பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
போதுமான ஆதாரங்களோடு சவூதியில் மக்காவிற்கு அருகிலுள்ள அஹாலியில் ஷாஃபர் கட்டுமான நிறுவனத்திற்கு 100 நபர்களை நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்க கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்த ஷாஃபர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை கேரள காவல்துறையினர் அநியாயமாக கைதுச்செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இதனால் சவூதியிலுள்ள தொழில் நிறுவனங்களில் மலையாளிகளுக்கு பலத்த எதிர்ப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
ஷாஃபர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளருடன் 2நபர்களும் நடைக்காவு காவல்த்துறையால் ஒரு வாரத்திற்கு முன்பு கைதுச்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் கரிப்பூர் விமான நிலையங்களில் முழுமையான பரிசோதனைக்குப்பின்னால் கோழிக்கோடு கண்ணூர் ரோட்டிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு தங்குவதற்கு வந்தபொழுது தான் ஷஃபர் இஹாஃப் ஷரீபை(ஷஃபர் கட்டுமான நிறுவன உரிமையாளர்)யும் அவருடைய நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்ப்பவரும் சவுதீயில் நிரந்தரமாக வசித்துவரும் பாகிஸ்தானைச்சார்ந்த ஒருநபரையும் இவர்களுக்கு தங்குவதற்கு ஏற்பாடுசெய்துக்கொடுத்த கேரளாவில் வாழையூரைச்சார்ந்த முஜீபுர்ரஹ்மானையும்தான் காவல்துறையினர் கைதுச்செய்துள்ளனர்.கைதிற்கு காரணமாக அவர்கள் கூறியது பாகிஸ்தானைச்சார்ந்த டிரைவரிடம் போதுமான சான்றுகள் இல்லை என்று.ஹோட்டலிற்கு வந்தவுடனேயே ஷஃபர் இஹாஃப் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தகவல் தந்துள்ளார்.பின்னர் காவல்துறையினருக்கு இவர்களின் சான்றுகளின் மேல் திருப்தி ஏற்பட்டவுடன் அவர்களை விடுதலைச்செய்ய இருக்கும் வேளையில் புதிதாக பதவியேற்ற கமிஷனரின் உத்தரவுபடி அவர்களை விடுவிக்காமல் அநியாயமாக சிறையில் அடைத்துள்ளனர்.
பாகிஸ்தானைச்சார்ந்த நபரை அனுமதியில்லாமல் அழைத்துவந்ததாக ஷஃபர் இஹாப் மீது வழக்கு பதிவுச்செய்யப்பட்டுள்ளது.இக்கைது விஷயத்தை கேள்வி பட்டவுடனேயே அவருடைய சகோதரன் ஃபவாஸ் இஹாப் ஷரீபும் ஒன்றுவிட்ட சகோதரன் நாஹித் ரஹ்மானும் கோழிகோட்டிற்கு நேற்று வந்தனர்.மேலும் சவூதி தூதரகத்தின் உத்தரவு படி மும்பையிலுள்ள தூதரக அதிகாரிகள் கோழிகோட்டிற்கு வரவுள்ளனர்.கேரளாவிலிருந்து தொழில் தேடி பிழைப்பிற்காக சவூதி செல்லும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு கேரள போலீஸின் இந்த அக்கிரம நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்
No comments:
Post a Comment