சென்னை : "என்னை ஏமாற்றி, என்னிடம் ராஜினாமா கடிதத்தை அரசு அதிகாரிகள் பெற்றுள்ளனர். அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை காஜி, சலாஹுதின் முகமது அயூப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த மே மாதம் 31ம் தேதி எனது அலுவலகத்துக்கு, தமிழக வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எம்.ஜமாலுதீன் மற்றும் தாழ்த்தப்பட்டோர் துறை துணைச் செயலர் எஸ்.எஸ்.முகமது மசூத் இருவரும் வந்தனர். அவர்கள் இருவரும், "தமிழக வக்பு வாரியத்தை முழுமையாக மாற்றியமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். வாரியத்தை மாற்றியமைக்க ஏதுவாக, உங்கள் ராஜினாமா கடிதம் வேண்டும்' எனக் கோரினர். அதிர்ச்சி அடைந்த நான் ஜமாலுதீனிடம், மற்ற உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதங்களைக் காண்பிக்கும்படிக் கேட்டேன். அதற்கு அவர், அந்தக் கடிதங்கள், அலுவலகத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். பிறகு அவர், ஏற்கனவே கையால் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம் ஒன்றைக் காட்=E
__._,_.___
No comments:
Post a Comment