அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 11, 2010

சென்னை கவின் கல்லுரி மாணவரின் கண்ணீர் கதை



சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சாமியார்கள் போன்றவர்கள் தான் விபச்சாரம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்றால், சமிபத்தில் சென்னை கவின் கலை (Fine arts) நடந்துள்ள சம்பவம் படித்து பட்டம் பெற்று சமுதாயத்திற்கு முன்னோடியாக திகழ வேண்டிய பேராசியர் ஒருவர், குடித்துவிட்டு மாணவர்களிடம் நிதானமின்றி நடந்து கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகள் கண்ணீர் வர வைக்கின்றான.

நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில், திருக்குறளின் 1330 பாக்களையும் தனித்தனியாக களிமண் படிமங்களாக்கி அதனை பார்வைக்கு வைக்க வேண்டும் என்று நினைத்த சென்னை கவின் கலை கல்லுரி மாணவர் சசிகுமார், அதற்கான பணியில் தீவிரமாக இருந்ததை கண்டு கல்லூரி முதல்வரான மனோகரன், சசிகுமாரின் விருப்பத்தை அறிந்து பாராட்டி களிமண் படிமங்களுக்கு தேவையான எல்லா உதவியையும் செய்வதாக கூறினார். குடிப்பழக்கம் உள்ள
கல்லுரி முதல்வர் வாக்களித்த நேரத்தில் போதையில் இருந்ததாக மாணவர்கள் கூறுயுள்ளனர்.

குடிகார முதல்வரின் வாக்குறுதியால் உற்சாகமான மாணவர் சசிகுமார் தனது சொந்த செலவில் அனைத்து வேலைகளையும் முடித்து, முதல்வரிடம் சென்று செலவுக்கான தொகையை அவர் அளித்த வாக்குறுதியை நினைவூட்டி கேட்ட போது கல்லுரி முதல்வர் மறுத்துதிருக்கிறார், மேலும் அப்படியெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லையே என்று கூறியுள்ளார். மேலும் வடிக்கப்பட்ட களிமண் படிமங்களை சுட சுடுமண் சூளை அமைத்துத் தருமாறு கோரி, முதல்வரை அணுக அதற்கும் மறுப்பு கூறிவிட்டார், ஆனால் கவின்களை கல்லூரியில் சுடுமண் சூளை இருக்க வேண்டும் என்பது அவசியம் என்பதை இங்கு நினைவூட்டுகிறோம்.

அதற்குள் சசிகுமார் கடின உழைப்பினால் ஆன களிமண் படிமங்கள் காய்ந்து வெடித்து, அவற்றில் சில உடைந்துபோக, பொய் வாக்குறுதி தந்து ஏமாற்றத்திற்குள்ளான சசிகுமார்,விரக்தியில் ஏற்பட்ட கோபத்தில் முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டார்.
சசிகுமார் கண்ணாடியை உடைத்துவிட்டு வெளியேறிவிட, சசிகுமார் மட்டுமின்றி, அவருடைய வகுப்புத் தோழர்கள் எஸ்வேந்திரம், கமலஹாசன் ஆகியோர் மீதும் கல்லுரி முதல்வர் மனோகரன் கொடுத்த புகாரை அடுத்து பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், அன்று இரவு கல்லூரிக்குள் வந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த அதே கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவரும் எஸ்வேந்திரனின் இளைய சகோதரரும் ஆன ஆனந்த குமாரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்துள்ளனர்.

இதுபற்றி எஸ்வேந்திரன் அன்று தான் கல்லூரிக்குச் செல்லவில்லை என்றும் அம்பத்தூரிலுள்ள ஒரு தொழிற்சாலைக்குச் சென்று பணியாற்றிவிட்டு, எந்த விவரமும் தெரியாத நிலையில் இரவு வீட்டுக்கு வந்தேன் என்றும் அப்போது காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்து என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்றும் அவர்களிடம் எனக்கும் அந்தச் சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினேன். அவர்கள் கேட்கவில்லை. மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அடித்தனர்” என்றும் பத்திரிக்கையாளர்களிடம் விவரித்த எஸ்வேந்திரன், மறுநாள் காலைவரை தானும் தனது சகோதரனும் சங்கிலியால் பிணைக்கப்ட்டு, காவல் நிலையத்திலேயே கட்டிப்போடப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
இன்றைய மாணவர்கள் நாட்டின் நாளைய தூண்கள் மாணவர்களுக்கு கல்வி அறிவு புகட்டி ஒழுக்கமானவர்களாக வளர்க்க வேண்டிய பேராசிரியர்களே குடித்துவிட்டு நிதானமில்லாமல் நடந்து கொள்வதுடன் அவர்களை பொய் குற்றச்சாட்டி அவர்களது வாழ்க்கையை சீரழிக்கும் இது போன்ற ஆசிரியர்களால், ஆசிரிய சமுதாயத்திற்கு வெட்க கேடு மட்டுமல்லாமல் இதனால் மற்ற பொறுப்புடன் செயல்படும் மற்ற நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் விளைவிக்கப்படுகிறது.

No comments: