அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, June 14, 2009

பொருளாதாரச் சரிவால் இரு வருடங்களில் தெற்காசியாவில் 100 மில்லியன் மக்கள் பட்டினி



இன்று(ஜூன் 2) ஐ.நாவின் சிறுவர் நலன்பேண் அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகளாவிய பொருளாதாரச் சரிவு காரணமாக தெற்காசியப் பிராந்தியத்தில் உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் 100 மில்லியன் பொதுமக்கள் மேலும் பட்டினியால் வாடுவதாகவும் 40 வருடங்களில் அதியுயர்ந்த வறிய மக்களின் தொகையான 400 மில்லியனை இது அண்மித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய வறிய நாடுகளான ஆப்கானிஸ்தான்,வங்காளதேசம், பூட்டான்,இந்தியா, மலைதீவு,நேபாளம்,பாகிஸ்தான்,சிறிலங்கா ஆகியவற்றில் தனிநபருக்கான வருமானம் அதிகரிப்பதற்குப் பதிலாக அவர் உட்கொள்ளும் கலோரியின்(உணவு) அளவு மாற்றமின்றியும் அல்லது வீழ்ச்சியடைந்தும் இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

மேலும் இந்நாடுகளிலுள்ள சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்(1.18 பில்லியன்) 2 டாலருக்கும் குறைவான தின வருமானத்திலேயே வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதுடன் இவர்களில் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் அரைப் பங்கினர் போசாக்கின்மையால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளாவிய பணப்பிரச்சினை தலைதூக்கியதிலிருந்து இந்நாடுகளில் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான கிராக்கி குறைந்துள்ளதாலும் ஏனைய காரணிகளாலும் பல மில்லியன் பேரின் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன.

மேலும் பொருளாதாரச்சரிவு காரணமாக வறிய மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் விலைவாசி அதிகரிப்பு அவர்கள் தமது அன்றாடத் தேவையான உணவு மற்றும் சுகாதாரம்,
கல்வி என்பவற்றைத் தாமே சுருக்கச் செய்துள்ளதுடன் இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான சக்தியும் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் இச் சிறுவர்களினதும் இளவயதினரதும் மீதே தங்கியுள்ளது என்றும் யுன்செஃப்
கூறியுள்ளது.


No comments: