விடுதலைபுலிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தினர் 26 பேரது சடலங்களை புதைத்த இடம் ஒன்றை தோண்டிப் பார்க்குமாறு இலங்கை நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் வல்லிபுரம் பகுதியில் இந்த புதைகுழியைத் தோண்டும் பணிகள் இன்று ஆரம்பித்ததாக இலங்கை இராணுவ பேச்சாளர் உபய மெதவெல பிபிசிக்கு தெரிவித்தார். இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 26 சிப்பாய்கள், ரகசியமான விக்டர் 1, என்னும் இடத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்து, அவர்கள் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டு அந்த குறித்த இடத்தில் புதைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாலர் கூறினார். மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நான்குபேர் தந்த தகவல்களின் அடிப்படையில், சட்டமா அதிபரினால் இது குறித்த மனு ஒன்று வாழைச்சேனை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதே இந்த புதைகுழியை தோண்டுவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததாகவும் அவர் கூறினார். பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சட்ட வைத்திய அதிகாரி, அரச பகுப்பாய்வாளர், புதைபொருள் ஆராய்ச்சித்ததிணைக்களத்தின் அதிகாரிகள், நில அளவைத் திணைக்களம் மற்றும் ரஜரட்ட மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை சேர்ந்த இரு பேராசிரியர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு ஒன்று இதற்காக புதுக்குடியிருப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்... |
Tuesday, December 7, 2010
புதைகுழியை தோண்டுகிறது இராணுவம்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment