அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, February 10, 2009

நெருக்கடியில் ஐ.எம்.எப்.: '6 மாதத்தில் நிதிச் சிக்கல் வரும்'


IMF
கோலாலம்பூர்: அடுத்த 6 மாதங்களில் சர்வதேச நிதி நிறுவனமான ஐஎம்எப் பெரும் நிதிச் சிக்கலில் தவிக்கவுள்ளது என அபாய மணி அடித்துள்ளார் அதன் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான்.

உலகின் பல்வேறு நாடுகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அமைப்பு சர்வதேச நிதி நிறுவனம் எனப்படும் ஐஎம்எப் (International Monetary Fund).

1944ம் ஆண்டு பிரெட்டன்வுட்ஸ் உடன்பாட்டின்படி 45 நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது ஐஎம்எப். 1930களில் உலகை வாட்டியெடுத்த பெரும் பொருளாதார மந்தம் போல மீண்டும் ஒரு நிலை உருவாகாமல் தடுப்பதற்காகவும், உலக நாடுகளில் பொருளாதாரச் சமநிலையை ஒரே சீராக வைத்திருக்கவும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

இப்போது இந்த ஐஎம்எப்புக்கே நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மலேஷியாவில் நடந்த தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் கூட்டத்தில் இதுகுறித்துப் பேசிய ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் இவ்வாறு கூறினார்:

இப்போதைக்கு நிலைமையைச் சமாளிக்கும் அளவு ஐஎம்எப்பில் நிதி இருந்தாலும், அடுத்த 6 மாதங்கள் வரைதான் இது போதுமானதாக இருக்கும். அதன்பிறகு ஐஎம்எப் நிதி நிலையே கேள்விக்குறிதான். எனவே எந்த நாட்டுக்கும் என்னால் இப்போது நிதியுதவி தொடர்பான உறுதி தரமுடியாத சூழநிலை ஏற்பட்டுள்ளது.

'இந்திய ரிசர்வ் வங்கி அபாரம்!'

மேற்கத்திய நாடுகளைவிட, இன்றைக்கு ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தென் கொரிய ரிசர்வ் வங்கிகள் மிகச் சிறப்பாக பொருளாதாரத்தைக் கையாண்டு வருகின்றன, என்றார் டொமினிக்.
ஷேக் அப்துல் காதர்

No comments: