அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 14, 2011

1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியைத் தொடர உத்தரவு

1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்று  தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சியின் போது கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு ஆகியவற்றில் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தலுக்குப்பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுக அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், பழைய கல்வி முறையே தொடரும் என்று அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 1 மற்றும்  6ம் வகுப்புகளூக்கு இந்த ஆண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல் செய்வது பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் தினமும் விசாரித்து ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

No comments: