சென்னை, பிப். 7: தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் நிஸôர் அகமது கட்சிக் கொடி ஏற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
முஸ்லிம்கள் அடைந்துள்ள பின்னடைவுக்கும், பாதிப்புகளுக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு போதுமானதல்ல. எனவே, முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சமயம், மொழி வழிச் சிறுபான்மையினரின் சமூக பொருளாதார நிலையை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா சமர்ப்பித்த பரிந்துரைகளை, மத்திய அரசு வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்து உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பூரண மதுவிலக்கை தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க அமல்படுத்த வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை உருது மொழியில் எழுத விதிக்கப்பட்டிருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், பிலால்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். உலமாக்களுக்கு ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரட்டைமலை சீனிவாசன் நினைவுப் பேரவைத் தலைவர் எஸ்.என். நடராஜன், பேராயர் எஸ்றா சற்குணம், பத்திரிகையாளர் வீரபாண்டியன், தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டோர் பேசினர்.
No comments:
Post a Comment