அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 2, 2009

ஈரான் குண்டுவெடிப்பு பின்னணியில் அமெரிக்கா

 

நேற்று ஈரானிலுள்ள சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும்சஹதான் பகுதியில் உள்ள ஷியா மஸ்ஜிதில் குண்டு வெடித்து19 பேர் மரணமடைந்த கொடுஞ்செயலுக்கு பின்னால் அமெரிக்காஎன்று ஈரானின் ஸிஸ்தான் மகாண துணை கவர்னர் ஜலால்ஸய்யாஹ் கூறியுள்ளார்.குண்டு வெடிப்பு சம்பந்தமாககைதுச்செய்யப்பட்ட 3 நபர்களிலிருந்து இது சம்பந்தமான அதிகவிபரங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

 

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கெதிரானதாக்குதல் தொடர்கிறது.

 

நேற்று சிட்னியில் ஹாரிஸ் பார்க் அருகிலுள்ள வீட்டிலிருந்தராஜேஷ் குமார் என்ற மாணவரை ஒரு கும்பல் பெட்ரோல்பாம்ப் எறிந்து தாக்கியது.இதில் 30 சதவீதம் உடல் எரிந்தநிலையில் மருத்துவமனையில் அவர்சேர்க்கப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் கத்திகுத்து காயமடைந்தபல்ஜிந்தர் சிங் மருத்துவமனையிலிருந்து டிஸ் சார்ஜ்செய்யப்பட்டார்.ஆனால் கத்திகுத்து காயம்பட்டு அவசர சிகிட்சைபிரிவில் இருக்கும் ஸ்ராவண்குமார் நிலையில்மாற்றமில்லை.இது சம்பந்தமாக 5 நபர்களை போலீஸ்கைதுச்செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்தியமாணவர்களுக்கெதிரான இந்த தாக்குதல்கள் இனவெறி என்றும்இதில் சம்பந்தப்பட்ட நபர்களை உடன் கைதுச்செய்து சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என்றும் ஆஸ்திரேலியாவிலுள்ளஇந்தியன் ஹைகமிஷனர் சுஜாதா சிங் விக்டோரியா பிரதமர்ஜோண் பிரம்பியை சந்தித்துவிட்டு இதனைவலியுறுத்தினார்.இத்தைய தாக்குதல்களை தடுக்க அரசு உடன்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

விடுதலை புலிகளுக்கெதிரான கடைசிக்கட்டதாக்குதலில்20000 தமிழர்கள் கொலை

 

 

விடுதலை புலிகளுக்கெதிரான கடைசிக்கட்டதாக்குதலில் 20000தமிழர்கள்  கொல்லப்பட்டதாக டைம் பத்திரிகைகூறியுள்ளது.ஏப்ரல் 27 முதல் மே19 வரை தினமும் 1000 நபர்கள்கொல்லப்பட்டதாக கூறும் டைம் பத்திரிகை இதற்கு புலிகளும்இலங்கை ராணுவமும் தான் காரணம் என கூறியுள்ளதுஆனால்இதனை இருதரப்பும் மறுத்துள்ளது.

 

ஹமாஸ் தலைவர்களில் ஒருவரை இஸ்ரேலிய ராணுவம்சுட்டுக்கொன்றது.

 

ஃபலஸ்தீனிலுள்ள மேற்குகரையில் வசித்துவந்த ஹமாஸின்போராளிகளுக்கு பயிற்ச்சி வழங்கும் ஆபித் மஜீத் தாவூதைவீட்டில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவவீரன் சுட்டுக்கொன்றான்.1995இல் குண்டுவெடிப்பில்குற்றஞ்சாட்டப்பட்டு 5 வருடங்கள் சிறையில் கழித்தவர்தான்தாவூத்.இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கெதிராக ஆயுதமெடுத்துபோராட ஃபலஸ்தீன அதிகாரிகள் தயாராகவேண்டுமென்று ஹமாஸின் ஃபவ்சி ஃப்ர்ஹூம் கூறியுள்ளார்.

 

No comments: