அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, December 15, 2009

சரணடைய வந்த புலிகளைக் கொல்ல கோத்தபய உத்தரவிட்டார்: பொன்சேகா

சர ​ண​டைவதற்காக வந்த விடு​த​லைப் புலி​களின் தலை​வர்​களை சுட்​டுக் கொல்ல பாது​காப்​புச் செய​லர் கோத்​த​பய ராஜ​பக்ஷ உத்த​ர​விட்​டார் என அதி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்சி வேட்​பா​ள​ரா​கப் போட்​டி​யி​டும் முன்​னாள் ராணு​வத் தள​பதி சரத் பொன்​சேகா குற்​றம்​சாட்​டி​னார்.​

விடுதலைப் புலிகளுடனான சன்டையின்போது ராணு​வப் படை தள​ப​தி​யாக இருந்த சரத் பொன்​சேகா போர் முடிந்த பின்​னர் முப்​ப​டை​க​ளின் தள​ப​தி​யாக பதவி உயர்த்​தப்​பட்​டார்.​ பின்னர் ரா​ஜ​பக்ஷ சகோ​த​ரர்​க​ளு​டன் எழுந்த கருத்து வேறு​பாடு கார​ண​மாக தனது பத​வியை ராஜி​னாமா செய்த பொன்​சேகா,​​ ஜன​வரி 26-ம் தேதி நடை​பெ​றும் அதி​பர் தேர்த​லில் எதிர்க்​கட்​சி​க​ளின் பொது வேட்​பா​ள​ரா​கப் போட்​டி​யி​டு​கி​றார்.​ "சண்டே லீடர்' பத்​தி​ரி​கைக்கு ஞாயிற்​றுக்​கி​ழமை அளித்த பேட்​டி​யில் பொன்​சேகா கூறி​யுள்​ள​தா​வது:​

முல் ​லைத்​ தீவு மாவட்​டம்,​​ நந்​திக்​க​டல் பகு​தி​யில் விடு​த​லைப் புலி​க​ளின் சமா​தா​னக் குழு தலை​வர் சீவ​ரத்​தி​னம் பூலித்​தே​வன்,​​ அர​சி​யல் குழுத் தலைவர் சிங்​கம் நடே​சன்,​​ ராணுவ கமாண்​டர் ரமேஷ் ஆகி​யோர் சர​ண​டை​வ​தற்கு சில மணி நேரம் முன்​னர்,​​ தாங்​கள் முறை​யாக சர​ண​டைய உத​வு​மாறு நார்வே உள்​ளிட்ட சர்​வ​தேச சமூ​கத்​தி​டம் அவர்​கள் மூவ​ரும் வேண்​டு​கோள் விடுத்​த​னர்.​

தொ​லை​பேசி அழைப்​பு​க​ளும்,​​ இ-​மெயி​லும் தொடர்ந்து வெள்​ளம்​போல வந்​த​தை​ய​டுத்து,​​ மூவ​ரும் சர​ண​டைய இலங்கை அரசு ஒப்​புக் கொண்​டது.​ அச்​சு​றுத்​தும் வகை​யில் இல்​லா​மல்,​​ வெள்​ளைத் துணி​யு​டன் 58-வது டிவி​ஷன் படை​க​ளி​டம் சர​ண​டை​யு​மாறு அவர்​கள் கேட்​டுக் கொள்​ளப்​பட்​ட​னர்.​

எ​னி​னும்,​​ மூன்று தலை​வர்​க​ளும்,​​ அவர்​க​ளது குடும்​பத்​தி​ன​ரும் சர​ண​டை​யும்​போது அவர்​களை சுட்​டுக் கொல்ல அதி​பர் மகிந்த ராஜ​பக்ஷவின் சகோ​த​ர​ரும்,​​ பாது​காப்​புச் செய​ல​ரு​மான கோத்​த​பய ராஜ​பக்ஷ உத்​த​ர​விட்​டார்.​ அதன்​ப​டியே அவர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​னர் என்​று பொன்​சேகா கூறியுள்ளார்.

ரா ​ணு​வத் தள​ப​தி​யாக பொன்​சேகா இருந்​த​ச​ம​யத்​தில்,​​ அவ​ரது சொந்த ஊரான அம்​ப​லன்​கோ​டா​வில் ஒரு நிகழ்ச்​சி​யில் பேசும்​போது,​​ "தனது தலை​மை​யில் விடு​த​லைப் புலி​க​ளுக்கு எதி​ரான போரில் புது​மை​யான,​​ மர​பு​சா​ராத முறை​யில் ராணு​வம் போரிட்​ட​து​டன்,​​ சர​ண​டைய வந்த புலி​க​ளைக் கூட ராணு​வம் சுட்​டுக் கொன்​றது' என்று கூறி​னார்.​

பொன்​சேகா கூறியுள்ள குற்​றச்​சாட்டு குறித்து மனித உரி​மை​கள் துறை அமைச்​சர் மகிந்த சம​ர​சிங்கே கூறி​ய​தா​வது:​
இது ​போன்​ற​தொரு உத்​த​ரவை கோத்​த​பய ராஜ​பக்ஷ பிறப்​பிக்​க​வில்லை.​ பு​லி​க​ளுக்கு எதி​ராக தான் கடு​மை​யான நட​வ​டிக்கை மேற்​கொள்​வ​தில் இருந்து கட்​டுப்​ப​டுத்​தப்​பட்​ட​தாக ஜூலை 10-ல் பொன்​சேகா கூறி​யி​ருந்​தார்.​ தற்​போ​தைய அவ​ரது குற்​றச்​சாட்டு இதற்கு முரண்​பா​டாக உள்​ளது.​

பி​ர​பா​க​ர​னின் பெற்​றோர் தவிர 4 டாக்​டர்​கள்,​​ புலி​கள் தலை​வர்​கள் தயா மாஸ்​டர்,​​ சார்​லஸ் மாஸ்​டர் ஆகி​யோர் வெள்​ளைக் கொடி​யு​டன் சர​ண​டைந்​த​னர்.​ அவர்​கள் இன்​ன​மும் உயி​ரு​டன் உள்​ள​னர்.​ கெளர​வ​மா​க​வும் நடத்​தப்​ப​டு​கின்​ற​னர் என்​றார்.​

மூன்று பேர் சர​ண​டை​வது தொடர்​பாக நார்வே மத்​தி​யஸ்​தர்​கள் தன்னை அணு​க​வில்லை என அதி​ப​ரின் மற்​றொரு சகோதரரும்,​​ அர​சி​யல் ஆலோ​ச​க​ரு​மான பாசில் ராஜ​பக்ஷ கூறியுள்ளார்.

No comments: