எம். எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நரம்பு நார்களுக்கான மூளை குறுத்தணுக்களை தூண்டிவிடுவதன் மூலம் புத்துயிர் தர முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் பற்றி பல விஷயங்களை நாம் அறிந்தாலும் அந்த நோய் எதனால் வருகிறது என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
எம்.எஸ். வந்தால் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்பு என்பது நரம்பு நார்களைப் சுற்றிப் படிந்துள்ள மைலீன் என்ற பாதுகாப்புப் படிமம் சேதமடைவதுதான்.
இந்த மைலீன் படிவம்தான் நரம்புகள் மூலமாக உடலெங்கும் தகவல் பரிமாறுவதில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நோய் வந்தவர்களுடைய நோய் எதிர்ப்பு கட்டமைப்பு மைலீன் படிமத்தை வேற்றுப் பொருளாக நினைத்து தாக்கி சேதப்படுத்த, நரம்பு நார்களின் தகவல் பரிமாறும் ஆற்றல் குறைந்துபோக, நோயாளியின் உடற் செயற்பாடுகள் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றன.
மைலீன் படிமத்துக்கு ஏற்படும் பாதிப்பை சரி செய்வதற்கான புதிய சிகிச்சைகளைக் உருவாக்குவதற்கான முக்கிய வழி ஒன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனித மூளையில் ஏற்கனவேயுள்ள குறுத்தெலும்புகளை சரியாகத் தூண்டிவிடுவதன் மூலம் மைலீன் படிமங்களுக்கு புத்துயிர் அளிக்க முடிகிறது என்பதை இந்த விஞ்ஞானிகள் எலிகளில் நடத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.
இந்த வழியைப் பின்பற்றி வெற்றியளிக்கக் கூடிய சிகிச்சை முறையை உருவாக்கிவிட்டால், ஏராளமான எம்.எஸ். நோயாளிகளின் வாழ்க்கை மேம்படும்
No comments:
Post a Comment