
5 வருடம் முழுமையாக ஆட்சி புரிந்தது மட்டுமல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம் நிர்வாகத்திலும் ஆட்சியிலும் ரெட்டியின் திறமையை.இன்னொருவகையில் கூறினால் காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்குப்பெற்ற அபூர்வமான சில தலைவர்களில் ஒருவர் ரெட்டி.
1949 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் ஆந்திரபிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்திலிலுள்ள புலிவெண்டுலு கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் ரெட்டி.ஒய்.எஸ்.ராஜரெட்டியின் 5 ஆண்மக்களில் மூத்தவர் ராஜசேகரரெட்டி.காங்கிரஸ் கட்சியில் மண்டலத்தலைவராகயிருந்த தந்தையின் அரசியல் பாரம்பரியத்தை பின்பற்றி அரசியலில் இறங்கிய ராஜசேகரரெட்டி மருத்துவம் படிக்கும்போதே மண்டல அரசியலில் பிரபலமானார்.மருத்துவ பட்டம் பெற்ற பிறகு ஜம்மாலமாடுகு மிஷன் மருத்துவமனையில் மெடிக்கல் ஆஃபீஸராக பணியைத்துவக்கினார்.1973 ஆம் ஆண்டு 70 படுக்கை வசதிக்கொண்ட விசாலமான மருத்தவமனையாக மாற்றி சாதித்துக்காட்டினார்.
1978 ஆம் ஆண்டு ரெட்டி முழு அரசியலில் களமிறங்கினார்.புலிவெண்டுலு சட்டசபைத்தொகுதியிலிருந்து உறுப்பினராக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1980 முதல் 1983 வரை மாநில அமைச்சராக பணியாற்றினார்.1983 ஆம் ஆண்டு என்.டி.ராமராவ் பெரும் பெரும்பாண்மை பெற்று சாதனை படைத்து முதல்வராக பதவியேற்றக்காலக்கட்டத்தில் கூட புலிவெண்டுலு சட்டமன்றம் ரெட்டியை கைவிடவில்லை.ரெட்டியின் திறமையை கண்டுக்கொண்ட இந்திராகாந்தி ரெட்டியின் 34 ஆம் வயதில் ஆந்திரமாநிலத்தின் காங்கிரஸ்தலைவராக நியமனம் செய்தார்.
1989 ஆம் ஆண்டு கடப்பா மக்களவைத்தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1999 வரை இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராகயிருந்த ரெட்டி பின்னர் மாநில அரசியலில் கவனத்தை திருப்பினார்.இந்தக்காலக்கட்டத்தில் அவர் மாநில காங்கிரஸ் தலைவராகயிருந்தார்.தேர்தல்களில் கட்சியை முன்னணியில் வழி நடத்தியவர் ரெட்டி.சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றினார்.2003 ஆம் ஆண்டு தெலுங்குதேசத்தின் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து சுட்டெரிக்கும் கடும்வெயிலில் மாநிலம் முழுவதும் 64 நாள்கள் நீண்ட 1400 மைல்கள் கொண்ட யாத்திரையை ரெட்டி மேற்க்கொண்டார்.இது அவரது அரசியல் வாழ்வில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியது.இந்த யாத்திரை மூலம் பொதுமக்களின் யதார்த்த பிரச்சனைகள் என்ன என்பதை ரெட்டி புரிந்துக்கொண்டார்.தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற ரெட்டி விவசாயிகளுக்கு சலுகையில் மின்சாரம்,கடன் தள்ளுபடி,ரெண்டு ரூபாய் அரிசி,கம்யூனிடி ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்கீம் ஆகிய ஏழைகளுக்கு நலன்பயக்கும் திட்டங்களின் மூலம் மக்கள் மனங்களில் ஆழமான இடத்தை பிடித்தார் ரெட்டி.முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தீவிரம் காட்டியவர் ரெட்டி.
No comments:
Post a Comment