![]() |
![]() உடலில் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகளிலிருந்து பெரிய பிரச்சனைகள் வரை அனைத்துக்குமே அடிப்படையாக இருப்பது உணவு பழக்க வழக்கமே. சரியான காலங்களில் சரியான உணவுகளை உட்கொண்டோம் எனில், தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுவதை எளிதில் சமாளிக்க முடியும். வெப்பக்காலங்களில் உட்கொள்வதற்குப் பொருத்தமானதும் உட்கொள்ளக் கூடாததுமான உணவு பொருட்களின் சிறு பட்டியல் கீழே. இதனை ஓரளவாவது பேணினால் வெப்பக்காலங்களில் நீரிழப்பினால் ஏற்படும் பலவித பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். வெப்பக்காலங்களில், * உடலுக்குக் குளிர்ச்சி தரும் கீரைகள், நீர்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது. அது உடலிலுள்ள நீர் நன்கு பிரிய உதவுகிறது. * கோடைக் காலத்தில் நீராகாரம் காலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறிவிடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது. அதனைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடலைக் குளிர்விக்கும். நன்றி: திருப்பட்டினம் என்.ஜரினா பானு |
No comments:
Post a Comment