அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, May 6, 2009

அண்ணல் அம்பேட்கரின் கருத்துகளை நினைவு கூறுகிறோம்

* இந்து மதத்தில் மனசான்றுக்கோ - பகுத்தறிவிக்கோ - சிந்தனைக்கோமுகாண்மை(முக்கியத்துவம்)இல்லை அல்லது வளர்ச்சிக்கும் வழியில்லை.ஓர்இந்து என்பவன் மறை(வேதங்)களுக்கு அடிமையாகவும் அல்லது ஸ்மிருதிகளுக்குஅடிமையாகவோ அல்லது மேன்மையர்(மகான்)களைப் பின்பற்றி வாழ்பவனாகவும்இருக்கவேண்டும்.*மேல்சாதிகள் வளத்திற்கும், முன்னேற்றத்திற்காகவும் அவர்களின்குமுகாய(சமூக) உயர்வுக்கும் இந்து மதம் தோற்றுவிக்கப்பட்டது.*மதம் மனிதனுக்காக, மதத்திற்காக மனிதன் அல்ல.*இந்து மதம் குமுகாயத்தில்(சமிதாயத்தில்)தன்மானத்திற்கு இடமில்லை.இந்துமதம் சாதி வேறுபாடு(பேதம்) ஊன்ற கொள்கையின் அடிப்படையில்அமைக்கப்பட்டது.மனிதனை மனிதனாக மதிப்பதில்லை.தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குஇழைக்கப்படும் கொடுமைகளுக்கு கரணியம்(காரணம்)தீண்டாமைதான்.இது சாதிஇந்துக்களுக்கும். தீண்டத்தகாதவர்களுக்கும் நடக்கின்ற போராட்டமே.இந்தபோராட்டத்தில் தன்மானத்தோடு சரிசம உரிமைப்பெற்று வாழ இந்துமதத்திலிருந்து தாழ்த்தப்பட்ட இன மக்கள் விடுபட வேண்டும்.*இந்த நாட்டிலுள்ள சில முகாமையான குமுகாயப் பிணக்குகள் குறிப்பாக சாதி-தீண்டாமை - குமுகாய இழிவு தீர்க்கப்படும் வரைவிடுதலை தேவையில்லை என்பது அம்பேடகரின் கருத்தாயிருந்த்து.வெள்ளைக்காரர் ஆட்சியில் அடிமைத்தனம் என்னென்பதை பார்ப்பனர்களும்உயர்சாதி இந்துக்களும் உணர்கிறார்கள்.ஆனால் அது அவர்களுக்கு அரசியல்அடிமைத்தனம் மட்டும்தான்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ! குமுகாய - பொருளாதாரஅடிமைத்தனமும் பாரமாய் இருந்துக்கொண்டிருக்கிறது.1931ஆம் ஆண்டு இலண்டன்வட்டமேசை மாநாட்டில் இதைச் சுட்டிக்காட்டினார்.'' 200 ஆண்டுகாலம்வெள்ளையரின் ஆட்சியில்அடிமைகளாயிருந்தற்காகப் போராடி விடுதலை கேட்கிறீர்கள், ஆனால் , 2500ஆண்டுகளாக நாங்கள் உங்களிடம் அடிமைகளாகயிருக்கிறோமே! எங்களுக்கு எப்போதுவிடுதலை? என்றுகேட்டார், யாராலும் விடைக் கூறமுடியவில்லை.உண்ண உணவின்றி அவதிவுறுபவனுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?சாதி வெறுப்புணர்வால் தலைகவிழ்ந்து நடப்பவனுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?குமுகாய இழவுகளைத் தோளில் சுமந்தவண்ணம் திரியும் மக்களுக்குஅரசியல் விடுதலை ஒரு கேடா?இன்று கூலி செய்தால்தான் இன்றே சாப்பாடு என்கிற நிலையில் வாழ்ந்து வரும்மக்களுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?அடிப்படைத் தேவைகளில் ஒன்றைக்கூட உருப்படியாய்ப் பெறமுடியாமல் வாழ்ந்துவரும் மக்களுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?இவற்றைத்தான் திரும்பத்திரும்ப அம்பேட்கர் கேட்டார்.இந்த நாட்டிலுள்ள கடவுள் - மத - இலக்கியங்கள் - காப்பியங்கள் அனைத்தும்வேண்டும்மென்றே வேறுப்பாட்டையும் இழிவையும்ஏற்றத் தாழ்வுகளையும் கற்பிக்கின்றன.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் குமூகசமத்துவத்தக்காகப் பாடுபட்டு அதை ஏற்படுத்துவதற்காகத்தான் காந்தியும்,காங்கிரசும் மற்ற அரசியல் - குமூக நிறுவனங்களும் பாடுபட வேண்டுமேயொழிய,வெறும் அரசியல் விடுதலைக்காக மட்டும் போராடுவது பொருத்தமாகாது என்றுகூறினார்.பார்ப்பனர்களுக்கும், உயர்சாதிக்கார்ரகளுக்கும்தான் விடுதலைஇந்தியாவில் வாழ்விருக்கும். அவர்களின் தன்னல வேட்டைக்காடாக இந்த நாடுமாற்றப்பட்டு விடும் என்று எச்சரித்தார்.எனவே, குமூக சமத்துவத்தை ஏற்படுத்தினால்தான் அரசியல் விடுதலையில்பொருளுண்டு என்று அம்பேட்கர் கூறினார்.சாதியை ஒழித்த பிறகே வேறு எந்தப் புரட்சியையும் இங்கு உருவாக்க முடியும்என்று கூறினார்.அரசியல் விடுதலையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றார்.விடுதலைக்குப்பின் ஆட்சி பார்ப்பன - சாதி இந்துக்களின் கைக்கு மாறும்,தாழ்த்தப்பட்ட மக்களின் பிணக்குகள் மேலும் மோசமாகும் என்றார்.விடுதலை இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிமை வாழ்வே தொடரும் என்றார்.இந்த வகையில், அம்பேட்கர் கூறிய அனைத்துமே உண்மையெனஉணரப்பட்டு வருவதோடு, இப்பிணக்குகள் மேலும் அதிகமாகி, தாழ்த்தப்பட்டமக்கட் குமுகாயமே நசிந்து போய்விடுமோ! என்ற அச்சமும் அதிகமாகி வருகிறதைநாம் கண்க்கூடாக காணுகிறோம்.அம்பேட்கர் தன் வாழ்நாளில் ஈடுபட்ட மிக முகாமையான பணிகளில் ஒன்று தாழ்த்தப்பட்டமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டதைப பெற்று தருவது.கோயிலுக்குள் போக்கஃ கூடாதவர் என்று ஒரு சாராரை வைத்துக்கொண்டு ' கோயில்புனிதமானது ' என்று கூறுவது அயோக்கியத்தனமான கூற்று என்றார்.கோயிலைக்கட்டிவர்களையே கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் சாதிய இந்துகளைகடுமையாகசாடினார்.இதற்காக 1930ஆம் ஆண்டே நாசிக்கில் போராடினார்.தமிழ் நாட்டில்கோயில் நுழைவு உரிமைக்காக முதன் முதலில் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில்இறங்கிய குமிகம் சாணார்(நாடார்) குமுகமாகும்.தனித்து நின்று போராடியேஇவ்வுரிமையை அவர்கள் வென்றார்கள்.1916க்கிப் பின் நீதிக் கட்சியினர்பலர்தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோயில்நுழைவு உரிமை பற்றிப் பேசலானார்கள்.பின்னாளில் பெரியாரும் குரலெழிப்பியுள்ளார்.இன்றுவரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோயில் நுழைவு உரிமை இல்லை.என் வலைத் தளம் காண....,thamizhankural. orgkgftamils-mani. blogspot. comஅம்பேத்கார் ஒரு புதிய பார்வைஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு புதிய அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வர42 பேர்கள் கொண்ட குழுவை நேரு அமைதார் அதில் ஆலோசனைக்கு இங்கிலாந்தின்சட்டத்துறையை அணிய போது அவர்கள் டாக்டர் அம்பேத்காரை சுட்டி காட்டினர்.மராட்டிய மாநிலத்தில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்திருந்த அம்பேத்காரை இந்தபணிக்கு தலைமை ஏற்குமாறு அழைத்தார். நேருவின் அழைப்பை ஏற்று டில்லி வந்தஅம்பேத்காருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 42 42 பேரும் குழுவில்இருந்து விலைகிவிட்டனர். அந்த குழுவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் முதல்சர்தார் வல்லபாய் பட்டேல் வரை இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.இருப்பினும் கலங்காது தனது பணியை தனியாளாக துவக்கினார். அவருக்கு உதவியாகமொத்தம் 2 பேர் மட்டும் தான் பணியாற்ற முன்வந்தனர் என்பதும், 6 மாதங்களாகஇரவு பகல் பாராது சட்டமியற்றி முடித்தார் என்பதும் பல ருக்கு தெரியாதசெய்திகள்.காந்தியடிகளுடன் நாக்பூர் சென்றிருந்த போது பொது இடத்தில் அவருக்குஅனுமதியில்லை காந்தியடிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க அவரையும் அனுமதித்தவிழாக்கமிட்டியினர், அம்பேத்கார் சென்றதும் அந்த தெருவையே கழுவி மஞ்சள்நீர் தெளித்து புணீத படுத்தினர்.இதனை காந்தியடிகளிடம் வேதனையுடன் குறிப்பிட்ட போது காந்தியடிகள் இதை உடனேமாற்ற முடியாது மெல்ல மெல்ல அனைத்தும் மாறிவிடும் என்றார். இருப்பினும்இந்த செயலை கண்டிக்காத காந்தியடிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.அதன் பிறகு நாக்பூர் கூட்டம் சுமார் 5 லட்சம் மக்கள் மத்தியில் பேசியஅம்பேத்கார் நான் இந்துவாக பிறந்துவிட்டேன் ஆனால் மரணிக்கும் போதுஇந்துவாக மரணமடைய மாட்டேன் என்று கூறினார்.அம்பேத்காரின் இறுதி காலத்தில் அவர் நடத்தி வந்த கல்வி நிறுவனங்கள்மிகுந்த பொருளாத சிக்கலில் மாட்டிகொண்டது அவர் நேருவிடம் உதவி கேட்டபோதுஇதுபோன்ற கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தில் என்ன சாதிக்க போகிறது என்றுகூறி நிரகரித்துவிட்டார். நேருவின் இந்த பதிலால் மிகவும் வருத்தம்கொண்டார். தன்னை பார்க்க வந்த மானவ்ர் கூட்டமைபிடம் கூறியது படியுங்கள்எந்த‌ ஒரு சக்தி உங்களை தடுததாலும் கலங்காதீர்கள் என்று அறிவுறுத்தினார்.ப‌வுத்த‌ ம‌த‌த்திற்கு சுமார் 8 ல‌ட்ச‌ம் பேருட‌ம் ம‌த‌ம் மாறிய‌ உட‌ன்அவ‌ர் கூறிய‌து இனி நாம்மை யார் தீண்ட‌த்த‌காத‌வ‌ர்க‌ள் என்றுகூற்வார்க‌ள் என்றார்.இறுதி நாட்க‌ளின் அவ‌ர் கூறியது ப‌டியுங்க‌ள்,டிச‌ம்ப‌ர் 6 ம் தேதி 1956 ம் ஆண்டு தூக்க‌த்திலேயே ம‌ர‌ண‌ம‌டைந்தார்.தாழ்த்த‌ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ஒரே ஒரு ஒளிவிள‌க்கு கால‌த்திற்கும் அனைந்துபோன‌து...........

No comments: