அமெரிக்க அரசின் புதிய மத நல்லுறவு ஆலோசனைக் குழுவை ஒபாமா அறிவித்துள்ளார். இதில், சிகாகோவைச் சேர்ந்த பல்வேறு மதங்களுக்கிடையிலான இளைஞர் அமைப்பின் நிறுவனரும், செயல் இயக்குநருமான எபூ படேல் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.
இந்தக் குழுவில் மொத்தம் 25 பேர் இடம் பெறுகின்றனர். ஒரு வருடத்திற்கு இவர்கள் இப்பொறுப்பை வகிப்பார்கள். 6ம் தேதி குழுவின் 15 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அமெரிக்காவில் உள்ள அனைத்து மதத்தினர், இனத்தவரை அரவணைத்து செல்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிபருக்கு இந்த குழு ஆலோசனை கூறும்.
இந்தக் குழுவின் தலைவராக அமெரிக்க செனட் சபையில் அதிபருக்கமான ஆலோசகரான பாதிரியார் ஜோசுவா டுபாய்ஸ் செயல்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது..
ஷேக் அப்துல் காதர்
No comments:
Post a Comment