அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, March 7, 2010

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பங்களிப்பு இல்லாமல் மகளிர் மசோதாவை ஆதரிக்காதீர்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை



பெங்களூரு:மத்திய அரசு அங்கீகாரம் வழங்கிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா தற்போதைய வடிவில் அங்கீகரிப்பதற்கெதிராக அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த, பிற்படுத்தப்பட்ட, மத சிறுபான்மை எம்.பிக்கள் கட்சிக் கட்டளைகளை பொருட்படுத்தாமல் களமிறங்கவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும், மத சிறுபான்மையினருக்கும் சிறப்பு பங்களிப்பு அனுமதிக்க வேண்டும் என்ற ஒடுக்கப்பட்ட அரசியல் அமைப்புகளின் சிபாரிசுகளை அங்கீகரிக்காமல் தான் மார்ச் 8 ஆம் தேதி ராஜ்யசபையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்யப் போகிறது மத்திய அரசு.

மக்களவையிலும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் மசோதாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு சிறப்பு பங்கீடு அளிக்கவேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மக்களவையிலும், பெரும்பாலான மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் உயர்ந்த ஜாதிகளுக்கு உரிய பங்களிப்பை விட எத்தனையோ மடங்கு பிரதிநிதித்துவம்தான் தற்ப்போது உள்ளது.

பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இதுநாள்வரை அவர்களின் மக்கள் தொகை விழுக்காட்டிற்குரிய பங்கீட்டில் பாதியளவை மட்டுமே எட்டியுள்ளது.

தலித்துகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்களுக்கிடையில் பெண்களின் நிலை மிகவும் பிற்படுத்தப்பட்ட சூழலில் உள்ளதால் மகளிருக்கு மூன்றிலொரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவது மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் ஜாதி,மத சமச்சீரின்மை மேலும் அதிகரிக்கும் என்பது தெளிவானதாகும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா அதனுடைய உண்மையான வடிவில் தாக்கல் செய்வதற்கெதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியன எடுத்த நிலைப்பாட்டிற்கு இ.எம்.அப்துற்றஹ்மான் பாராட்டுத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு தாக்கல்செய்யுமுன் பாதி இடங்களை அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதியினர், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கி வைக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: