லொள்ளு+கவர்ச்சி ஆகிய இரண்டையும் மூலதனமாக கொண்டு சினிமாவில் குப்பை கொட்டிவரும் ஷக்தி சிதம்பரம் என்பவரின்இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ராஜாதி ராஜா. இப்படம் பற்றி தினமும் வித்தியாசமான விளம்பரங்கள் நாளிதழ்களில் கொடுக்கப்படுகிறது. அந்தவிளம்பரங்களில் மதங்களை முன்னிலைப்படுத்த்தியும் வார்த்தைகள் இடம் பெறுகிறது.
'சிலுவைன்னா ஏசு; ராஜான்னா மாஸு.
இந்த வரிசையில் நம் ஒப்பற்ற தலைவர் நபி[ஸல்] அவர்களை சம்மந்தப்படுத்தி விளம்பரம் தந்துள்ளார்கள் [பார்க்க; படம்]
இந்த வரிசையில் நம் ஒப்பற்ற தலைவர் நபி[ஸல்] அவர்களை சம்மந்தப்படுத்தி விளம்பரம் தந்துள்ளார்கள் [பார்க்க; படம்]
இது குறித்து சுன்னத் வல்ஜமாத் ஐக்கியப்பேரவைபொதுச்செயலாளர் மேலை நாசர் அவர்கள்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் 'மக்கா மதினா' படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, 'நபிகள்னா மெக்கா ராஜான்னா பக்கா' என்ற வசனத்தையும் போடப்பட்டிருக்கின்ற அச்செய்தி (விளம்பரம்) ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது. நபிகள் நாயகத்துக்கும், சினிமா துறைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இச்செயல், இசுலாமியர்களின் மார்க்கத்தை இழிவுபடுத்துகின்ற செயலாகவும் இருக்கின்றது.ஆகவே இச்செயலை செய்த படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.இயக்குனர் சக்தி சிதம்பரம் பத்திரிகை வாயிலாக பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தவறினால், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்றும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சுன்னத் வல் ஜமாஅத் மசூதி கூட்டமைப்புத் தலைவர் எம்.முகம்மது சிக்கந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் சக்தி சிதம்பரம் உடனடியாக இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment