தேசந்தந்தை காந்தி பிறந்த நாளைவிட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்துபார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கைதொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால்இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாகபோயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில்பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாகமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்றுவரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான்இருக்கிறது.
ஒரு Flash Backசென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம்சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர்ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என்எக்கோலாக் சூட்கேசில்[ நியு காலேஜ் மாணவர்களின்ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கிகொண்டிருக்க...
'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந்தபெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானுஇந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்லநானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ளபொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'
...இந்த போலீஸ்தான் ……..ஸ்காட்லாண்ட் யார்ட்????......
ஞாயமான கேள்வி
எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவாஎதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய்விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்குசொன்னேனே துவா செஞ்சீங்களா/' என கேட்காமல்ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதைஒப்பிக்க சென்று விடுகிறார்.
நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்'
ஒரு சின்ன கதை: ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒருதுறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும்போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்றுவந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம்துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம்ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?.ஆர்வத்தால்
ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன்உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க..”நாளை சொல்கிறேன்” எ ன துறவி சொல்லி இருக்கிறார்.அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர ..
' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---.அரசன்.
'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...'----துறவி
என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்
உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடு—துறவி
அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவிஎன சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்துஅலைகிறீர்கள்...அரசன்.
நாளை தெரிந்துகொள்வாய் அரசே...---துறவி
மறுநால் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோகவேண்டும் , போகும்போதும் அரசனுடைய குதிரையை விடநல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படிதுறவி கேட்க , ல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்பஅவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்குகிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பிஅரசனிடமே கொடுத்துவிட்டு தனது கிழிந்த உடையுடனும்வெறுங்காளுடனும் நடக்க.....
அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'
'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் ,வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழமுடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம்இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்துவிட்டான்.
வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாததுஆனால் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. இந்ததாமரை இலை நமக்கு கற்றுதரும் பாடம் என்னதெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்தசூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்குசார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அதுஎன்னுடையது” என்ற வாதம்தான்.
உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும்நமக்கு சொந்தமில்லை.
ZAKIR HUSSAIN
No comments:
Post a Comment