அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 27, 2009

இந்து திருமணச்சட்டமும்,அதன் பலவீனங்களும் பகுதி2

இவ்விதம் பல்லாயிரமாண்டுகளாக இந்து சமூத்தில் வழமையாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பலதாரமணம் 1955ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டது.எனினும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் பல்வேறு வகை மக்களிடமிருந்தும் எதிர்ப்பு ஏற்ப்பட்டது.ராவ் கமிட்டியின் அறிக்கையின்படி இச்சட்த்தின் காரணமாக ஹிந்து சமூகத்தில் முறை தவறிய தொடர்புகள் அதிகரிப்பதுடன் மதமாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.அவ்வறிக்கை இவ்வாறு கூறுகிறது:-
the argument of the oppenents were that monogamy would lead to increased conculinage and conversion to islam which permits four wives.they were of the view that "if a man healthy and wealthy he should be allowed to marry again and why should he be deprived of a right which has been enjoyed by him for three thousand years?
ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே எனும் சட்டம் நெறி தவறிய தொடர்புகள் அதிகமாக வழிவகுப்பதுடன் உடலில் வலுவும் பொருளாதார வசதியும் உள்ள ஆண்மகன் நான்கு மனைவிகள் வரை மணம் புரிந்து கொள்ளலாம் " என அனுமதி அளிக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் பால் மதம் மாறுவதற்கும் காரணமாக அமைந்து விடும்.அத்துடன் மூவாயிரம் ஆண்டு காலமாக பயன் தந்து வந்த ஒன்றை அனுபவிக்கும் உரிமையை ஏன் ஒரு இந்துவுக்கு மறுக்க வேண்டும்?என எதிர்ப்பாளர்கள் வாதிட்டனர்.(studies in the hindu marriage and the special marriage acts p.261>
அவர்கள் தெரிவித்த அச்சம் உண்மையாயிற்று.நடைமுறையில் மருமணம் புரிய அவசியம் ஏற்பட்ட ஹிந்துக்கள் முஸ்லிமாக மாறி மணம் புரியும் தந்திரத்தை மேற்கொண்டனர்.ஏன் எனில் பலதார மண்ச் சட்டத்தின் அடிப்படையில் ஒருவன் குற்றவாளி என நிரூபிக்கப்பட இரண்டு நிபந்தனைகளை இந்து திருமணச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது.ஒன்று மணம் புரியும் ஆண் பெண் இருவரும் இந்துவாக இருக்கவேண்டும்.இரண்டு, திருமணம் இந்து திருமண முறைப்படி அவசியமான சடங்குகளுடன் நடந்திருக்கவேண்டும்.
ஒருவன் மதம் மாறி முஸ்லிம் என்ற முறையில் மணம் புரிந்தால் முதல் நிபந்தனை அடிபட்டுவிடுகிறது.இரண்டாவது நிபந்தனையில் solemnize சடங்குகளுடன் எனும் வார்த்தை இடம் பெற்றுள்ளது.இதன்படி ஒருவன் மணம் புரியும்பொழுது இந்து மதம் குறிப்பிடும் அனுஷ்டானங்கள்
சடங்குகள்,சம்பிர தாயங்களில் ஒன்றிரண்டு விடுபட்டாலும் அந்தத் திருமணம் நடைபெற்றதாகவே கருத இயலாது.இதன்படி ஒருவன் இரண்டாம் திருமணத்தைச் செய்த குற்றம் நிரூபிக்கப்பட வேண்டுமானால் இரண்டு திருமணமும் முறைப்படி நடைபெற்றதாக முதலில் நிரூபிக்கவேண்டும்.இரண்டில் ஒன்று முறை தவறி
நடைபெற்றிருந்தாலும் இந்தத்தடை சட்டத்தின் கீழ் அவனைக் குற்றவாளியாக்க முடியாது.சட்டத்திலுள்ள இந்தக் குறைபாட்டினைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் வேண்டுமென்றே ஒரு முக்கிய சடங்கினை விட்டு விட்டு இன்னொரு மனைவியை மணமுடித்துக் கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.Before a person can be found punishable under this section it is necessary to determine the fact wheather there had been a subsequent marriage of a spouse during the lifetime of the other spouse from that point it has to be determined wheather the prior marriage was duly solemnized in case where either of the two marriage is found to be not duly soleminzed the position is that in the eye of the law there is only one legal and valid marriage making the charge of bigmay unsustanaible.the word "SOLEMNIZE"means to celebrate the marriage with proper ceremonies and in due form.it follows there fore that unless the marriage is celebrated or performed with proper ceremonies and in due form it cannot be said to be solemnized.
எனவே முதல் மனைவி இருக்க மறுமணம் செய்ய எண்ணும் இந்துவிற்கு இரு
வழிகள் இருக்கின்றன.ஒன்று மதம் மாறி மணம் புரிவது அல்லது தன் மதம் வலியுறுத்தும் சடங்குகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டு திருமணம் செய்வது.இந்த இரண்டில் எதனைச் செய்தாலும் 1955ம் ஆண்டு திருமணச் சட்டம் அவனை ஒன்றும் செய்ய இயலாது.
திட்டமிட்ட சூழ்ச்சி. தொடரும்

No comments: