காஸ்ஸாவில் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழயத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்த எனக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் கூறினார்.காஸ்ஸாவுக்குக்கெதிரான தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு ஹமாஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காஸ்ஸாவுக்கு வருகை புரிந்திருந்தார் ஜிம்மி கார்ட்டர். மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்த இஸ்ரேலின் அக்கிரம தாக்குதலை கண்டித்த ஜிம்மி கார்ட்டர். தன்னுடைய நாட்டில் உருவாக்கிய எஃப்-16 ரக குண்டுகளை போட்டு அமெரிக்கன் பள்ளிக்கூடத்தை தகர்த்ததாக குறிப்பிட்டார்.ஃபலஸ்தீன் போராளிகள் இஸ்ரேலில் நடத்திய ராக்கெட் தாக்குதலை விமர்சித்தார் கார்ட்டர்.நேற்றைய முன்தினம் இஸ்ரேலுக்குச்சென்ற கார்ட்டர் அங்கு 2006-இல் ஃபலஸ்தீன போராளிகளால் கடத்தப்பட்ட கிலாத் ஷாலித்தின் தந்தை கொடுத்துவிட்ட கடிதத்துடன் நேற்று காஸ்ஸாவிற்கு வருகை புரிந்தார். ஆனால் இந்தக்கடிதத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளுமா? என்பது சந்தேகமே.இதற்கிடையில் ஹமாஸை சார்ந்த ஒருவர் கூறுகையில் இந்த கடிதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டால் இஸ்ரேல் கைதிகளாக வைத்திருக்கும் 11 ஆயிரத்திற்குமேற்ப்பட்ட ஃபலஸ்தீனிகளுக்கான கடிதங்களை இஸ்ரேலுக்கு கொண்டுச்செல்ல நேரிடும் என்று அவர் கூறினார்.
கஸ்ஸாவில் ஆட்சி புரியும் ஹமாஸை தவிர்த்துவிட்டு மத்தியகிழக்கு ஆசியாவில் சமாதானத்தைப்பற்றி கனவு காணவேண்டாம் என்று நேற்று முன்தினம் கார்ட்டர் கூறியிருந்தார்.நெதன் யாகுவின் ராணுவம் இல்லாத ஃபலஸ்தீன் என்பது சமாதானத்தின் பாதையில் புதிய தடைகளை ஏற்படுத்தும் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே ஜிம்மிகார்ட்டரை கொல்ல நடந்த முயற்சியை ஹமாஸ் பாதுகாப்புபடையினர் முறியடித்ததாக செய்திகள் கூறுகின்றன.இஸ்ரேலின் எல்லைக்கருகில் எரைஸ் க்ராஸிங்குக்கு அருகில் சாலையில் கிடந்த சக்தி வாய்ந்த குண்டுகளை ஹமாஸ் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து செயலிழக்கச்செய்தனர்.கார்ட்டர் கடந்துச்செல்லும் பாதையாகயிருந்தது இது.
இச்சதியைச்செய்தது இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் என்று கருதப்படுகிறது. ஜிம்மிகார்ட்டரை கொலைச்செய்துவிட்டு பழியை ஃபலஸ்தீனிகளின் மீது போடும் சியோனிஷ்டு சதி என்று கருதப்படுகிறது. இச்செய்தியைப்பற்றி ஹமாஸ் அதிகாரப்பூர்வமாக
No comments:
Post a Comment