அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, September 25, 2010

ராமர் கோயில் கட்டும் முடிவில் மாற்றமில்லை: அருண் ஜேட்லி

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்ற எங்களின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என, பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி வீட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, கடந்த 60 ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆனாலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக எந்தவித தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை. இனியும் இந்த வழக்கில் தாமதம் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்ற எங்களின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. இதுவரை இந்தப் பிரச்னையில் தீர்வு ஏற்படாததற்கு நீதிமன்றத்தின் தாமதமே காரணம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25ஆம் தேதி சோம்நாத் ஆலயத்துக்கு செல்வதை அத்வானி வழக்கமாகக் கொண்டுள்ளார். சோம்நாத்துக்கு அவர் புறப்பட்டு சென்றுவிட்டதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை

No comments: