அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, April 21, 2011

கொட்டித்தீர்த்த கோடைமழை! மக்கள் உற்சாகம்

சென்னை : சென்னை நகரில் இன்று காலையில் திடீரென பெய்த கனமழையால் கடும் வெப்பத்தினால் தலை காய்ந்து போயிருந்த சென்னைவாசிகள் குளிர்ந்த காற்றினால் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னையில் இன்று காலை 10.30 மணி அளவில் திடீரென கன மழை கொட்டியது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைககளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தமிழகத்தில் மார்ச் முதலே கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது 100 டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கிறது. இதுபோன்ற வெப்பநிலை மே மாதத்தில்தான் காணப்படும். ஆனால் தொடக்கத்திலேயே வெயில் கடுமையாக இருக்கிறது. மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் தற்போதே வெயில் கொடுமையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வெயில் காரணமாக கடலில் இருந்து வீசும் காற்று நிலப்பகுதிக்கு வரவில்லை. இதனால் வானில் வெப்ப சலனம் ஏற்பட்டு, இன்று காலை ஆங்காங்கே கருமேகக்கூட்டம் சூழ்ந்தது. பிறகு காலை 10.30 மணி அளவில் ஆலந்தூர், பரங்கிமலை, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், பகுதியில் திடீரென கன மழை கொட்டத்துவங்கியது சுமார் 15 நிமிடங்கள் கொட்டித்தீர்த்த மழையால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி பரவியதால் வாகன ஓட்டிகளும், மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இதுபோல வேளச்சேரி, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம், பகுதியில் மழை மேகம் சூழ்ந்தது. இதனால் கோடை வெயிலின் கடுமை இன்று சென்னையின் பல பகுதிகளில் குறைந்து காணப்படுகிறது.

No comments: