அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
Thanks :Samarsam.
நபிமொழி : 103 - NABIMOZI – 103
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'உணவின் (தட்டின்) நடுவில் பரக்கத் இறங்குகிறது. (எனவே) அதன் ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள். அதன் நடுவிலிருந்து சாப்பிடாதீர்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது,திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 744)
ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''விரல்களையும்,தட்டையும் வழித்து உண்ண நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டு நீங்கள் ''உங்கள் உணவில் எதில் பரக்கத் இருந்தது என்பதை அறியமாட்டீர்கள்''என்று கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 750)
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'உங்கள் ஒருவரின் உணவு (கீழே சிதறி) விழுந்து விட்டால்,அதை அவர் எடுத்து,அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி,அதைச் சாப்பிடட்டும்! ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம். தன் விரல்களை சூப்பும் வரை துண்டால் தன் கையைத் துடைக்க வேண்டாம். தன் உணவில் எதில் ''பரக்கத்'' உண்டு என்பதை அவர் அறியமாட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 751)
ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஷைத்தான் உங்களில் ஒருவரது அனைத்துக் காரியங்களிலும்,
வருகை தருகிறான். அவன் உணவு உண்ணும் போது கூட வருகிறான். உங்கள் ஒருவரது உணவு கீழே விழுந்து விட்டால் அதை அவர் எடுத்து,அதன் தூசியை அகற்றி விட்டு,பின்பு அதை சாப்பிடட்டும்! ஷைத்தானுக்காக அதனை விட்டு விட வேண்டாம். சாப்பிட்டு முடித்து விட்டால் தன் விரல்களை சூப்பட்டும்! தன் உணவில் எதில் பரக்கத் உள்ளது என அவர் அறியமாட்டார் என்று நபி (ஸல்)கூறினார்கள்.'' (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 752)
ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவரின் உணவு இரண்டு நபர்களுக்குப் போதும். இரண்டு பேர் உணவு நான்கு நபர்களுக்குப் போதும். நான்கு நபர் உணவு,எட்டு நபர்களுக்குப் போதுமாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 756)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவனுக்கு வறுமை ஏற்பட்டு, அதை அவன் மக்களிடம் கூறினால், அவனது வறுமை அகற்றப்பட மாட்டாது, அவன் அதை அல்லாஹ்விடம் கூறினால், உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ உணவு தருவது மூலம் அவனுக்கு வறுமையை அல்லாஹ் நீக்குவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்
நபிமொழி : 081 - NABIMOZI – 081
ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அநீதம் செய்வது, மறுமை நாளின் இருள்களாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக கஞ்சத்தனம், உங்களுக்கு முன் இருந்தோரை அழித்து விட்டது. அவர்கள் (கொலை மூலம்) தங்களின் ரத்தத்தை ஓட்டிக் கொள்ளவும், தங்களுக்குத் தடை செய்யப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை அது தூண்டி விட்டது'' என்று நபி (ஸல்)கூறினார்கள்.(முஸ்லிம்)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் பசியாக உள்ளேன் என்று' கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியரில் ஒருவரிடம் ஆள் அனுப்பினார்கள். ''உங்களை சத்தியம் மூலம் அனுப்பியவன் மீது சத்தியமாக, என்னிடம் தண்ணீர் தவிர வேறு இல்லை' என்று அவர்களின் மனைவி கூறினார். பின்பு மற்றொரு மனைவியிடம் அனுப்பினார்கள். அதுபோலவே அவர்களும் கூறினார்கள். ''சத்தியத்தின் மூலம் உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக, தண்ணீர் தவிர என்னிடம் எதுவும் இல்லை' என்றே (அவர்கள் மனைவியர்) அனைவரும் கூறினர். ''இன்றைய இரவு (இவரை) விருந்தாளியாக்கிக் கொள்பவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அன்சாரிகளில் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! நான் (ஏற்கிறேன்)'' என்று கூறிவிட்டு, தன் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியிடம், 'நபி(ஸல்) அவர்களின் விருந்தாளியை நீ கண்ணியப்படுத்துவாயாக!' என்று கூறினார்.
மற்றொரு அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது:
அவர் தன் மனைவியிடம், ''உன்னிடம் எதுவும் உள்ளதா?'' என்று கேட்டார்.
''என் குழந்தைகளுக்குரிய உணவைத்தவிர வேறு இல்லை'' என்று அவர் மனைவி கூறினார். ஏதேனும் அவர்களுக்கு தந்திரம் செய்து அவர்கள் இரவு உணவைக் கேட்டால், அவர்களை தூங்கச் செய்வாயாக! நம் விருந்தாளி வந்ததும், விளக்கை நீ அணைத்து விடு! நாம் சாப்பிடுவது போல் அவரிடம் காட்டிக் கொள்வோம் என்று கூறினார். (அவர் வந்ததும்)அவர்கள் உட்கார்ந்தார்கள். விருந்தாளி சாப்பிட்டார். இருவரும் பசியாகவே இரவைக் கழித்தார்கள். காலை நேரம் வந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். அவரிடம், ''இரவு உங்கள் விருந்து மூலம் உங்களிருவரின் விருந்தாளியிடம் நடந்து கொண்டது குறித்து அல்லாஹ் மகிழ்ச்சி அடைந்துவிட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 564)
No comments:
Post a Comment