தன் மூதாதையர் ஏற்படுத்திய அந்த கொடிய ஜாதிய ஏற்றத்தாழ்வில் சுகம் காண்ட இப்பார்ப்பன துவேஷக்கும்பல், தன் அப்பன் பாட்டன் வகுத்த ஜாதி கோரசிந்தனையில் சிக்குண்டுள்ள காரணத்தால் இஸ்லாத்திலும் ஜாதிகள் உண்டு, இன வேற்றுமை உள்ளது என்று உளறிக் கொட்டியுள்ளது. அந்த அறிவுகெட்ட ஜென்மங்களின் இத்தகைய குடிபோதை உளரல்களுக் கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு கீழ்த்தரமான நிலையில் முஸ்லீம்களாகிய நம்மை அல்லாஹ் ஒருபோதும் வைக்கவில்லை.
இருப்பினும் தமிழ் இணையத்தில் இவர்கள் ஏற்படுத்திவிட்ட களங்கத்தை முஸ்லிம்களாகிய நாம் நீக்கி, தமிழ் இணையத்தை சுத்தப்படுத்திடக் கடமைப்பட்டுள்ளோம். உலகில் இனம்-நிறம்-மொழி வேற்றுமைகளை ஒழித்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதற்கு பல்லாயிரக்கனக்கான சான்றுகள் இருப்பினும் அதில் சிறு பகுதியை மட்டும் தற்போதைக்கு இணைய வாசர்களான உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.
இஸ்லாத்தை பற்றி நன்கு ஆராய்ந்த காந்தியடிகள் இவ்வாறு கூறுகிறார்:
இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும், செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.
நமதுநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் உயரவில்லை. இன்னும் தீண்டத்தகாத மக்களாக வேண்டாத இனமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற பரிதாப நிலை இன்றுவரை நடைபெற்று கொண்டுருக்கின்றது. உதாரணமாக பாபு ஜகஜீவன்ராம் அரிஜன மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர். இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது காசியில் டாக்டர் சம்பூரணானந்து அவர்களின் சிலையை திறந்து வைத்தார். விடுவார்களா? இந்த மேல்ஜாதியினர் இந்த செய்தியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலை தீட்டுபட்டுவிட்டதென்று ஊர் உலகத்துக்கு பிரகடனப்படுத்தி கங்கைக்கு சென்று புனித நீர் கொண்டுவந்து சிலையைக் கழுவி சுத்தப்படுத்தியதை இந்த நாடு அவ்வளவு சீக்கீரத்தில் மறந்துவிடுமா என்ன? இதுபோல் தாழ்த்தப்பட்ட ஒரு நீதிபதி பதவிக்காலம் முடிந்தபிறகு அங்கே வேறொரு மேல்ஜாதிகாரர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.முதல்நாளில் வந்து இவ்வாறு கூறினார், இந்த நாற்காலியில் தாழ்த்தப்பட்ட ஒருவர் இருந்ததால் இது தீட்டுப்பட்டுவிட்டது ஆகவே இதை மாற்றுங்கள் என்று. நீதியை காப்பாற்றுகின்ற நீதிபதிக்கே இந்த கொடுமையென்றால் மற்றவர்களுக்கு?
இன்னொரு சம்பவம். திருச்சி பக்கத்திலே ஒரு கிராமம். அங்கே மேல்ஜாதி இந்து ஒருவருடைய தோட்டத்திலுள்ள கிணற்றில் அரிஜன சிறுவர்கள் குளித்து வந்தனர். இதைப் பார்த்த தோட்ட உரிமையாளர் கிணற்றில் கீழ்ஜாதி பையன்கள் குளிப்பதா என்று குமுறினார். அவரது கிணற்று தண்ணீரே தீட்டுப் பட்டுவிட்டதாக எண்ணி குமுறினார். ஒருநாள் அந்த கிணற்றிலே சிறுவர்களுடைய பிணங்கள் மிதந்தன. என்ன காரணம்? கிணற்றில் மின்சாரத்தைப் பாய்ச்சி இருந்தது. வழக்கம் போல் தண்ணீருக்குள் இறங்கிய சிறுவர்கள் பிணமாக மிதந்தனர். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் இந்திய சுதந்திர திருநாட்டில் இன்றும் நடந்து வருகிறது. என்ன கொடுமை!
இப்படிப்பட்ட இனவேற்றுமைகள் நம் இந்திய திருநாட்டில் மட்டுமல்ல உலக முழுவதும் பரவிகிடக்கின்றன, அதையெல்லாம் விவரித்தால் பக்கங்கள் போதாது. மேற்குலகம் நிறத்தாலும் இனத்தாலும் ஆண்டாண்டு காலம் அடிமைபட்டு இருந்ததை அந்த வேதாந்தம் பேசும் உலகம் வேடிக்கை பார்த்துகொண்டுதான் இருந்தது. யூதர்கள் இதே அடிப்படையில்தான் இஸ்ரவேலர்களை இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பினங்களாக கருதினர். தங்கள் மார்க்க சட்டதிட்டங்களில் கூட இஸ்ரவேலரல்லாத மக்களின் உரிமைகளையும், அந்தஸ்த்தையும் தாழ்த்தி வைத்தனர். கறுப்பர். வெள்ளையர் எனும் பாகுபாட்டின் காரணமாக ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் இன வேற்றுமைகள் காரணமாக தினம் தினம் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை இந்த நூற்றாண்டிலும் பார்த்து படித்து வருகிறோம். ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் பெருநிலத்தில் புகுந்து செவ்விந்தியர் மீது தம் ஆதிக்கத்தை கொடுமை புரிந்த நெடிய வரலாறுகள் உண்டு.மால்கம்எக்ஸ் என்பவர் நிறவேற்றுமைக்கெதிராக சத்தியபுரட்சி செய்து சத்தியத்தைக்கொண்டு நிறவேற்றுமையை நீர்மூலமாக்கினார்,விட்டார்களா நிறவெறியர்கள் மேடையில் அவர் பேசிகொண்டு இருக்கும்பொழுது பாடையில் ஏற்றிவிட்டார்கள்(சுட்டுக்கொன்றனர்) அந்த படுபாவிகள். உதாரணத்துக்காகத் தான் மேலேயுள்ள சம்பவங்கள்,ஆனால் வரலாற்றுப்பாதையில் புதைக்கப்பட்ட வடுக்கள் ஏராளம்.
இப்படி மனிதன் தனக்குள்ளாகவே வேறுபட்டுகிடக்கும் போதுதான் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளி அரேபியாவில் படிப்பறிவுயில்லாத சமூகத்தில் தோன்றியது.அந்த நேரத்தில் அம்மக்கள் நிறத்தாலும் குலத்தாலும் ஆண்டான்-அடிமை என்ற வேற்றுமையிலும் அடிமைபட்டுக் கிடந்தனர்.ஆனால் இஸ்லாம் தோன்றினப்பிறகு அனைத்து வேற்றுமைகளையும் அடித்தொழித்து அவர்களை உற்ற சகோதரர்களாக்கியது, ஒரே சமூகமாக்கியது. ஆகையால் தான் அப்போது பாதிக்குமேற்பட்ட உலகத்தையே ஆட்சி செய்கின்ற நிலைமையும் ஏற்பட்டது.இதைப்பார்த்து ரோமப்பேரரசு போன்ற வல்லரசுகள் நடுநடுங்கியது என்று வரலாறு நமக்கு இப்போது தெரிவிக்கின்றன.
எப்படி இப்படிப்பட்ட காட்டுமிரான்டித்தனமான மக்களை சகோதரர்களாக்கி ஒரே சமூகமாக்கியது.வேறெதுவும் இல்லை கீழேயுள்ள இறைவனின் குர்ஆனுடைய திருவசனங்களும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய போதனைகளும் மட்டும் தான்.
திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகின்றது, 'மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் - பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்' - என்று மாமறை மேலும் தெளிவு படுத்துகிறது. 'உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்.'நிச்சயமாக இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்' (44:13)
இறைவன் எல்லா மனிதர்களையும் அழைத்து மூன்று முக்கிய உண்மைகளை விளக்கியுள்ளான். உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஓரே ஆண், ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது.இன்று உலகில் காணப்படும் உங்கள் இனங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பூர்வீக இனத்தின் கிளைகளேயாகும். அந்த பூர்வீக இனம் ஒரு தாய் தந்தையிலிருந்து துவங்கியதேயாகும். சில மனிதர்கள் மட்டும் ஏதோ ஒரு தூய்மையான மூலப்பொருளிலிருந்தும் வேறு சிலர் அசுத்தமான மூலப்பொருளிலிருந்தும் உருவாக்கப்படவில்லை. ஒரே வழிமுறையில் தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்று திருமறை அறிவுறுத்துகிறது. ஒரு பகுதியில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாகவும் வெகு தொலைவில் வசிப்பவர்கள் நெருக்கமற்றவர்களாகவும்தான் இருக்க முடிந்தது.ஒரு இனம் மற்றோர் இனத்தைவிட தன்னை உயர்ந்ததாக கருதி வேற்றுமை பாராட்ட வேண்டுமென்பதில்லை. மாறாக, இறைவன் மானிட சமூகங்களை பல்வேறு சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்து அவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாக பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவம், நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரலி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாமைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரலி) என்ற நபித் தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)
பிலால் (ரழி) அவர்களின் தாயார் கருப்பான தோற்றத்தைக் கொண்டிருந்திருந்தாலும் கருப்பியின் மகனே என்று அழைத்தது அவர்களுக்கு வேதனை அளித்துவிட்டபடியால், அதற்காக நபி (ஸல்) அவர்களும் தன்னை கடிந்து கொண்டபடியால் தன் தவறை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கலுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள் அபூதர் (ரழி) அவர்கள். இப்படி அவர்களுக்கிடையில் தவறுகள் தெரியாமல் நடந்திருந்தும் அச்சமூகத்தில் நபியவர்கள் எடுத்துவைத்த சுமூகமான அறிவுரைகள் தான் இறைவனே வியந்து பாராட்டக்கூடிய ஒரு சமூதாயத்தை உருவாக்க முடிந்தது.
மற்றொரு சம்பவத்தில், ஒருமுறை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் போருக்காக தனது தோழர்களுடன் சென்றிருந்த போது முஹாஜிரீன்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவரை வேடிக்கைக்காக முதுகில் தட்டினார். இச்செயல் அந்த அன்சாரிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் 'ஓ' அன்சாரிகளே! எனக்கூவினார். இதையடுத்து அந்த முஹாஜிர் 'ஓ' முஹாஜிர்களே! என சப்தமிட்டார். இதை செவியுற்று வெழியே வந்த நபி(ஸல்) அவர்கள் "ஏன் ஜாஹிலியத்தின் (அறியாமையின்) அழைப்புகளை விடுக்கிறீர்கள்!" எனக்கேட்டார்கள்."அவர்களுக்கிடையில் என்ன தகராறு?" என வினவினர். அப்போது அங்கு நடந்த விஷயம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் 'இந்த மோசமான விஷயத்தை விட்டுவிடுங்கள்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இந்த இரு மனிதர்களும் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தமது உதவிக்காக அழைத்ததை இவ்விதமாகவே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இரு குழுவினரின் பெயர்களும் குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஏனெனில் இவர்களின் அழைப்பில் பிரிவினைவாதம் மேலோங்கியதே காரணம். இதில் எந்தளவிற்கு நபியவர்கள் மனிதர்களுக்குள் நிறவெறியே இருக்குக்கூடாது என்பதை அறியலாம். இன்றுயிருக்கின்ற நவீன உலகத்தில் அதீநவீன சட்டங்கள் இருந்தும் மனிதன் பல்வேறு இனவேறுபாட்டால் மூழ்கியிருக்கின்ற நிலையில் 1400ஆண்டுகளுக்கு முன்பு இருண்டகாலம் என்று அழைக்கப்படுகின்ற அச்சமூகத்தில் இப்படிப்பட்ட கருத்துக்கள் எடுத்துவைத்து ஒரு உன்னதமான சமூதாயத்தை உருவாக்கிக்காட்டினார்கள் என்பதை இப்பொழுதும் உலகம் மூக்குமேல் விரல்வைத்து பார்க்கும் பொழுது பெரும்வியப்பு தான் ஏற்படுகிறது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியரை விட மற்றவரோ அல்லது மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர், கருப்பரைவிட வெள்ளையரோ அல்லது வெள்ளையரைவிட கருப்பரோ சிறந்தவரல்லர், உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. வேறு எந்த மேன்மையும் இல்லை.
இன்னொருமுறை சொன்னார்கள், நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டிருந்தார். மக்கள் தம் முன்னோர்களை பற்றி பெருமையடிப்பதை விட்டுவிடவேண்டும். இல்லையேல் அவர்கள் இறைவனின் பார்வையில் ஒரு அற்ப புழுவை விட இழிந்தவர்களாக ஆகிவிடுவர்.
அல்லாஹ் மறுமை நாளில் வம்சத்தை பற்றியும் பரம்பரை பற்றியும் கேட்க மாட்டான்.' இறைவனிடத்தில் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் எவர் மிகுந்த இறையச்சம் கொண்டோரோ அவரே ஆவார்.'
'அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும், செல்வத்தையும் பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களின்பாலும் செயல்களின்பாலும் தான் நோட்டமிடுகிறான்.'(முஸ்லிம்- இப்னுமாஜா)
இந்த போதனைகள் வெறும் வறட்டு தத்துவங்களாக மட்டுமே இருக்கவில்லை. இஸ்லாம் போதனைகளுக்கு எற்ப இறைவிசுவாசிகளை கொண்டு ஒரு உலகளாவிய சகோதரத்துவ சமுதாயத்தை செயலளவில் உருவாக்கிக் காட்டிவிட்டது. இச்சமுதாயத்தில் நிறம், இனம், மொழி, தேசம் ஆகிய எவ்வித பாகுபாடும் இல்லை. அது உயர்வு, தாழ்வு தீண்டாமை, பிரிவினை, குலம், கோத்திரம் ஆகியவைகளை தூக்கி எறிந்துள்ளது. ஆகவே தான் ஆண்டுக்கொருமுறை உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரத்துவத்தை போற்றும்வண்ணம் ஹஜ் என்கின்ற புனித கடமையை நிறைவெற்ற மக்காவில் எந்தவித வேற்றுமையில்லாமல் ஒன்றுகூடுகின்றனர். இதில் சிந்திப்போறுக்கு ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றது.
இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
இஸ்லாத்தைப் பற்றி கவிதை வடிவில் சரோஜினி நாயுடு இவ்வாறு கூறுகிறார், அரேபியாவிலே ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதர் இறுதியாக இந்த உலகில் தோன்றி ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு 'குடிஅரசு' எப்படி இருக்கவேண்டும் என்பதை அவரே விளக்க வேண்டியிருந்தது. ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த இந்த மனிதர் யார்? இவர் உலகத்துக்கு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியைக் கொண்டு வந்தது ஏன்?-
இஸ்லாத்தைப் பற்றி தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார், ‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’
அறைக்குள் இருந்தே அகிலத்தையே உன்கையில் அடக்கும் வசதியிருந்தும்
அணு ஆராய்ச்சி மாறி நிலவிலும் வலம் வரலாம் என்கின்ற வசதி வந்தும்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதங்களை அடைந்துயிருந்தும்
கடல்மேல் பயணம் மாறி கடல் கீழும் பயணம் பாயலாம் என்ற நிலைக்கு வந்தும்
ஆடு மேய்கின்றவனும் அலைபேசியை அடைந்துயிருக்கின்ற அதிசியம் நிகழ்ந்தும்
காரு போகாத ஊருகளுக்கெல்லாம் கணினி சென்றுவிட்ட கலியுலகை அடைந்திருந்தும்
மனிதன் மட்டும் ஏன் இன்னும் வேற்றுமையில் மூழ்கியிருக்கிறான்?
ஆகாயத்தையே ஆராய்ச்சி செய்கிறாய் பிறகேன் இன்னும் அறியாமையில் இருக்கிறாய்?
நாமெல்லாம் ஒரே தாய் தந்தையருக்கு பிறந்தோம் என்று உமக்கு தெறியாதா?
பிறகு ஏன் பிரிவினை? நன்றாக உணர்ந்து கொள் உன்னை!
இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம் அழைக்கிறது உன்னை !!
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி !!!
No comments:
Post a Comment