அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 5, 2011

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொல்றாங்கோ..! கொல்றாங்கோ..?

கடந்த முறை அதிமுக ஆட்சி முடிந்து தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது 1991-96 வரை அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அனைத்து அமைச்சர்கள் மேல் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.



இதனால் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்ததோடு இனிமேலும் அதிமுகவில் தொடர்ந்தால் வழக்குகள் பாயும் என்ற பயத்தில் முன்னாள திமுக அமைச்சர்கள் சிலர், தி.மு.கவில் தஞ்சம் புகுந்தனர். மேலும் சிலர், அரசியலில் இருந்து, "வேணாம்டா சாமி, விட்டால் போதும்' என்று ஒதுங்கி வழக்குகளிருந்து தப்பித்தனர். திமுக அரசு பதிவு செய்த வழக்குகள் காரணமாக, அ.தி.மு.கவின் செல்வாக்கு கணிசமாகச் சரிந்து அடுத்தடுத்த தேர்தல்களில் கடும் பின்னடைவைச் சந்தித்தது.

2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அக்கட்சி தலைமை உறுதி நம்புகிறது. அவ்வாறு ஆட்சி அமையும் போது,"1996 இல் அ.தி.மு.கவுக்கு எதிராக ஊழல் வழக்குகள் மூலம் நெருக்கடி கொடுத்ததுபோல், தற்போது தி.மு.கவுக்கு கொடுக்க வேண்டும்' என அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இருந்து உயர் பதவியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ள அரசு அதிகாரிகள் காய் நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் கடந்த ஐந்தாண்டு கால, தி.மு.க., ஆட்சியில், துறை வாரியாக நடந்த முறைகேடுகள், ஊழல் விவகாரங்களை ஆதாரங்களோடு பட்டியல் போட்டு, அ.தி.மு.க., தலைமையிடம் கொடுத்துள்ளதோடு அதிமுக ஆட்சி அமைந்ததும்,இவற்றின் அடிப்படையில், முதல்வர் கருணாநிதியில் துவங்கி, முக்கிய அமைச்சரவை சகாக்கள்மீது வழக்குகள் பதிவாகும் என்று கூறப்படுகிறது.

2G வழக்கின்மூலம் துள்ளி எழுந்துள்ள அதிமுகவுக்கு பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் திமுக அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் பின்னணி குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்தும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப்பணிகள்,செம்மொழி மாநாட்டின் போது கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,000 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றில் நடந்த குறைபாடுகளையும் தொகுத்து அதிமுக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சர்கள் சிலர் மீது எழுந்துள்ள கொலை சம்பவங்களில் தொடர்பு, நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து போன்ற புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் படிவு செய்யப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments: