அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, June 14, 2009

18 ஆம் திகதி முதல், A9 வீதி வாகன போக்குவரத்துக்கு!



யாழ்-கண்டி 'A9' பிரதான போக்குவரத்து நெடுஞ்சாலையின் போக்குவரத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பமாகவுள்ள போதும், வடக்கின் கண்ணி வெடிகள் யாவும் அகற்றப்பட்ட பின்னரே மக்கள் போக்குவரத்துக்கு விடப்படும் என தெரியவருகிறது.
எதிர்வரும் 18 ஆம் திகதி கண்டிய நடன நிகழ்ச்சிகளுடன் வவு னியாவில் இடம்பெறவுள்ள வைபவத் தில் ஏ9 பாதையூடான போக்குவரத்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை படையினர் வழித்துணையுடன் இந்த வாகனப் போக்குவரத்து இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன் பின்னர் நாட்டின் ஏணைய பகுதிகளில் இருந்து, யாழ் செல்லும், தனியார் வர்த்தகர்களினதும், அரச மற்றும் கூட்டுஸ்த்தாபங்களினதும் வாகன பொருட்கள், அனுராதபுரத்தில் உள்ள C.W.E நிறுவன களஞ்சியத்தில் வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்படும். பின்னர் அந்த வாகனங்கள் படையினரின் வழித்துணையுடன் வாகன அணிகளாக வுவுனியாவுக்கு போய்ச்சேறும் நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கபப்டுகிறது.

இதேவேளை, அனுராதபுரத்தில் தற்சமயம் தனியார் வர்த்தகர்களின் 80 பராவூர்திகள் சோதனை முடிந்த நிலையில் அனுராதபுரத்தில் தரித்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

No comments: