்யவில்லை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...

தேடப்பட்டு வரும் குற்றவாளியான டக்ளஸ் தேவானாந்தா டெல்லி வந்தபோது அவரை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் ஈழப் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருநாவுக்கரசர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை 4ஆவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.   தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்ற டக்ளஸ், இலங்கை அரசின் ஆதரவாளராக மாறினார். அதன் பயனாக ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
 

இதற்கிடையே கொலை வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் வராததால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.   கடந்த ஆண்டு அவர் டெல்லிக்கு அரசு விருந்தினராக வந்தபோது அவரை கைது செய்யக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது. 


இதனால் பயந்துபோன டக்ளஸ் தனக்கு எதிரான கைது வாரண்டு உத்தரவையும், தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரி மனு செய்தார். தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார்.
 

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடந்தது.   அப்போது டக்ளசுக்கு ஜாமீன் கொடுக்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து டக்ளசுக்கு ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். டக்ளஸ் ஐகோர்ட்டில் சரண் அடைந்து தன் மீதான உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.
 

ஆனால் இதுவரை அவர் சரண் அடையவில்லை . இந்த நிலையில், டக்ளஸை எதிராக  தொடரப்பட்டுள்ள பொது நல  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தேசியகீதத்தில் 'சிந்த்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை எதிர்த்து மனு.

தேசியகீதத்தில் சிந்த் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்ட் என்பவர்.

1950ஆம் ஆண்டில் சிந்த் என்ற வார்த்தை சிந்து என மத்திய அரசால் மாற்றப்பட்டுவிட்டது. சிந்த் என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதியாயைக் குறிக்கும். சிந்து நதி இந்தியாவிலும் உள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நதியின் பெயர் சிந்து என மாற்றப்பட்டுவிட்ட பின்னரும், தேசிய கீதத்தில் சிந்த் என்றுதான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சமச்சீர் கல்வி - மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி: கருணாநிதி!

சமச்சீர் கல்வியின் வெற்றி சாமான்ய மக்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து கருணாநிதி கூறியதாவது:

சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா அரசுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது போல புதிய தலைமை செயலக வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சமச்சீர் கல்வி திட்டத்தை தாமதமாக செயல்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் இடைக்கால இழப்பீட்டை ஈடுசெய்ய கல்வியாளர்களை கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். சமச்சீர் கல்வியின் வெற்றி, சாமான்ய மக்களுக்கு, மாணவர்களுக்கு தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இதே தீர்ப்பு தி.மு.கழக ஆட்சியிலே உச்சநீதி மன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப் போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறையையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சமச்சீர் கல்விக்குக் கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

சுவிஸ் வங்கியில் என் கணக்கில் ரூ. 35 ஆயிரம் கோடியா?: இல்லை என்கிறார் கருணாநிதி!

சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதாக வெளியான செய்திக்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவையே என்ற தலைப்பிட்டு விக்கிலீக்ஸில் வெளியானதாகக் கூறி கடந்த சில நாள்களாக மின்னஞ்சல்கள் மூலம் பட்டியல் ஒன்று உலா வந்து கொண்டுள்ளது. அதில், கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாகவும் கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் கூறப்பட்டடிருந்தது. இந்த நிலையில் அதை மறுத்த கருணாநிதி, தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஒரு தமிழ் பத்திரிகை 35 ஆயிரம் கோடி சுவிஸ் வங்கியில் நான் போட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளது. எது பற்றியும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நிருபிக்க வேண்டும். தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு செய்வோம்.

புதிய தலைமை செயலகத்தை பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் ஒரு தகவல் வந்துள்ளது. யாரோ தவறான தகவலை கொடுத்து இருக்கிறார்கள். புதிய தலைமை செயலகத்தை தனியாகவோ, அதிகாரிகளுடனோ சென்று பார்த்து பலருடைய கருத்துக்களை வெளியிட வேண்டும்.

தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது. புதிய தலைமை செயலகத்தில் ஆளுநர் உரை படிக்கப்பட்டு விவாதம் நடந்துள்ளது. இதே கட்டிடத்தில் தான் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது.   இந்த இடம் சட்டசபை நிகழ்வுகளுக்கு போதாது என்பதை ஏற்க கூடியதாக இல்லை.

இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

சமச்சீர் கல்வியே - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சமச்சீர் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் 10 தினங்களுக்குள்  தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையற்ற பாடங்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

எனினும் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  கால அவகாசம் கேட்கும் என்று தெரிகிறது.