அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

இந்துக்களே... உஷார்!

டாக்டர் பி.சத்திய நாராயணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலில், அள்ள, அள்ளக் குறையாத பொக்கிஷம் குறித்து, உலகமே பிரமித்துப் போயிருக்கிறது. "கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்பர். இந்த தெய்வம், கூடை கூடையாகக் கொட்டியது போதாதென்று, குளத்தின் மூலமாகவும் கொட்டும் போலத் தெரிகிறது.இந்த நேரத்தில், "அந்தப் புதையல் யாருக்கு சொந்தம்?' என, ஆளாளுக்கு கேள்வி எழுப்புகின்றனர். இறைவனுக்கு தான் சொந்தம் என்பதில், என்ன சந்தேகம் இவர்களுக்கு?இந்திய வரலாற்றைப் படித்தவர்கள், ஒரு விஷயத்தை மறுக்க முடியாது. தைமூர் காலத்திலிருந்து, அயல் நாட்டவர் அடிக்கடி படையெடுத்து, நம் நாட்டுக் கோவில்களைக் கொள்ளையடித்ததால், இப்போது கிடைத்துள்ள பொக்கிஷம் போல, பல்லாயிரக்கணக்கான மடங்கு நகைகளும், தங்கம், வெள்ளி நாணயங்களும் நம்மிடமிருந்து பறிபோயுள்ளன.நல்ல காலம்... விந்திய மலை என்றொரு மலை, வடக்கே அரணாக இருந்ததால், தென்னாட்டுக் கோவில்கள் தப்பித்தன. அதற்கான உதாரணமே இந்தப் பொக்கிஷம்!ஆனால், அதைவிட பெரிய ஆபத்து இப்போது, கோவில்களை எதிர்பார்த்துள்ளது. போலி மதவாதம் பேசும் அரசியல்வாதிகள், அந்த செல்வத்தை சுருட்டிக் கொள்ளும் வகையில் பேச ஆரம்பித்து விட்டனர். அதைத் தடுத்து நிறுத்துவது, ஒவ்வொரு இந்தியனின் கடமை. திருவனந்தபுரத்தில் கிடைத்துள்ள ஒவ்வொரு காசையும் கணக்கெழுதி, பாதுகாப்பாக வைப்பது அரசின் கடமை.இறைவனின் தினசரி சேவைக்குத் தேவையான நகைகள் தவிர, மற்ற நகைகளை, ஒரு பாதுகாப்பான அருங்காட்சியகத்தில், கண்ணாடிப் பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கலாம். அதற்கு கட்டணம் வசூலித்து, பொதுமக்களை அனுமதிக்கலாம்.இதனால், பொதுமக்கள் பார்வையிலும் நகைகள் இருக்கும்; பாதுகாப்புப் பணியிலும், அருங்காட்சியகப் பணியிலும் வேலை வாய்ப்புகள் பெருகும். அருங்காட்சியக வசூல் தொகையை, நாட்டு நலப்பணிகளுக்காக செலவிடலாம். முக்கியமாக, அன்னியச் செலாவணி பெருகும்.தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கோவில்களில், இதுபோன்ற புதையல் கிடைக்க வாய்ப்புள்ளது. அவற்றையும் பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும்.அந்நாளில், அயல்நாட்டவர் கொள்ளையடித்தனர்; இந்நாளில், நம் நாட்டவரே, போலி மதச்சார்பின்மை மூலம், கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கப் பார்க்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்தி, இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட வேண்டியது, இந்தியர்களின் கடமை.இந்துக்களே உஷார்!

எல்லாமே குட்டிச்சுவர்!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: "2ஜி' ஊழல் விவகாரத்தை முதலில் தொடங்கி வைத்தவராக தயாநிதி இருந்திருக்கிறார். மக்கள் பணம் இழப்புக்கு காரணமான ராஜா, கனிமொழி மற்றும் பலரை பிடித்த சி.பி.ஐ., ஊழலுக்கு தொடக்க விழா நடத்திய தயாநிதியை இதுநாள் வரை விட்டு வைத்தது ஏன்?கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரரான மாஜி மந்திரி அருண் ÷ஷாரியை சி.பி.ஐ., விசாரித்தது. "தேவைப்படும் போதெல்லாம், சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன்' என்றார் அருண் ÷ஷாரி. அவர் மனிதரா? இல்லை, மன்மோகன் சிங், சோனியா, கபில் சிபல், ராஜா, கனிமொழி, தயாநிதி மனிதர்களா?குடும்பத் தலைவன் சரியில்லை எனில், குடும்பம் குட்டிச்சுவராகிவிடும். அதுபோல், கட்சித் தலைவனும், ஆட்சித் தலைவனும் சரியில்லை எனில், கட்சியும், நாடும் குட்டிச்சுவராகி விடும். இதுதான் இங்கு நடக்கிறது.நீண்ட கால பயனுக்கு... : ரா.பாலாஜி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: "2011 - 12ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, 23 ஆயிரத்து, 535 கோடி ரூபாய்' என, மத்திய திட்டக் கமிஷன் இறுதி செய்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதாவும், திருப்தி தெரிவித்திருப்பது, மத்திய - மாநில அரசுகளிடையே, சுமுக புரிந்துணர்வு உருவாகி வருவது, தமிழக நலனுக்கு நல்லது. கேட்ட நிதியை விட, 535 கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கி, தன் நட்பான அணுகுமுறையை, மத்திய அரசு காட்டியுள்ளது.தமிழகத்தில், சென்ற ஆட்சி விட்டுச் சென்ற தொடர் கடன் சுமை, ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் இழப்பை விட, 50 சதவீதமே குறைவு. இதில், மின்வாரிய இழப்பு மட்டுமே, 45 ஆயிரம் கோடி ரூபாய் என்பது, ஆற்காடு வீராசாமியின் நிர்வாகச் சீர்கேட்டை உணர்த்துகிறது.இதுபற்றி, தன் முந்தைய டில்லி பயணத்தின் போது, பிரதமரைச் சந்தித்து, இதை மானியமாக அளித்து, தமிழகத்தை கடன் சுமையிலிருந்து மீட்டு, புனர்வாழ்வு அளிக்க ஜெயலலிதா மனு அளித்துள்ளார். இப்போது, திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடமும் கூறி, அவரின் ஒத்துழைப்பையும் நாடியிருக்கிறார். இதுகுறித்து, பிரதமருடன் நேரில் விவாதித்து, தமிழகம் கூடுதல் உதவி பெற, திட்ட கமிஷன் ஒத்துழைக்க வேண்டும்.அதுபோல், தமிழக அரசும், இந்த கூடுதல் நிதியை இலவசங்களுக்கு வீணாக்காமல், மக்கள் நலத்திட்டப் பணிகளில், குறிப்பாக கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதிக்கு பயன்படுத்தினால், நீண்ட கால பயன் விளையும்.

தெய்வம் தந்த தீர்ப்பு! எம்.வரலட்சுமி, முகப்பேர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே; சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார், சமயம் பார்த்து பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறார்' - இது ஒரு பழைய சினிமா பாடலாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது தான் சிறப்பு.தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம் போல், ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தோர் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம், ஊடகங்கள் மூலமாகத் தானே, பாமர மக்கள் தெரிந்துகொள்ள முடிகிறது.தவறு நடக்கும்போது, அதை மக்கள் அறியும்படி செய்வது தானே நியாயம். தங்கள் ஊடகத்தின் பெயரிலும், எத்தனை ஊழல்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் மறந்துவிட்டு, "ஊடகங்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்' எனச் சொல்வது, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து, கல்லெறிவது போல் உள்ளது."நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா, தினம் நாடகமாடும் கலைஞனடா' என்ற பாடல் வரிகளைப் போல, தெய்வம் தந்த தீர்ப்பு இது.

சொல்கிறார்கள்!!!

லாபகரமான தொழில் விவசாயம்!அமெரிக்காவில், ஐ.டி., வேலையை உதறிவிட்டு, விவசாயிகளுக்காக உதவும் வெங்கட் சுப்ரமணியம்: நான் ஐ.ஐ.டி.,யில் ஆர்கிடெக் படித்து விட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காய்கறிக்கும், எங்கள் பரம்பரைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெளிநாட்டுக்காரனுக்கு கூலியா இருக்கிறத விட, நம் நாட்டில், யாருமே கவனிக்காத துறையில் சாதிக்கணும்ங்கிற எண்ணத்தில், என் வேலையை விட்டு, சென்னையில் காய்கறி வியாபாரத்தை தொடங்கினேன்.தொடக்கத்தில் சில விவசாயிகளை சந்தித்து, அவர்கள் மூலம் பொருட்களை வாங்கி, வீட்டருகில் உள்ள சேரி மக்களுக்கு, குறைந்த விலைக்கு விற்றேன். பின், அவர்களின் உதவியுடன் விற்பனை செய்தேன். கிடைக்கும் லாபத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இது நல்ல பலன் தரவே, மொபைல் காய்கறி கடைகளை உருவாக்கினேன்.அதாவது, காய்கறிகளை மொத்தமாக வேனில் ஏற்றி, கடற்கரையில் சென்று விற்பது. இதற்கும் நல்ல பலன் கிடைத்தது.சென்னையில், காய்கறிகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு நாங்கள், சந்தை விலைக்கே விற்பனை செய்கிறோம்.காய்கறி குறித்து டேடா பேஸ் உருவாக்கியுள்ளோம். இதன் அடிப்படையில், என்ன விலை, எங்கு விளைகிறது, எப்போது எந்த சீசன், யார் விளைவிக்கின்றனர் போன்ற தகவல்கள், விரல் நுனியில் உள்ளன. மேலும், விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளேன். படித்தவர்கள் விவசாயத்தை கையில் எடுத்தால், இதை விட லாபகரமான தொழில் வேறு இல்லை.கடின உழைப்புக்கு தயாராக இருந்தால், எதிலும் சாதித்து விடலாம்.

சிலி அரசாங்கம் மீது சுரங்க தொழிலாளர்கள் வழக்கு!

சிலி: வடக்கு சிலியில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 31 சுரங்க தொழிலாளர்கள் 69 நாட்களாக நிலத்தடியில் சிக்கி  போராடிவருகின்றனர். இதற்கு அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என அரசாங்கத்தின் மீது  தொழிலாளர்கள்  வழக்கு தொடுத்து வருகின்றனர். இது பற்றி சுரங்க தொழிலாளி கூறுகையில் என்னுடன் 31 தொழிலாளர்களும்  கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர் மேலும் அவர்களது குடும்பங்களும் சோகத்தால் வாடிவருவதாகவும் தெரிவித்தார். 33  சுரங்க தொழிலாளர்கள் வடக்கு சிலியில் உள்ள தாமிர சுரங்கத்தில் 2010ம் ஆண்டு அக்டோபர்13 லிருந்து சிக்கி  கொண்டிருந்தனர். 69 நாட்களுக்கு  பிறகு மேற்கொண்ட மீட்பு பணிக்கு பின் 700 மீட்டர் பள்ளத்திலிருந்து பாதுகாப்பாக  மீட்கபட்டனர். சுரங்க தொழிலாளர்கள் ஒவ்வொவருக்கும் 540000 அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக தரவேண்டும்  எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் வரிவிதிப்பால் விலை உயர்வு: சிகரட் முதல் மொபைல் வரை இனி கையை சுடும்!

தமிழக அரசு பல பொருட்களின் மீதான வரியை அதிகரித்ததை தொடர்ந்து, பீடி, சிகரட், சமையல் எண்ணெய் மற்றும் மொபைல் போன்றவை விலை உயர தயாராகி விட்டன. சிகரட்டை பொறுத்தவரை கேட்கவே வேண்டாம். அறிவிப்பு வருகிறது என்றாலே, ஒன்று சிகரட்கள் எல்லாம் பதுக்கப்பட்டு விடும்; இல்லாவிட்டால், பகிரங்கமாக விலையை ஏற்றி விடுவார்கள். இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சில பிராண்ட் சிகரட்கள் கிடைக்கவில்லை.தமிழக அரசு, தன் இலவச திட்டங்களுக்காகவும், நிதி நெருக்கடியை போக்கிக்கொள்ளவும், நேற்றுமுன்தினம் இரவில் திடீரென வரி உயர்வை அறிவித்தது. புதிய அரசு பதவியேற்றதும் முழு பட்ஜெட் போட வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த மாதம் அதற்காக சட்டப்பேரவை கூடுகிறது. இந்த நிலையில், திடீரென பல பொருட்களின் விலை அதிகரிக்க வகை செய்யும் வரி அதிகரிப்பு, பலரையும் நேற்று காலையிலேயே பதற வைத்தது.சமையல் எண்ணெய் விலை!வரி உயர்வு எதிரொலியாக, சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ. 5 வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சமையல் எண்ணெய் விற்பனையை பொறுத்தவரையில், ஆண்டுக்கு ரூ. 500 கோடி வரை வரி விலக்கு இருந்தது. இதில் ஏராளமான வரி ஏய்ப்பு என்று சொல்லி, ரூ. 500 கோடி வரையிலான விற்பனை வரம்பை ரூ. 5 கோடியாக குறைத்து அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதன்மூலம் ஆண்டிற்கு ரூ. 5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் விலை ரூ. 2லிருந்து ரூ. 5 வரை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மொத்த மார்க்கெட்டில் பாமாயில் (பாக்கெட் 900 மி.லி.) ரூ. 54க்கு விற்றது ரூ. 56க்கு விற்பனை செய்யப்பட்டது. சன் பிளவர் ஆயில் ரூ. 76லிருந்து ரூ. 78, கடலை எண்ணெய் ரீபைண்ட் ரூ. 95லிருந்து 97, தேங்காய் எண்ணெய் ரூ. 130லிருந்து ரூ. 133, தேங்காய் எண்ணெய் (2ம் ரகம்) ரூ.100லிருந்து ரூ. 103, அக்மார்க் நல்லெண்ணெய் ஸி130லிருந்து ரூ. 133, சாதா நல்லெண்ணெய் ரூ. 80லிருந்து ரூ. 85, வனஸ்பதி ரூ. 68லிருந்து ரூ. 70க்கும் விற்பனை செய்யப்பட்டது.
எடை போட்டு விற்பனை செய்யப்படும் எண்ணெய் வகைகள் ரூ. 5 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேற்று முன்தினம் பாமாயில்(1 கிலோ) ரூ. 58 என்றிருந்தது ரூ. 60 ஆனது. சன் பிளவர் ஆயில் ரூ. 73லிருந்து ரூ. 75, கடலை எண்ணெய் ரூ. 90லிருந்து ரூ. 93, அக்மார்க் நல்லெண்ணெய் ரூ. 125லிருந்து ரூ. 130, சாதா நல்லெண்ணெய் ரூ. 85லிருந்து ரூ. 90, தேங்காய் எண்ணெய்(2ம் ரகம்) ரூ. 100லிருந்து ரூ. 105, டால்டா ரூ.68லிருந்து ரூ. 70க்கும் விற்கப்பட்டது.துணிமணிகள் விலை உயர்ந்ததுதமிழக அரசு தற்போது ஜவுளித்துறையில் 5% வரிவிதிப்பு அறிவித்துள்ளது. இதனால் ரெடிமேட் உள்ளிட்ட ஜவுளிகளின் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஜவுளி வியாபரிகள் கூறுகையில், ‘’இது எங்களை கவலையடைச் செய்துள்ளது. கருவிகள், நூல் விலை உள்ளிட்டவைகளால் உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும். இதனால் ஜவுளி கடைகளில் ஆடைகளின் விலையும் கணிசமாக உயரும்(ஒரு சதவீதம்). விற்பனையும் கணிசமாக குறையும். வாடிக்கையாளர்களும் சிரமப்படுவார்கள். இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கைத்தறித் தொழில் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்’’ என்று கூறினர்.விற்பனை நிறுத்தம்மொத்த வியாபாரி கமால் பாட்ஷா கூறுகையில், ‘‘புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே அமலில் இருக்கும் 12.5 சதவீத வாட் வரியின் படி எம்ஆர்பி ரேட் அச்சடிக்கப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரே நாளில் வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஸ்டாக் பொருட்களை மட்டும் அதே விலையில் விற்பனை செய்ய அரசுடன் இந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த காரணத்தால் தமிழகத்தில் விற்பனையை நிறுத்தியுள்ளது’’ என்றார்.மொபைல் ரூ. 500 கூடுது
தமிழக அரசு செல்போனுக்கு 4 சதவீதமாக இருந்த வாட் வரியை 14.5 சதவீதமாக உயர்த்தியதால் செல்போன் விலை ரூ. 500 வரையும், டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் விலை ரூ. 200 வரையும் உயருகிறது.  நேற்று முன்தினம் வரை ரூ. 5ஆயிரம் வரை விற்பனையாகி வந்த செல்போன் ஒன்றில் விலை 14.5 சதவீதம் வாட் வரி காரணமாக நேற்று ரூ. 5,550க்கு விற்கப்பட்டது. ரூ. 2000க்கு விற்கப்பட்ட செல்போன் நேற்று  ரூ. 2,210 ஆனது. இதேபோன்று கம்ப்யூட்டர் விலையும் ரூ. 1000க்கும் மேல் உயருகிறது.டி.வி, எல்சிடி டி.வி ஆகிய வீட்டு உபயோகப்பொருட்களுக்கு 4 சதவீதமான இருந்த வாட் வரி நேற்று முதல் 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நேற்று முன்தினம் ரூ. 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பிரிட்ஜ் நேற்று ரூ. 20,200 ஆக உயர்ந்தது. ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 20 வாட் வரி அதிகரிக்கும். அதேபோன்று மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஸ்டவ், அயன்பாக்ஸ், குக்கர், ஸ்டெப்லைசர் ஆகிய பொருட்கள் மீதான வாட் வரி 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயாந்துள்ளது.
பத்திரப்பதிவு கட்டணம் அதிகரிப்புஅசையா சொத்துக்களை பதிவு செய்ய தற்போது ஒரு லட்சத்துக்கு ரூ. 9 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது 8 சதவீதம் ஸ்டாம்ப் பேப்பர் வாங்குவதற்கும், 1 சதவீதம் அரசுக்கு கட்டணமாகவும் செலுத்தப்பட்டு வந்தது. அதன்படி 10 லட்சம் ரூபாய்க்கு காலிமனை வாங்கியவர்கள், அந்த இடத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் வரை பத்திர பதிவு கட்டணமாக செலுத்தி வந்தனர். தற்போது, இந்த கட்டணம் உயரும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வரியை 1% கூட்டினாலே ரூ. 10 லட்சத்திற்கு கூடுதலாக ரூ. 10 ஆயிரம் வரை பதிவு கட்டணம் அதிகரிக்கும். எத்தனை சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு அறிவிக்கவில்லை.பகோடா விலை ஏறுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதையும், சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டு ஓட்டல் நிர்வாகத்தினர் உணவு பொருட்கள் விலையை சற்று அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.  ஓட்டல் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி இதற்கான முடிவு அறிவிக்கப்படும்‘ என்று ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அனேகமாக வடை, பஜ்ஜி, சம்சா, பக்கோடா போன்றவற்றின் விலை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மண்ணில் புதைந்த ஆலயம்!!

சாத்தான்குளம் அருகே உள்ளது மணல் மாதா ஆலயம். 200 வருடங்களுக்கு முன்னால் மணலில் புதைந்து கிடந்த இந்த ஆலயத்தின் வரலாறு மிகவும் சுவ£ரஸ்யமானது. மான வீரவளநாடு என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியை கி.பி. முதலாம் நூற்றாண்டில் கந்தப்பராஜா என்னும் பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அவன் குடும்பத்தில் உள்ளவர்களை பேய் பிடித்து ஆட்டியது. இதை ஏசுவின் சீடர் தோமையார் வந்து குணப்படுத்தினார். அதன் பின் அவரது ஆலோசனைப்படி இந்த இடத்தில் கந்தப்பராஜா கிறிஸ்தவ மதத்தை தழுவினார். தொடர்ந்து ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்த ஆலயத்துக்கு 1548ம் ஆண்டு வந்த சவேரியார், இறந்த சிறுவனை உயிர்ப்பித்தார். அதன் பின் வீண்பழி சுமத்தப்பட்டு அரசால் தண்டனை விதிக்கப்பட்ட சேசு மரியாள் என்னும் பெண் இட்ட சாபத்தால் இந்த ஊர் அழிந்தது. மணல் மூடி ஆலயமும் அழிந்து போனது. பின்னர் 1799ம் ஆண்டு இந்தப் பகுதியில் பால் கொண்டு சென்ற சிறுவனின் காலில் சிலுவை தட்டுப் பட, மண்ணில் புதைந்த ஆலயம் வெளியில் வந்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது 200 ஆண்டுகளுக்கு முன் வெளிப்பட்ட சிலுவை மற்றும் இப்போதுள்ள மணல் மாதா ஆலயம்.

ஜிசாட்-12 செயற்கை கோளுடன் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி-சி17

ஸ்ரீஹரிகோட்டா : ஜிசாட்-12 தகவல் தொடர்பு செயற்கை கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-12 என்ற செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். 1410 கிலோ எடையுள்ள  இந்த செயற்கை கோளில் 12 இஎக்ஸ்டி-சி பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4.48 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

நெல் வயல்களில் "பரம்பு' அடிக்கும் காளைகள் : நவீன யுகத்திலும் மாறாத தொழில் நுட்பம்

கம்பம் : எத்தனை நவீன கருவிகளும், கண்டுபிடிப்புகளும் வந்தாலும், நெல் வயலில், பரம்பு அடிப்பதற்கு காளை மாடுகள் பூட்டிய கருவி தான், இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கில், அதிகளவில் நெல் சாகுபடி நடக்கிறது. விவசாயத்தில், இன்று பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. களை எடுப்பதற்கும், நாற்று நடவு செய்வதற்கும், அறுவடைக்கும் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன.
நெல் விவசாயத்தில், வயலில் உழவு முடிந்த பின், நாற்று நடுவதற்கு முன்பாக வயலை சமப்படுத்த, "பரம்பு' அடிப்பர். அதற்கு காளை மாடுகள் பூட்டி, பரம்பு அடிக்கின்றனர். டிராக்டர் மற்றும் அதற்குரிய கருவிகளில், இதை செய்ய முடியாது என, விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், "கம்பம் பள்ளத்தாக்கில் வயல்கள் சிறிய அளவுகளில் உள்ளன. நவீன கருவிகளில் பரம்பு அடித்தால், சரியாக இருக்காது. காளை மாடுகள் பூட்டி பரம்பு அடித்தால் தான், திருப்தியாக இருக்கும்' என்றனர். விஞ்ஞானிகள், எத்தனை தான் கருவிகளை கண்டுபிடித்து கொடுத்தாலும், பாரம்பரிய முறைகளையும் விவசாயிகள் புழக்கத்தில் வைத்துள்ளனர் என்பதற்கு, இது ஒரு எடுத்துக்காட்டு.

பாபா ராம்தேவ்மீது கடத்தல் வழக்குப்பதிவு!

ஊழலுக்கு எதிராக 11 நாட்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய யோகா சாமியார் ராம்தேவ் டிரக்கர் மற்றும் ஓட்டுனரைக் கடத்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ண ஆச்சாரி மற்றும் 4 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். விஸ்வகர்மா காவல்நிலையத்தில் சிட்டி நீதிமன்றப் பரிந்துரைப்படி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டிரான்ஸ்போர்ட்உரிமையாளர் பஜ்ரங்சிங் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் "எங்களின் ஆயில் டேங்கர் லாரி ஒன்று கடந்த ஜூன்மாதம் ஒரு ஹர்பல் கம்பெனிக்குக் கடுகு எண்ணெய் கொண்டு (அரியானாவில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஜபல்பூருக்கு) செல்வதற்காக வாடகை பேசி எடுத்து செல்லப்பட்டது.

லாரியை வாடகைக்கு எடுத்தவர்கள் தங்களை ராம்தேவின் ஆட்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்தலாரி இன்னும் திரும்பவில்லை. இதனை ஒட்டி சென்ற ஓட்டுனர்ர் ஹனுமன் என்பவரும் இன்னும் குறித்த காலக்கெடுவுக்குள் ஊர் திரும்பவில்லை.போனில் தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கிறது..

எனவே ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது எனக்கு சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து ஓட்டுனரையும்,வாகனத்தையும் மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்குப் பின்னர் உண்மைநிலை தெரிய வரும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெர்வித்தார்.

தமிழக அரசின் கடும் வரிவிதிப்பால் திடீர் பாதிப்பு : வாட்டுது வாட் படுத்தது பிசினஸ்!

சென்னை:  தமிழக அரசு வாட் வரியை உயர்த்தியதன் எதிரொலியாக செல்போன், டி.வி. மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை குறைந்து மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு கடந்த 12ம்தேதி முதல் அதிரடியாக வாட் வரியை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி இதுவரை 4 சதவீத வாட் வரியாக இருந்த மருந்து, செங்கல், இரும்பு, வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்கள், அலுமினியம், மூங்கில், ஹெல்மெட் ஆகிய பொருட்களின் மீதான வரி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதேபோன்று 12.5 சதவீதமாக இருந்த உணவு பொருட்கள், வாஷிங் மெஷின், ஏ.சி., மின்விசிறி, ஐஸ்கிரீம், மர சாமான்கள், கிரானைட், மார்பிள், சிமென்ட், பசை பொருட்கள், சாக்லெட், அழக சாதன பொருட்கள், எலக்ட்ரிக் பொருள்கள், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவை மீது வாட் வரி 14.5 சதவீதமாகவும், செல்போன், எல்சிடி டி.வி., ஐபோன், கம்ப்யூட்டர், புகையிலை பொருட்கள் மீதான வாட் வரி 4 சதவீதத்தில் இருந்து பல மடங்கு உயர்ந்து 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.4000 கோடி வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அரசுக்கு வேண்டுமானால் பலகோடி வருமானம் கிடைக்கலாம். ஆனால் இந்த சுமை முழுவதும் மக்கள் தலையில்தான் விழும் என்கிறார்கள் வீட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள். அரசு அறிவித்தபடி கடந்த 12ம் தேதி முதல் அனைத்து பொருட்கள் மீதான வரியும் உயர்த்தப்பட்டு விட்டது. அதிகப்பட்சமாக செல்போன், கம்ப்யூட்டர், எல்சிடி டி.வி. மீதான வாட் வரி 10.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரணமாக ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட செல்போன் தற்போது ரூ.5,550க்கு விற்கும் நிலைக்கு கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக செல்போன் விலையும், எல்சிடி டி.வி. விலையும் மந்தமாக உள்ளதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.

மொபைல் விற்பனை சரிவு இதுகுறித்து அண்ணாசாலையைச் சேர்ந்த பிரபல செல்போன் மொத்த விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும்போது, “இந்தியாவிலேயே அதிகளவில் செல்போன் விற்பனை செய்யும் மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் மட்டும் 5 கோடி செல்போன்கள் உள்ளது. மொத்த மக்கள் தொகையை காட்டிலும் (மக்கள் தொகை 7.25 கோடி) இது கொஞ்சம் குறைவுதான். பலர் செல்போன் விரும்பி வாங்குகிறார்கள் என்பதால் அரசு குறி வைத்து செல்போன் மீது இருந்த 4 சதவீத வாட் வரியை 14.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் செல்போன் விலை ஸி 200 முதல் ஸி 1,500 வரை அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக செல்போன் விற்பனை குறைந்துள்ளது“ என்றார்.

அதேபோன்று எல்சிடி டி.வி. மீதான விற்பனை வரியும் 10.5 சதவீதம் கூட்டியுள்ளதால் ஒரு டி.வி.யின் விலை ஸி 3 ஆயிரத்துக்கும் அதிகமாக விலை கூடியுள்ளது. இதனால் டி.வி. விற்பனையும் மந்தமாக உள்ளதாக வும், பிரிட்ஜ், வாஷின் மெஷின், ஏ.சி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் திடீர் விலை உயர்வால் வியாபாரிகள் பலகோடி பொருட்களை கொள்முதல் செய்து விட்டு, விற்க முடியாமல் திணறி வருகிறார்கள். எண்ணெய் வாங்குவோர் சரிவு தமிழகத்தில் சமையல் எண்ணெய் விற்பனையை பொறுத்தவரையில், ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை வரி விலக்கு இருந்தது. இதில் ஏராளமான வரி ஏய்ப்பு என்று சொல்லி, ஸி 500 கோடி வரையிலான விற்பனை வரம்பை ரூ.5 கோடியாக குறைத்து அரசு அறிவித்தது. இதன் மூலம் ஆண்டிற்கு ஸி 5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதனால் விலை ரூ.5 வரை உயர்ந்துள்ளது. அதாவது, பாமாயில் எடைபோட்டு விற்பனை செய்வது ஒரு கிலோ ஸி 56லிருந்து ரூ.62க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.120லிருந்து 
ஸி 125க்கும், 2ம் ரகம் ஸி 100லிருந்து 105க்கும், அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.130லிருந்து ரூ.135க்கும், 2ம் ரகம் ரூ.85லிருந்து ரூ.90க்கும், கடலை எண்ணெய் ரூ.90லிருந்து ரூ.95க்கும் உயர்ந்தது. பாக்கெட்டில் விற்கப்படும் எண்ணெய்கள் ரூ.2 முதல் 3 வரை அதிகரித்தது. இதனால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் எண்ணெய் கொண்டு சமையல் செய்வதை கணிசமாக குறைக்க தொடங்கியுள்ளனர். பொருட்களை சுட்டு சாப்பிட்டு ஆதிக்காலத்திற்கே திரும்ப செல்ல வேண்டியது உள்ளதே என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர். 

இது குறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது: எண்ணெய் விலை உயர்வினால் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. 1,000 வியாபாரிகள் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். தற்போது, ரூ.5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்வோர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால், எண்ணெய் வியாபாரிகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எண்ணெய் வருமானத்தை கொண்டே அரசு தற்போது அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செய்து முடித்து விடலாம். ‘திடீரென்று‘ விலை அதிகரித்ததால் கணக்கு வழக்குகளை சரிசெய்வது குழப்பமாக உள்ளது.

பத்த வைக்காமலே சுடும்

மொத்த வியாபாரி கமால் பாட்ஷா கூறுகையில்,‘‘கூடுதல் வருமானத்துக்காக தமிழக அரசு வரிகளை ஒரே நாளில் அமல்படுத்த உத்தரவிட்டது. இதனால் புகையிலை பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதை திடீரென நிறுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனங்கள் அரசு விதித்த வரிகளை தாங்களே செலுத்த முடிவு செய்துள்ளது. பில்களில் வரிகளை காட்டாமல் ஒரே பில்லாக மொத்த வியாபாரிகளுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் உயர்த்தப்பட்ட வரியால் அந்நிறுவனங்கள் நாடு முழுவதும் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலையை ஒட்டு மொத்தமாக உயர்த்த வாய்ப்புள்ளது‘‘ என்றார்.

பேன்ட், சட்டை, சேலைக்கு பட்ஜெட்டில் ‘துண்டு’ விழும் 

ஜவுளி துறையில் வரியை 5 சதவீதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால், நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக துணிகளின் விலையையும் 5 சதவீதம் கடைக்காரர்கள் உயர்த்திவிட்டனர். பேன்ட், சர்ட், சேலை, வேட்டி போன்ற துணிகளின் விலையும் உயர்ந்துள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பேன்ட், சட்டை, வேட்டி, சேலை, சுரிதார் என்று வாங்கும் போது மாத பட்ஜெட்டில் துண்டு விழும் என்பது உறுதி. இது குறித்து துணிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு விதித்துள்ள வாட் வரி தேவையில்லாத ஒன்று. இதனால், பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான். தற்போது எங்கள் கடையில் துணியின் விலையை 5 சதவீதம் உயர்த்தி உள்ளோம். உதாரணத்திற்கு ஒரு சட்டையின் விலை ரூ.100 என்றால், அதை ஸி105க்கு விற்பனை செய்து வருகிறோம். படிக்காத பாமர மக்களுக்கு இந்த விலை உயர்வு குறித்து எதுவும் தெரியவில்லை. ஒரு சிலர் மட்டும் விலை உயர்வு குறித்து கேட்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் பாதிப்பு பெரும் அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

‘வாட்’ என்றால்..

ஒரு பொருள் உற்பத்தியாகும்போது பல கட்டங்களில் (உதாரணமாக பருத்தியில் இருந்து சட்டையாக மாறுவது வரை) வரி விதிப்புக்கு உள்ளாகிறது. இதனால், பொருளின் உற்பத்தி விலை கூடுகிறது. நுகர்வோருக்கு அந்த பொருள் அதிக விலையில் விற்கப்படுகிறது. இந்த முறையால் நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மதிப்பு கூட்டு வரி (வாட்) என்பதும் விற்பனை வரிதான். ஆனால், பல கட்டங்களில் ஒரு பொருள் கைமாறும்போது கூடுகின்ற விலையின் அடிப்படையில் வாட் விதிக்கப்படுகிறது. விற்பனையாளர் செலுத்திய வரிக்கான செலவு குறிப்பிட்ட பொருளின் விலையிலேயே அடங்கி இருக்கும். இந்த வரியை நுகர்வோரே ஏற்க வேண்டும். விற்பனையாளர், தான் செலுத்திய வரியை நுகர்வோர் தலையில் கட்டி விடுகிறார். எனவே, மதிப்பு கூட்டு வரியும் ஒரு மறைமுக வரிதான். இப்போது ஒவ்வொரு பொருளுக்கும் தமிழகத்தில் வாட் வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பவருக்கு பத்து மடங்கு ஏற்றம்

அகில இந்திய நிலத்தரகர்கள் நலச்சங்க அகில இந்திய தலைவர் ஏ.ஹென்றி கூறியதாவது: தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பால் பவர் பத்திரம் கட்டணம் ரூ.50லிருந்து பல மடங்கு, அதாவது, 200 மடங்கு அதிகரித்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குத்தகை பத்திரத்திற்கு ரூ.5000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சொத்தை பவர் வழங்குவதற்கு இதுவரை பதிவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது. 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.1000மாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநபர்களுக்கு பவர் வழங்குவதற்கு இது வரை ரூ.1000 பதிவு கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்தது, ரூ.10 ஆயிரமாகவும், உரிமை ஆவணங்கள் வைப்பு உடன்படிக்கை ஆவணம் (டெபாசிட் ஆப் டைட்டில்ஸ்) பதிவு கட்டணம் ரூ.1000லிருந்து ஸி 5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். அரசு இலவசம் இலவசம் என்று அறிவித்து பொதுமக்களை எதிர்க்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் முக்கிய அணைகளை தகர்க்கதிட்டம்: பயிற்சியில் பயங்கரவாதிகள் ; உளவுத்துறை திடுக்

புதுடில்லி: இந்தியாவில் வடமாநில பகுதியில் உள்ள முக்கிய அணைகளை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாஉத்வா பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட மாநில போலீசார் எச்சரிக்கையாக இருக்குமாறும் இன்டலிஜென்ஸ் படையினர் அலர்ட் செய்தி அனுப்பியுள்ளனர்.
நமது உளவுபடை அதிகாரிகளக்கு கிடைத்த தகவல் விவரம் வருமாறு: இந்தியாவில் பஞ்சாப், அரியானா, மற்றும் இமாசல பிரதேசத்தில் <உள்ள அணைகளை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். வரும் மழைக்கால நேரத்தில் அணையில் நீர் பெருக்கி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த தாக்குதலை நடத்த முயற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பஞ்சாப், அரியானா, சண்டிகார் மற்றும் டில்லி பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி முடியும். மேலும் இது தொடர்பான செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்றும் பயங்கரவாதிகள் மனதளவில் தயாராகி வருகின்றனர். இவர்கள் இதற்கென அணையில் சுவர் உயரம் அறிந்தும், மற்றும் தண்ணீருக்குள் நீச்சல் அடித்து செல்லும் விஷயத்தில் முழு அளவில் பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. 

முக்கிய குறியாக பக்ரா நங்கல் அணை: இதில் பஞ்சாப்- இமாசல பிரதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்ராநங்கல் அணையை தகர்ப்பது பயங்கரவாதிகளின் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனராம். காரணம் இந்தியாவின் சட்லஜ் நதிப்பகுதியில் உள்ள இந்த அணை இந்தியாவில் மிகப்பெரியது.இந்த அணை இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் ஜவஹர்லால் நேரு முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஆயிரத்து 300 மில்லியன் கியூபிக் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதற்கு சேதம் ஏற்படுத்தும் நேரத்தில் பெரும் அளவில் நாசத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் விவசாய பணிகளை சீரழிக்க முடியும் என்றும் பயங்கரவாதிகள் கருதியுள்ளனர். 

இதனால் மேற்கூறிய 3 மாநில போலீசார் உயர்ந்தபட்ச பாதுகாப்பில் அலர்ட்டாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா- பாகிஸ்தான் நீர் பகிர்வு தொடர்பாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத இந்நேரத்தில் அணை தகர்ப்பு திட்டம் , பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் சுமையை தந்திருக்கிறது.