நாகர்கோவில், மே.25-
மனித சமூகத்தை வேரருக்கும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று திருக்குரான் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்குரான் மாநாடு
நாகர்கோவிலை அடுத்த பறக்கை ஐ.எஸ்.இ.டி. நகரில் திருக்குரான் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு ஓய்வு பெற்ற போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு மலுக்கு முதலி தலைமை தாங்கினார்.
இதில் சென்னை முப்தி உமர்ஷெரீப், இலங்கை இஸ்மாயில், கேரளாவை சேர்ந்த அப்துல் சலாம் மோங்கம், J.A.Q.H மாநில தலைவர் எஸ்.கமாலுத்தீன் மதனி, மாநில துணைத்தலைவர் செய்யது அலி, மாவட்ட தலைவர் எஸ்.மாஹீன் அபுபக்கர், கோவை எஸ்.அய்ïப், எம்.ரகமத்துல்லா, எஸ்.ஹாமீம், வக்கீல் அசீம் ஆகியோர் பேசினார்கள்.
மாநாட்டு நூலை அப்துல்லா வெளியிட்டார். கல்லூரி பேராசிரியர் முகமது ரபீக், குரான் போதனைகளை விளக்கி கூறினார். தொடக்கத்தில் குமரி மாவட்ட ஜே.ஏ.கிï.எச். மாணவர் அணி செயலாளர் ஏ.அய்ïப் வரவேற்று பேசினார். முடிவில் மாணவர் அணி துணைத்தலைவர் ஐதுரூஸ் நன்றி கூறினார். மாநாட்டில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
கட்டுப்படுத்த வேண்டும்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
* ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும் விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தகத்தையும், பதுக்கல் முறையையும் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்தி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
* வட்டி, வரதட்சணை, மது, சூது, விபசாரம், போதைப்பொருள், தீண்டாமை போன்ற சமூகக்கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.
இரும்பு கரம்
* அரசு பள்ளிகளில் முன்பு இருந்த அரபிக் பாடத்தை மீண்டும் கொண்டு வந்து அப்ஸலுல் உலமா பட்டப்படிப்பை முடித்துள்ள ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்களை அப்பணிகளில் அமர்த்த வேண்டும் என தமிழக அரசை மாநாடு மூலம் வலியுறுத்துகிறோம்.
* மனித சமூகத்தை வேரருக்கும், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களை இந்த மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு, அதில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இரும்புகரம் கொண்டு தடுக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை மாநாடு வலியுறுத்தி கேட்டு கொள்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment