அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 28, 2011

வீட்டு புரோக்கர்களுக்கு வருகிறது பெரிய ஆப்பு!


அருமையான ஸ்பேஸ் உள்ள 2 பெட்ரூம் வீடு ஸார்... சிட்டிக்குள்ளே ப்ரைம் லொக்கேஷனில் வாடகைக்கு கிடைக்கிறது என்று ஷாப்பிங் மால்களில், லோக்கல் நியூஸ்பேப்பர்களில் மின்னும் விளம்பரங்களைக் கண்டு ஃபோன் செய்தால் அனைத்தையும் விவரிப்பார் அந்த நபர்.
சரி வீட்டைப் பார்க்கணும் என்றால் உடனே வரச் சொல்லி அழைத்துச் சென்று காட்டுவார். ஓக்கே... பிடித்திருக்கிறது. காண்ட்ராக்ட் போடலாமே? என்று சொன்னால் வீட்டு ஓனருக்கான கூடுதல் விபரங்களைத் தரும் முன், ஒருமாத அல்லது பாதிமாத வாடகை வேணும். அது "கம்பெனி செலவுக்கு / ஆபீஸ் சார்ஜ் ஸார்!" என்பார்.

அவருக்கான அந்தப் பெருந்தொகையினை கமிஷன்(!) கொடுத்த பின்னரே அவருக்கும் அந்த வீட்டு ஓனருக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்ற விபரமே தெரியவரும். வெறுமனே ஓனரின் தொலைபேசி எண்களை மட்டுமே வைத்துக் கொண்டு உரிமையாளர் போன்று விளம்பரங்கள் செய்து பல லட்சம் சம்பாதித்துக் கொழிக்கும் பெரும் கூட்டமே உள்ளது.

இதில் பல ரகங்கள் உள்ளன. ஒரு பங்களா டைப் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, உரிமையாளருக்குத் தெரியாமல் அந்தக் கட்டிடத்தை பத்தாக கூறு போட்டு அதில் பதினைந்து குடும்பங்களை வாடகைக்கு விட்டு பணம் கொழிப்பது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், வீடு கிடைக்காத திண்டாட்டத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, வீட்டின் உரிமையாளருக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஆசாமிகள், இவ்வாறு இடைத்தரகர்களாக மாறி பணம் கொழிப்பது வளைகுடா நாடுகளில் வழக்கமாகி விட்ட ஒன்று.

தமது சம்பளத்தில் பாதிக்கு மேற்பட்ட தொகையினை வாடகைக்கே செலவிடும் வயிற்றெரிச்சலுடன் வேறு வழியில்லாமல் கிடைக்கும் ஒட்டு ஒடைசல் இடத்தில் ஒதுங்கிக் கொள்ளும் குடும்பங்கள் பற்றி ஒரு பெரிய டாக்குமெண்டரி படமே எடுக்கலாம். அத்தனை சோகங்கள் ஒளித்துள்ளன. இதில் உச்சகட்டமாக அதிக பட்ச வீட்டு வாடகை விலைகள் உள்ள சிறிய நாடான கத்தரில் பல வருடங்களாக இத்தகைய புரோக்கர்களின் ஆட்டம் இருந்து வந்தது. பொதுமக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளாக்கி வந்த இந்த ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஆம். கத்தர் அரசு இத்தகைய இடைத்தரகர்களுக்கு QR. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டமொன்றை (Law No 13 of  2011) நேற்று 26-07-2011 உருவாக்கி வெளியிட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி ஏஜண்ட்/புரோக்கர் தொழில் செய்யும் தனிநபரோ, நிறுவனமோ அரசு பதிவு பெற்றபின்னரே செய்ய இயலும். இதற்கான லைசென்ஸை அரசே முன்னின்று வழங்குகிறது.

லைசென்ஸ் உரிமம் பெற்ற ஏஜெண்ட் எந்த அளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை இதன் விண்ணப்பத்தில் காணப்படும் விதிகள் தெளிவு படுத்துகின்றன.

இந்த லைசென்ஸைப் பெற அரசிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைப் பரிசீலித்தபின்னர் 30 நாட்களுக்குள் இதற்குண்டான பதிலை அரசு தெரிவிக்கும். இந்த லைசென்ஸ் இருவருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின்னர் மீண்டும் ரினிவலுக்காக அப்ளை செய்யவேண்டும்.

லைசென்ஸ் பெற்று இதிலுள்ள விதிகளை மீறும் ஏஜெண்ட்டின் உரிமம் Articles 9, 8, 11 and 12 படி உடனடியாக ரத்து செய்யப்படும்.

இந்த லைசென்ஸ் இல்லாமல் விளம்பரம் செய்து "கம்பெனி செலவு" அல்லது "ஆபிஸ் பீஸ்" என்று சம்பாதிக்கும் இடைத் தரகர்களுக்கு உடனடியாக ஐம்பதாயிரம் ரியால்கள் (கிட்டத்தட்ட ஆறு இலட்சம் இந்திய ரூபாய்கள்) அபராதம் விதிக்கப்படும். கட்ட இயலாதவர்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இது நாள் வரை புரோக்கர்களின் கொட்டத்தில் மாட்டித் தவித்து வந்த பொதுமக்கள், அரசின் இந்த அறிவிப்பு கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: