பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முஸ்லிம் உலகினோடு அமெரிக்கா போருக்கு தயாரில்லை என்றும் புதிய அத்தியாயத்திற்கு தயாரகவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் கெய்ரோ உரையை ஐக்கிய நாடுகள் சபையும் எகிப்தும் வரவேற்றுள்ளன.வியாழன் அன்று கெய்ரோ பல்கலைகழகத்தில் ஒபாமா முன் வைத்த புதிய அணுகுமுறைக்கு முஸ்லிம் உலகிலிருந்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல் செயலிலும் அதை காண்பிக்கவேண்டும் என்று முஸ்லிம் உலகம் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளன.அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையேயுள்ள உறவில் புதிய அத்தியாயம் உருவாக ஒபாமாவின் உரை உதவும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கின் மூன் தெரிவித்தார்.ஒபாமாவின் உரையை வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய மூன் கலாச்சார ரீதியான பிணக்குகளையும் காழ்ப்புணர்வுகளையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதல்படிதான் ஒபாமாவின் உரை என்று அவர் கூறினார்.ஒற்றுமைக்கான சமாதானத்திற்கான செய்தி இது.இதனால் மத்தியகிழக்கு ஆசியாவில் நிலை நிற்கும் கடினமான சூழலுக்கு விடிவு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது ஒரு புதிய தொடக்கம் என்று எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான இஹ்வானுல் முஸ்லிமூன் வரவேற்றுள்ளது.ஃபலஸ்தீனிலுள்ள மேற்குகரையில் இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை விமர்சித்த ஒபாமாவால் அங்குள்ள முஸ்லிம்களின் துயரத்திற்கு ஆசுவாசம் அளிக்க முடியுமென்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது.ஃபலஸ்தீன் பிரதமர் இஸ்மாயில் ஹானியாவின் ஆலோசகர் அஹ்மத் யூசுஃப் ஒபாமாவின் உரையை "மைல் கல்" என்று பாராட்டினாலும் சில எதிர்பார்ப்புகளையும் அவர் தெரிவித்தார்.ஒரு நாடு என்று ஃபலஸ்தீனை அங்கீகரித்தது நல்ல விஷயம் அதே வேளையில் ராணுவத்தை பயன்படுத்தி முஸ்லிம் உலகை நசுக்குவதற்கு பதில் பேச்சு வார்த்தைகளின் வழி பரிகாரம் காண்பதுதான் சிறந்தது என்று தாங்கள் கருதுவதாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.ஒபாமாவின் உரை ஆத்மார்த்தமானது என்று நம்பவேண்டுமென்றால் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதுதான் அவர் முதலில் செய்யவேண்டியது என்று அவர் கூறினார்
No comments:
Post a Comment