அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 5, 2009

ம.பி., பள்ளிகளில் போஜன மந்திரம் அறிமுகம்

போபால் : மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் மதிய உணவுக்கு முன் மாணவர்கள் போஜன மந்திரம் சொல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் திட்டம் அமல்படுத்தப் பட் டுள் ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள் ளிட்டோர் சூரிய நமஸ்காரம் செய்து, கடந்த ஜனவரி மாதம் இந்த திட்டத்தை துவக்கி வைத்தனர். இந்நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் போஜன மந்திரத்தை சொல்ல வேண்டும் என, கல் வித்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் அறிவுறுத்தியுள்ளார்.



இது குறித்து அர்ச்சனா கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன் போஜன மந் திரத்தை உச்சரிக்க கேட்டேன். நல்ல பொ ருள் பொதிந்த இந்த மந்திரத்தை இயற்றியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், நல்ல சிந்தனையை அளிக்கவல்ல இந்த மந்திரத்தை மாணவர்கள் படிக்க வேண்டும், என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. இந்த மந்திரம் மத ரீதியானது அல்ல. எந்த மதத்தினரும் சொல்லலாம்."உணவை தந்து உடலை காக்க வைக்கும் இறைவா! இந்த உடல் மனம் மற்றும் செல்வத்தின் மூலம் எனது தாய் நாட்டை காக்க செய்வாய்' என்பது தான் போஜன மந்திரத்தின் பொருள். அடுத்த மாதம் 5ம் தேதியிலிருந்து 4,000 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மதிய நேரத்தில் போஜன மந்திரத்தை சொல்லி விட்டு சாப்பிடலாம்.சம்ஸ்கிருதத்தில் இந்த மந்திரம் உள்ளதால் பிற மதத்தினர் இதை சொல்வதற்கு தயங்கலாம். எனவே, இந்த மந்திரத்தை சொல்லி தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவைப்பட்டால் மற்ற பள்ளி மாணவர்களும் இந்த போஜன மந்திரத்தை சொல்லலாம்.இவ்வாறு அர்ச்சனா

No comments: