அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, November 13, 2009

பாஜகவின் பவர் ஜெனரேட்டர் ஆர்.எஸ்.எஸ்.: பாஜக

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பதவி குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியது பாரதீய ஜனதா கட்சியில் குழப்பத்தையோ, பிரச்சனையையே ஏற்படுத்தவில்லை என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு மற்றும் ஆனந்த் குமார் ஆகியார் பாரதீய ஜனதா கட்சித் தலைவராக வரமாட்டார்கள் என்றும் டில்லிக்கு வெளியிலிருந்து ஒருவர்தான் பாஜகவின் தலைவராக இருப்பார் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின்போது குறிப்பிட்டார்.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பாஜகவின் விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். தலையிடுவதாகத இதன்மூலம் தான் கருதவில்லை என்று கூறிய அவர், மோகன் பகவத்தின் கருத்து கட்சியில் குழப்பத்தையோ, பிரச்சனையையே ஏற்படுத்தவில்லை என்று கூறினார். பாஜக தன்னுடைய முடிவுகளை சுயமாகவே எடுத்துக் கொள்ளும் என்று மோகன் பகவத் கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரே சிந்தனைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று கூறிய ஜவதேகர், பாஜக உள்பட ஆர்.எஸ்.எஸ்.சின் அனைத்து துணை அமைப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சக்தி அளிக்கும் மையமாகச் செயல்படுவதாகவும் கூறினார்.

பகத்தின் கருத்துகள் உண்மையான பொருளில் புரிந்து கொள்ளப்படவில்லை என்று கூறிய ஜவதேகர், மோகன் பகவத் கூறிய கருத்துகள் பாஜக தலைமைக்கு அதிகாரம் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக தனிப்பட்ட முறையில் கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்றும் கூறினார்.

No comments: