அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, June 24, 2009

சென்னையில் பிடிபட்ட அல்ஜீரிய நபர் விடுவிப்பு


சென்னை: சென்னை விமான நிலையத்தில், பிடிபட்ட அல்ஜீரிய நபர் மீது எந்தவிதமான பயங்கரவாத வழக்கும் இல்லை என்று அல்ஜீரிய அரசு அறிவித்ததை தொடர்ந்து, அவரை தாம்பரம் கோர்ட் நேற்று விடுவித்தது.கடந்த 1992ம் ஆண்டு, அல்ஜீரியா நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஒன்பது பேர் இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து, அந்நாட்டு போலீசார் நடத்திய விசாரணையில், அல்ஜீரியாவைச் சேர்ந்த அப்பாசி மதானி என்பவர் கைது செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். மேலும், அப்பாசி மதானியின் உறவினர்கள் பலர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

இவர்களை, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், "சிவப்பு பட்டியலில்' வைத்தது. இந்த வகையில், அப்பாசி மதானியின் மகனான சலீம் அப்பாசி மீதும் அந்நாட்டு அரசு வழக்கு பதிவு செய்திருந்தது.சலீம் அப்பாசி குறித்த தகவல்களை இன்டர்போல் மூலம் சி.பி.ஐ.,க்கு வந்தன. உடனே, அனைத்து விமான நிலையங்களுக்கும் சலீம் அப்பாசி குறித்த தகவல் அனுப்பப்பட்டது. வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு சலீம் அப்பாசி கத்தார் சென்று, அங்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை உருவாக்கும் நிறுவனம் ஒன்றை துவக்கினார்.

இவரது ஏஜண்டுகளில் ஒருவர், மின் உற்பத்தி கருவிகளை கொள்முதல் செய்வது குறித்து கர்நாடக அரசை தொடர்பு கொண்டார். இதையடுத்து, கர்நாடக திட்டக்குழுவினருடன் சலீம் அப்பாசி பேச்சுவார்த்தை நடத்த கோலாலம்பூர் வழியாக கடந்த 18ம் தேதி வந்த போது, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். விமான நிலைய போலீசார் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.பின், அவர் கைது செய்யப்பட்ட தகவலை அல்ஜீரிய நாட்டு அரசுக்கு அனுப்பினர். அதற்கு, "சலீம் அப்பாசி மீது தற்போது எந்த வழக்கும் இல்லை. எனவே, அவர் எங்களின் விசாரணைக்கு தேவையில்லை' என்று அல்ஜீரிய அரசு பதில் அனுப்பியது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சலீம் அப்பாசியை போலீசார் நேற்று தாம்பரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் சரவணன் முன் ஆஜர்படுத்தினர். அவர் மீது எந்த வழக்கும் இல்லாத காரணத்தினால், கோர்ட் அவரை விடுவித்தது.



No comments: