துபாயில் இந்திய பெண்கள் சங்கத்தின் சார்பில் மே 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை இந்தியன் கன்சுலேட், கேட்வெல் கிளினிக் ஆதரவில் இந்தியன் கன்சுலேட் ஆடிட்டோரியத்தில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.
இம்மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை இந்திய கன்சல் ஜென்ரல் வேணு ராஜாமணியின் துணைவியும், இந்திய பெண்கள் சங்கத்தின் தலைவியுமான டாக்டர் சரோஜ் தாப்பா அவர்கள் செய்து வருகிறார்.
தொழிலாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் வசதியில்லாத அமீரக வாழ் இந்திய மக்கள் இலவச மருத்துவ முகாமினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இம்முகாமில் பொது மருத்துவம், டெர்மடாலஜிஸ்ட், கண் மருத்துவம், எலும்பு, பல், பெண்கள், இருதயம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று சிறப்பு சிகிச்சை அளிக்க உள்ளனர்.
நீரிழிவு நோய் பாதிப்புக்கு உட்பட்ட நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் காலையில் சாப்பிடாமல் வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தாங்கள் வைத்துள்ள மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட்களை கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இம்முகாமிற்கு கேட்வெல் மருத்துவமனை, டாக்டர் அசோக் மற்றும் சரிதா கபூர், தன்னார்வ சேவை மருத்துவர்கள், கேரள மருத்துவ பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டோர் ஆதரவு அளித்துள்ளனர்.
இந்திய மருந்தாளுநர் சங்கம், யாகூப் மருந்தகம் உள்ளிட்டோர் இலவசமாக மருந்துகளை வழங்க முன்வந்துள்ளனர்.
இம்முகாம் குறித்த மேலதிக விபரம் வேண்டுவோர் 26 மற்றும் 27 மே ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 050 – 1152021, 056 – 6945125 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
இந்திய பெண்கள் சங்கம் 1976 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது முதல் இலவச மருத்துவமுகாம்களை நடத்தி வருகிறது. மே 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய கன்சுலேட், கேட்வெல் மருத்துவமனை உள்ளிட்டோர் ஆதரவுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
Monday, May 25, 2009
துபாயில் மே 29 ஆம் தேதி தொழிலாளர்களுக்கான
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment