திருநெல்வேலி: மதுரையில் இந்து முன்னணி தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை, ஜூலை 7ம் தேதிக்கு நெல்லை தடா கோர்ட் ஒத்திவைத்தது. மதுரையில் இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன், மர்ம கும்பலால் கடந்த 10.10.1994 ல் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக ராஜா உசேன், சுபைதர், ஜாகீர் உசேன், நயினா முகம்மது, அப்துல் அஜிஸ் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கு நெல்லையிலுள்ள தென்மாவட்டங்களுக்கான தடா கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று வழக்கு விசாரணையின் போது, பாளை., சிறையிலுள்ள அப்துல் அஜிஸ் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டார். மற்றவர்கள் வெவ்வேறு சிறைகளில் உள்ளதால் ஆஜர்படுத்தப்படவில்லை. வழக்கு விசாரணையை ஜூலை 7 க்கு, நீதிபதி விஜயராகவன் ஒத்திவைத்தார். இந்நிலையில் கோர்ட் வளாகத்தில் அப்துல் அஜிசை, மர்ம நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படமெடுத்தார். அதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின் அவரை விடுவித்தனர்.
No comments:
Post a Comment