Thursday, May 28, 2009
தமிழகத்தில் ஏழை இஸ்லாமிய மாணவியருக்கான விடுதிகள்!
பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேரும் இஸ்லாமிய மாணவியரின் குடும்ப வருமான வரம்பை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் சிறுபான்மை இஸ்லாமிய மாணவிகள், தங்கிப் படிக்க திருச்சி, திருநெல்வேலி, கோவை, வேலூர் மற்றும் திண்டுக்கல்லில் புதிதாக ஐந்து மாணவியர் விடுதிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த விடுதிகளில் சேர, இஸ்லாமிய மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இதை தற்போது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை குடும்ப வருமானம் கொண்ட ஏழை இஸ்லாமிய மாணவியர் பெரிதும் பயனடைவர். இந்த உத்தரவை வழங்கிய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment