பூமிக்கு வெளியே சுற்றிவரும் செய்மதிகளில் மிகப் பெரியதும் விண்வெளி ஆய்வுகளில் முக்கியமானதுமான சர்வதேச விண் நிலையத்தின் கட்டமைப்பை(International Space Station) பூர்த்தி செய்யும் இறுதிப் பாகத்தை (ஜப்பானின் கிபோ ஆய்வுகூடத்தை) விண்ணுக்கு செலுத்துவதற்குத் தயாரான எண்டேவர் விண்கலத்தின் பயணம் சனிக்கிழமை இடை நிறுத்தப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் கென்னடி விண்நிலையத்திலிருந்து 16 நாட்கள் திட்டமிடப்பட்ட எண்டேவரின் டேக் ஆfப் நேற்றைய தினம்(ஜூன் 13) கிழக்கு அமெரிக்க நேரம் 7:17a.m இற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும் ஏவுகைக்கான கவுண்ட் டவுன் தொடங்கும் முன்னர் ஏவுகணைகளில் ஹைட்ரஜன் நிரப்பப்படும் போது சிறிய கசிவு அடையாளம் காணப்பட்டதால் உடனே அதன் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. மேலும் விண்கலத்தின் வெளிப்புறத் தாங்கியிலுள்ள(external fuel) உடனடியாக அகற்றப்பட்டது.
இவ்வருடம் மார்ச் மாதம் டிஸ்கவரி ஓடம் முதற் தடவை செலுத்தப்பட்ட போதும் இதே போன்ற பிழை ஏற்பட்டு அதன் பயணமும் பின் தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்டேவரின் இப்பயணம் வரும் புதன்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்றைய தினம் சந்திரனை ஆய்வு செய்வதற்காகப் புறப்படவுள்ள தானியங்கி விண் கலம் ஒன்றின் பயணத்தில் இது குறுக்கிடக் கூடும் என்றும் சொல்லப்படுகின்றது. 

|
No comments:
Post a Comment