அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 15, 2009

ஆந்திராவில் தெலுங்கானா "நவநிர்மாண் சேனா" துவக்கம்!

ஹைதராபாத்:மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமைகாகான வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி வரும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போல, தீவிர தெலுங்கானா ஆதரவாளர்கள் சிலர், தெலுங்கானா நவநிர்மாண் சேனாவைத் துவக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தெலுங்கானாவுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைய துவங்கியுள்ளன. இந்நிலையில், தெலுங்கானாவைத் தீவிரமாக ஆதரிக்கும் ஆந்திர வழக்கறிஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, தனித் தெலுங்கானாப் போராட்டத்தை இன்னும் கடுமையாக கொண்டு செல்வதற்காக, தெலுங்கானா நவநிர்மாண் சேனாவை உருவாக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தெலுங்கானாப் போராட்டத்தை தீவிரமாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம். ஜெய் தெலுங்கானா என்று சொல்வதற்கு விருப்பமில்லாதவர்கள் மகாராஷ்டிராவில் எம்.என்.எஸ்., கூறிவருவது போல, தெலுங்கானாவை விட்டு வேறு எங்காவது போகட்டும். 50 ஆண்டுகளாக இந்தப் போராட்டம் நடக்கிறது. எங்கள் குறிக்கோளை எட்டாமல் ஓயமாட்டோம்' என்று தெரிவித்தனர்.
ஆனால் ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் வழக்கறிஞர்கள், "மத்திய அரசின் முடிவு ஒருதலைப் பட்சமானது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். டி.என்.எஸ்., உருவானால் வன்முறை தலையெடுக்கும்' என்று தெரிவித்தனர்.

தெலுங்கானா கொள்கையைப் பரப்பி வரும் பேராசிரியர் என். கோதண்ட ராமன் டி.என்.எஸ்., பற்றிக் கூறுகையில் எம்.என்.எஸ்., சின் கொள்கைக்கும் தெலுங்கானா போராட்டத்துக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது. நமது போராட்டம், தெலுங்கானா உருவாவதைத் தடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம். தெலுங்கானா பகுதிகளில் வாழ்ந்து வரும் ஆந்திர, ராயலசீமா மக்களுக்கு எதிரான போராட்டமல்ல' என்று தெரிவித்தார்.
source:inneram

No comments: