இன்னுமா சந்தேகம் எங்கே பிராமணன் என்று ?
எங்கே பிராமணன் ? இங்கே பிராமணன்.
ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டி தேடுவது போல பாவனை செய்யும் பார்ப்பன 'சோ'வே சிண்டு முடிந்து சிரித்திடும் நரியே!
எம் இனம் கெடுக்கும் பேச நா இரண்டுடைய ஈடில்லாக் கேடே என்றுரைத்த அண்ணாவின் பெயரால் அமைந்த கழகத்தின் தொலைக்காட்சியில் உள்ளே புகுந்து எங்கே பிராமணன் என்று கேட்கிறாயே.
இங்கே இருக்கின்றான்
பிராமணன் வடகலைப் பார்ப்பான் தென்கலைப் பார்ப்பான்
எப்பார்ப்பான் ஆனாலும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான் என்றார் புரட்சிக்கவிஞர்
பேராசைக்காரனடா பார்ப்பான் என்றார் பார்ப்பன பாரதியார்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது தர்மமல்ல எனச்சொல்லி தடை கொடு தடை கொடு என நீதிமன்றங்களின் நிழல்களில் பதுங்கும் தன்மையில் இருக்கின்றான் பிராமணன்
முதல் குடிமகன் குடியரசுத் தலைவரை 'கழுதை' யாக்கி கேலிச்சித்திரம் வரைவேன் துக்ளக்கில் ஆனால் ஊரெல்லாம் நாறிய பாலியல் குற்றவாளி கொலைக்குற்றவாளி 'சங்கராச்சாரியாரை' ஒரு வார்த்தைகூட துக்ளக்கில் விமர்சிக்க மாட்டேன் மிகு மரியாதையுண்டு அந்த நிறுவனத்தின் மீது எனும் பிடிவாதத்தில் இருக்கின்றான் பிராமணன்
மத்திய அரசா பொதுத்துறையா எத்துறையானாலும்ஒட்டுமொத்த பதவிகளும் எங்களுக்கே
மண்ணின் மைந்தர்கள் பங்கு கேட்டால் சமநீதி சமூகநீதி கேட்டால் பார்ப்பனர்கள் நாங்கள் பதறுவோம் குமுறுவோம் மண்டல்குழு அறிக்கைக்கு எதிராய் அணி திரள்வோம் என்னும் வஞ்சகத்தில் இருக்கிறான் பிராமணன்.
இன்னுமா சந்தேகம் எங்கே பிராமணன் என்று?
வா வா ஆவணி அவிட்டங்களில் அணி அணியாய்த் திரண்டு முற்போக்கு முகமூடியெல்லாம் கழ்ற்றி விட்டு மனிதரிலிருந்து வேறுபட்டு உயர்சாதி மாடாய்க் காட்டும் மூக்கணாங்கயிறாம் பூணூலை புதுப்பிக்கும் இடத்திலே இருக்கின்றான் பிராமணன்--- வா நேரு
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி : முக்கிய கடவுள் சிலைகளில் பூணூல் போடப்பட்டு இருப்பதன் மர்மம் என்ன?--பே. சரசுவதி, சித்தூர்
பதில்: கடவுள் அவதாரம் எல்லாம்கூட பெரிதும் பூணூல்கள் தானே! ஜாதி உயர்வை - ஆணவத்தை நிலை நிறுத்தவே உருவாக்கப்பட்ட இந்துமதக் கடவுள்கள் என்பதைக் காட்டவே! பிராமணா மம தேசுவதா!
கேள்வி: சொத்துக்குவிப்பு வழக்கு, அன்னியச் செலாவணி வழக்கு மற்றும் உள்ள வழக்குகள் எத்தனை ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதா? --மு. இராசாராம், எர்ரம்பட்டி
பதில்: வழக்குகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களில் நிலுவையாக உள்ளன! வழக்கறிஞர்களின் திறமை, கோர்ட்டுகளில் நீண்ட வாய்தா - இத்தகைய முறைகளால் வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா கூட காணும் (அ) நீதிமுறை மாற்றம் அடையும் வரை இத்தகைய இழி நிலையே தொடரும்! மகா வெட்கக் கேடு!
கேள்வி : தேர்தல் ஆணையர் சாவ்லா மீது தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமியின் குற்றச்சாட்டுபற்றி?-- நெய்வேலி க. தியாகராசன். கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: தன்னைப் பதவியில் அமர்த்திய பா.ஜ.க.வுக்கு அவர் கடைசியில் பதவி ஓய்வு பெறும் நிலையில் காட்டும் நன்றி உணர்வு போலும்!
கேள்வி : நடிகர் நாகேஷ் மரணத்துக்காக நேரில் சென்று மலர் வளையம் வைத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, அண்ணா நினைவு நாளில் நேரில் அண்ணா நினைவிடத்தில் சென்று மலர்வளையம் வைக்காதது ஏன்?-- கு. இராசேசுவரி. சிங்கம்புணரி
பதில்: நாகேஷ் அளவுக்கு அண்ணா அவருக்கு முக்கியமானவரா என்ன? இதை அதிமுகவில் உள்ள அண்ணா விசுவாசிகள் ஒருவர்கூட சிந்திக்காமல், வெறும் அம்மா விசுவாசிகளாகவே உள்ளதைவிட வெட்கம் - வேதனை உண்டா?
வானம் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்?
அதன் உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார்?
தில்லை நடராசருக்குத் தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார்?
சத்திரம், சாவடி கட்டியவர் யார்?
அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார்? எல்லாம் நாம் தானே?
நாம் போட்டுக் கொடுத்த செல்வம் தானே இவை யாவும்?
ஒரு பார்ப்பானாவது, ஒரு செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா?
அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாயிருக்க வேண்டும்?
அவர்கள் மட்டும் ஒன்றும் செய்யாமலேயே நம்மை ஏமாற்றி உண்டு, பிராமணர்களாக வாழ வேண்டும்
No comments:
Post a Comment