அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, June 14, 2009

கமலா சுரையாவுக்குக் கொலை மிரட்டல்கள்/கொலை முயற்சிகள் இருந்தன. அவை எங்கிருந்து வந்தன என்பதை அவரே கூறுகிறார்....




"கொலை மிரட்டல்கள் ... அது ஏராளம். இஸ்லாத்திற்கு மாறிய நாளிலிருந்து ஆரம்பித்தது அது. இதனால் யாருக்கு என்ன நஷ்டம்?

அவ்வப்போது காவல்துறையினர் வந்து ஆலோசனைகள் கூறிச் செல்வர். இப்போதும் சில நாட்களுக்கு முன்னர், இங்குத் தொலைபேசியை மாற்றி வைத்து, நேரடியாகக் காவல்துறை கண்ட்ரோல் அறையுடன் இணைத்துள்ளனர்.

அழைப்பவர்களின் எண்ணும் தெரிவதுபோல் காலர் ஐடி மெஷின் வைத்துள்ளனர்."



"எழுத்தச்சன் விருது வழங்க, என்னை அழைத்தனர். நான் வீட்டை விட்டு இனி எங்கும் போவதில்லை எனக் கூறி விட்டேன். முக்கியமாக பப்ளிக் மீட்டிங்குகளுக்கு நான் வருவதில்லை என அனைத்தையும் ரத்து செய்து விட்டேன்.


என்னைக் கொல்ல நினைப்பவர்கள், அந்த இடத்தில் ஒரு குண்டைக் கொண்டு வந்து போட்டு விட்டால் போதும்தானே? நான் இந்த வயசுக்குப் பிறகு இறப்பதால் எனக்கொரு இழப்பும் இல்லை. ஆனால், வாழ வேண்டிய இன்னும் ஒரு நூறு பேர் எனக்காக இறப்பதை நான் விரும்பவில்லை"



"கொச்சியில் இருக்கும் போதும் அப்படித்தான். ஆனால், அங்குக் காவல்துறைக்கும் மேலாக எனக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பாக இருந்தனர். அப்படித்தான் சொல்வேன். கமாண்டோக்கள்தான்.


8 பிள்ளைகள். என்னை உம்மா என்றுதான் அழைப்பார்கள். N D Fபைச் சேர்ந்தப் பிள்ளைகள். யாராவது உணவு தந்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி என்னைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர்.



அதிலும் குறிப்பாகப் பெண்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். சில வேளைகளில் சில பெண்கள் வலுக்கட்டாயமாக என் வாயில் மிட்டாய்களைத் திணிப்பர். அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர்களை எதிர்ப்பதில்லை.


வாயில் வாங்கிக் கொண்டு அவர்களைக் காணாமல், குளியலறைச் சென்று துப்பி விடுவேன். அந்தப் பிள்ளைகள் கண்டால் கொதித்து விடுவார்கள். பின்னர் அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தப் பின்னரே என்னைச் சாப்பிட அனுமதிப்பர். ஒரு முறை அப்படித்தான், ஒரு பெண் கொண்டு வந்த மிட்டாயை உடனே சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள்.


சமது அதை வாங்கி முதலில் சாப்பிட்டுப் பார்த்தான். அதில் என்னைக் கொல்ல விஷம் வைக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேரம், பல மருத்துவர்கள் போராடி சமதைக் காப்பாற்றினர். இப்போதும் என்னால் அதை மறக்க முடியாது. மற்றொரு முறை, ஒரு பெண் பிரியாணி செய்து கொண்டு வந்திருந்தாள். அதையும் முதலில் சாப்பிட்ட சமது மீண்டும் ஒருமுறை அதே போன்று மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பினான்.


என்னைக் கொல்வதற்கு அப்படி என்ன நான் அவர்களுக்குத் துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. எனக்கும் இந்து மதம் தெரியும் தானே? அதில் அப்படி ஒன்றும் இல்லை."


No comments: